Homeஜோதிட குறிப்புகள்12வீடுகளில் மாந்தி இருக்கும் பலன்கள்

12வீடுகளில் மாந்தி இருக்கும் பலன்கள்

மாந்தி

மாந்தி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோயினால் அவதிப்படும், சிற்றின்ப ஆசையும், பாவச் செயல்கள் செய்வதும், வஞ்சகமும், துர்நடத்தையும், துர்பாக்கியம் அடைய பெற்றவராக இருப்பார்.

மாந்தி(manthi) இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பார்வையில் படமாட்டார்.இழிவான ,தாழ்ந்த, வெட்கங்கெட்ட செயல்களை செய்வார், வறுமையும் இதனால் உண்டாகும். களங்கம் ஏற்படுத்துவதில் வல்லவராக இருப்பார்.

மாந்தி மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வசீகரத் தோற்றமுடையவர். கிராமத்து தலைவராகவும், நல்ல குணங்களை நேசிப்பவராகவும், அரசால் கௌரவிக்கப்டுகிற வராகவும் இருப்பார்.

மாந்தி(manthi) நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நோயாளியாகவும், மகிழ்ச்சி இல்லாதவராகவும், பாவச்செயல் புரிபவராகவும், வாயுக் கோளாறுகளும், பித்தநீர் சம்பந்தமான நோய்களாலும் அவதிப்படுவார்.

மாந்தி ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் போற்றத்தக்க மனிதரல்லாமலும், ஏழையாயும்,குறைந்த ஆயுளை உடையவரும்,  கீழ்த்தரமான இழிவான செயல்களில் ஈடுபடுபவராகவும் இருப்பார். நபும்ஸகமானவராக அல்லது ஆண்மையற்றவராக இருப்பார். மனைவியினால் அடக்குபவராகவும், நாஸ்திகம் பேசிக் கொண்டிருப்பவராகவும் இருப்பார்

மாந்தி(manthi) ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் எதிரிகள் இல்லாமல் இருப்பார். வலுவான தேகத்தை உடையவர், சிறந்த வைபவம், மனைவியால் விரும்பப்படுபவர். அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்.  நல்ல நண்பர்களாகவும் எல்லோருக்கும் உதவி புரிபவராகவும் இருப்பார்.

மாந்தி ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய மனைவியை அடக்கி வைத்தலும், பாவச்செயல்கள் புரிதலும், அடுத்த பெண்மணிகளை நாடுதலும்,தேர்ந்தெடுத்தாலும், நண்பர்கள் இல்லாமலும், மனைவியின் சொத்தில் உயிர்வாழ்வதுமாக இருப்பார்.

மாந்தி எட்டாம்(manthi) வீட்டில் இருந்தால் ஜாதகர் பசியாலும், இழிவான செயல்கள் உடனும், குரூர நடத்தை உள்ளவராகவும் இருப்பார். அதிகம் முன் கோபம் கொண்டவராகவும், மனிதநேயமற்றவராகவும் ஏழையாகவும், நல்ல குணங்களை பறிகொடுத்த வராகவும் இருப்பார்.

மாந்தி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் கடுமையானசோதனைக்குள்ளாவார், உடல் இளைக்க பட்டவராக இருப்பர்.கெட்ட செயல்களை நிறைவேற்றுபவராகவும், கொடூரமானவராகவும், சோம்பேறியாகவும், கோள் சொல்பவராகவும் இருப்பார்.

மாந்தி

மாந்தி 10ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மகிழ்ச்சிகளைஅனுபவித்து இருப்பார். அனேக விதமான செயல்களின் மூலமாக கடவுளை அதிகம் நேசிப்பவர். நெருப்பையும், தியானமும், மதத்தையும் பயிற்சி செய்பவராகவும் இருப்பார்.

மாந்தி 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் பல பெண்களை அனுபவிப்பார். மக்களுக்கு தலைவராக இருப்பார். உறவுகளுக்கு உதவுவார், சுருங்கச் சொன்னால் ஒரு சக்கரவர்த்தியாக இருப்பார்

மாந்தி 12ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் இழிவான செயல்களையும், பாவச் செயல்களையும், குறைவான அங்கங்களையும், துரதிர்ஷ்டம் உள்ளவராகவும், சுறுசுறுப்பற்றவராகவும் இருப்பார்..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!