Homeராசிபலன்மார்ச் மாத ராசி பலன்கள் 2025மார்ச் மாத ராசி பலன்கள் 2025: மேஷம் முதல் மீனம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2025: மேஷம் முதல் மீனம்

மார்ச் மாத ராசி பலன்கள் 2025

மார்ச் மாத ராசி பலன்கள் : மேஷம்

இன்றைய ராசி பலன்

மாதக் கோளான சூரியன் 10, 11ல்,3ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி நிலவும். பண வரவில் எவ்வித இடையூறுகளும் இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். அரசு வழியில் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்

மார்ச் மாத ராசி பலன்கள் : ரிஷபம்

இன்றைய ராசி பலன்

ராசியாதிபதி சுக்கிரன் 11ல் ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், 9 10ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும், வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெற்று குடும்பத் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மார்ச் மாத ராசி பலன்கள் : மிதுனம்

இன்றைய ராசி பலன்

தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராசியாதிபதி புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஏற்ற – இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும்.

மார்ச் மாத ராசி பலன்கள் : கடகம்

இன்றைய ராசி பலன்

முருக வழிபாடு செய்வது சிறப்பு.

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். சூரியன், சனி 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள் எதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத் ததை சாதிக்க முடியும்.

மார்ச் மாத ராசி பலன்கள் : சிம்மம்

இன்றைய ராசி பலன்

அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நன்று

உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு: பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச்செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ளமுடியும். செவ்வாய் 11-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறை யும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

மார்ச் மாத ராசி பலன்கள் : கன்னி

இன்றைய ராசி பலன்

பைரவரை வழிபடவும்

உங்கள் ராசிக்கு 6ல் சனி, சூரியன் 7ல் சுக்கிரன் ,புதன் 9ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும்முயற்சிகளில் வெற்றி சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவின ர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கணவன்- மனைவியிடையே வீண்வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும்.

மார்ச் மாத ராசி பலன்கள்: துலாம்

இன்றைய ராசி பலன்

கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும் கொடுக்கல் வாங்கலில் கவனம்தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சரில்களை குறைத்துகொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மார்ச் மாத ராசி பலன்கள் : விருச்சிகம்

இன்றைய ராசி பலன்

சிவ வழிபாடு செய்வது நல்லது

உங்கள் ராசிக்கு 5ல் புதன், சுக்கிரன் 7ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுபகாரியங்கள் கைகூடும் உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்தாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலம் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடை பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

பிப்ரவரி மாத ராசிபலன் : தனுசு

இன்றைய ராசி பலன்

தட்சிணாமூரத்தியை வழிபடுவது நல்லது.

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி, 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள் கொடுக்கல்- வாங்கலில்பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும் கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். கேது 10-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும்.

மார்ச் மாத ராசி பலன்கள் : மகரம்

இன்றைய ராசி பலன்

விநாயகர் வழிபாடு செய்வது நல்லது

உங்கள் ராசிக்கு 5ல் குரு, 6ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால்உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும்.

மார்ச் மாத ராசி பலன்கள் : கும்பம்

இன்றைய ராசி பலன்

சிவனை வழிபடுவது நல்லது

ஜென்ம ராசியில் சூரியன், சனி 4-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறை த்துக் கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை பணவரவுகள் ஏற்ற- இறக்கமாகத்தான் இருக்கும் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது. தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

மார்ச் மாத ராசி பலன்கள் : மீனம்

இன்றைய ராசி பலன்

முருக வழிபாடு செய்வது நல்லது

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12, 1-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பரதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம் அசையும், அசையா சொத்துக்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!