மார்ச் மாத ராசி பலன் 2024: பலன்கள் மற்றும் பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

மார்ச் மாத ராசி பலன்

மார்ச் மாத ராசி பலன் 2024

மேஷம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும் உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும்.

வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்
2.3.2024 காலை 8.17 மணி முதல் 4.3.2024 மாலை 4.21 மணி வரை மற்றும் 29.3.2024 பகல் 2.09 மணி முதல் 31.3.2024 இரவு 10.56 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : ஆழ் சிவப்பு

கிழமை : செவ்வாய்

கல் : பவளம்

திசை : தெற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த சுனக்க நிலைமாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

வழிபாடு
துர்க்கையம்மனையும் முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
4.3.2024 மாலை 4.21மணி முதல் 6.3.2024 இரவு 8.28 மணி வரை மற்றும் 31.3.2024 இரவு 10.56 மணி முதல் 3.4..2024 அதிகாலை 4.36 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : வெண்மை, நீலம்

கிழமை : வெள்ளி ,சனி

கல் :வைரம்

திசை : தென் கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விஷ்ணு,லக்ஷ்மி

மிதுனம்

உங்கள் ராசிக்கு 9 ,10ல் சூரியன், புதன் 11ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.

வழிபாடு
துர்க்கை அம்மனையும் விநாயகரின் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
6. 3.2024 இரவு 8.28 மணி முதல் 8.3.2024 இரவு 9.20 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : பச்சை ,வெள்ளை

கிழமை : புதன்

கல் : மரகதம்

திசை : வடக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விஷ்ணு

கடகம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் 7ல், 8ல் சூரியன்+ சனி சஞ்சரிப்பதால், எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும், பொருட்தேக்கம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும், உடன் இருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வழிபாடு
சிவனையும் முருகரையும் வழிபடவும்
சந்திராஷ்டமம்
8.3.2024 இரவு 9.20 மணி முதல் 10.3.2024 இரவு 8.40மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்:1,2,3,9

நிறம் : வெண்மை,சிவப்பு

கிழமை : திங்கள், வியாழன்

கல் : முத்து

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : வெங்கடாசலபதி

சிம்மம்

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், மாதம் முற்பாதிகள் 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால், பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சூரியன் 7,8ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்பால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு
சிவனையும் துர்க்கையும் வழிபாடு செய்வது உத்தமம்
சந்திராஷ்டமம்
10.3.2024 இரவு 8.40மணி முதல் 12.3.2024 இரவு 8.29 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : வெண்மை, சிவப்பு

கிழமை :ஞாயிறு

கல் : மாணிக்கம்

திசை : கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்

கன்னி

உங்கள் ராசிக்கு 6ல் சூரியன்+சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பண விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில்ரீதியாக வீண் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் வேலை பளு அதிகரித்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

வழிபாடு
துர்க்கை வழிபாடு குரு பகவானுக்கு தீபம் ஏற்றுவது நல்லது
சந்திராஷ்டமம்
112.3.2024 இரவு 8.29 மணி முதல் 14.3.2024 இரவு 11.39 மணி வரை


அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,7,8

நிறம் : பச்சை ,நீலம்

கிழமை : புதன் , சனி

கல் : மரகதம்

திசை : வடக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : ஶ்ரீ விஷ்ணு

துலாம்

ஜென்ம ராசிக்கு 4,5ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6ல் சூரியன், 7ல் குரு சஞ்சரிப்பதால்எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தன வரவு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதால், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதலால் மன நிம்மதி உண்டாகும்.

வழிபாடு
முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
14.3.2024 இரவு 10.39 மணி முதல் 17.3.2024 அதிகாலை 4.21 மணி

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 4,5,6,7,8

நிறம் : வெள்ளை, பச்சை

கிழமை : வெள்ளி, புதன்

கல் : வைரம்

திசை : தென் கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : லக்ஷ்மி

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு மாதம் ஒரு பாதையில் 3ல் செவ்வாய், சஞ்சரிப்பதாலும் லாபஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும், எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன் சனி 4ல் இருப்பதால், வீண் அலச்சல் ஆரோக்கிய பாதிப்புகள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் நெருங்கியவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகப்படியாக இருப்பதால், நிதானமாக செயல்படுவது உத்தமம்.

வழிபாடு
தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நல்லது
சந்திராஷ்டமம்
17.3.2024 அதிகாலை 4.21 மணி முதல் 19.3.2024 பகல் 1.37 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் , ஆழ் சிவப்பு

கிழமை :வியாழன்,செவ்வாய்

கல் : பவளம்

திசை : தெற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்

தனுசு

உங்கள் ராசிக்கு 5ல் குரு, 3ல் சனி மாத முற்பாதியில், 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். கடந்த கால பிரச்சனைகள் படிப்படியாக குறையும் பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழிலில் வேலை ஆட்களை அனுசரித்து நடந்து கொண்டால் போட்ட முதலில் எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

வழிபாடு
அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு
சந்திராஷ்டமம்
19.3.2024 பகல் 1.37 மணி முதல் 22.3.2024 அதிகாலை 1.27 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் ,பச்சை

கிழமை :வியாழன்,திங்கள்

கல் : புஷ்பராகம்

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

மகரம்

உங்கள் ராசிக்கு 1ல் ராகு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சசரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சனி 2ல் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்ப்பது உத்தமம். கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வழிபாடு
முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது
சந்திராஷ்டமம்
22.3.2024 இரவு 1.27 மணி முதல் 24.3.2024 பகல் 2.20 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : நீலம்,பச்சை

கிழமை : சனி ,புதன்

கல் : நீலக்கல்

திசை : மேற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்

கும்பம்

உங்கள் ராசிக்கு 1,2ல் சூரியன்+ சனி, 12ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டும், எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில்,வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும், வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

வழிபாடு
தட்சிணாமூர்த்தி ,ஆஞ்சநேரையும் வழிபடுவது நல்லது
சந்திராஷ்டமம்
24.3.2024 பகல் 2.20 மணி முதல் 27.3.2024 அதிகாலை 2:56 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 5,6,8

நிறம் : வெள்ளை, நீலம்

கிழமை :வெள்ளி ,சனி

கல் : நீலக்கல்

திசை : மேற்கு

வணங்க வேண்டிய தெய்வம் : ஐயப்பன்

மீனம்

ஜென்ம ராசியில் ராகு 12, 1 சூரியன் சஞ்சரித்தாலும் 2ல் குரு, மாதம் முற்பாதி 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் சொத்துக்கள் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதலை பெறுவார்கள்.

வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது
சந்திராஷ்டமம்
27.3.2024 அதிகாலை 2.56 மணி முதல் 29.3.2024 பகல் 2.9 மணி வரை

அதிஷ்ட குறிப்புகள்

எண்: 1,2,3,9

நிறம் : மஞ்சள் ,சிவப்பு

கிழமை :வியாழன், ஞாயிறு

கல் : புஷ்பராகம்

திசை : வட கிழக்கு

வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

Related Post

Leave a Comment

error: Content is protected !!