Home108 திவ்ய தேசம்திருமண தடை நீக்கும் அபூர்வ திவ்ய தேசம்: வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனத்துடன் ரங்கநாத பெருமாள் தரிசனம்!

திருமண தடை நீக்கும் அபூர்வ திவ்ய தேசம்: வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனத்துடன் ரங்கநாத பெருமாள் தரிசனம்!

அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

திவ்ய தேசம் 1

மூலவர் :ரங்கநாதர்

உற்சவர்:நம்பெருமாள்

அம்மன் / தாயார்:ரங்கநாயகி

தல விருட்சம் :புன்னை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்

ஆகமம் / பூஜை :பாஞ்சராத்திரம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருவரங்கம்

ஊர் :ஸ்ரீரங்கம்

மாவட்டம்:திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாசனம்

பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் , பேயாழ்வார், நம்மாழ்வா,ர் ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்,திருப்பணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்.

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா ! அமரேறே ! ஆயர்தம்
கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும்
வேண்டேன் அரங்கமா நகருளானே.

-தொண்டரடி பொடியாழ்வார்

அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

திருவிழா

வைகுண்ட ஏகாதசி’ இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும் பகல்பத்து , ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும் , பாடவும் பெறும் பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர் . அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் ( 10 நாட்கள் ) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.

மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும் தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.

தல சிறப்பு

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில், இதில் 4 ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது .

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை , மாசி , சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் ( 3 முறை ) நடைபெறும். தலம் புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக்கூறப்படுகிறது.

சுயம்பு சேஷத்ரங்களில் ஒன்று சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார்.மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில் பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 2வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

இத்தலத்து விமானம் “பிரணாவாக்ருதி” எனப்படுகிறது வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த ‘வைணவ தலம்’. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது முதலாவது திவ்ய தேசம்.

பொது தகவல்

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48 வது நாளில் “ஆடிப்பெருக்கு” உற்சவம் கொண்டாடப்படுகிறது .சில ஆண்டுகளில் ஆடி 18 ம் தேதியும் சில ஆண்டுகளில் ஆடி 28 ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.

‘ஆடிப்பெருக்கு விழா’ ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை,வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

பிரார்த்தனை

மோட்சம் தரும் தலம்” இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும.திருமண வரம் , குழந்தை பாக்கியம் , கல்வி , ஞானம் , வியாபார விருத்தி , குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க , விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். மேலும் இந்த தளத்திலுள்ள மூலவரை வெள்ளி அதிகாலை விஷ்பரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும்.

நேர்த்திக்கடன்

சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல் , குங்குமப்பொடி சாத்துதல் , சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம் ஊதுபத்தி , வெண்ணெய் , சிறுவிளக்குகள் , துளசி தளங்கள் , பூக்கள் , பூமாலைகள் முதலியன படைக்கலாம் பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை : ரங்கநாதர் , பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.நாபியில் பிரம்மா இல்லை ஆனால் , சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை , அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி , முத்தங்கி சேவை சாதிக்கிறார்.இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது .திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள் , இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள் இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி , அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

மோட்ச ராமானுஜர்

இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர் , இங்கேயே மோட்சம் அடைந்தார்.அவரது உடலை , சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார்.இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார் . இவருக்கு திருமஞ்சனம் கிடையாது . சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ , பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

பெருமாளுக்கு 365 போர்வை

கார்த்திகை கைசிக ஏகாதசியன்று ( வளர்பிறை ஏகாதசி ) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும் போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

காவிரி நீர் அபிஷேகம்

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் தைலாபிஷேகம் ) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

கம்பருக்கு அருளிய நரசிம்மர்

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது , அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள் , ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர் , ” அதை நரசிம்மரே சொல்லட்டும் ! ‘ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.அப்போது நரசிம்மர் , கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு , ” கம்பரின் கூற்று உண்மை ! ‘ என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர். தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது , கரம் கிடையாது.சன்னதி எதிரில் . கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது .மார்பில் மகாலட்சுமி , கைகளில் சங்கு , கரம் , அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் , இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி , தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது.தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு , வெல்லக் கலவையையும் படைக்கின்றனர்.சுவாமிக்கு ஜீரணமாவதற்காக இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.

பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில் சுவாமிக்கு சூர்ணத்தால் ( மருந்துக்கலவை ) அபிஷேகம் செய்யப்படுகிறது.

திறக்கும் நேரம்: காலை 6.15 மணி முதல் மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் , ஸ்ரீரங்கம் 006 , திருச்சி மாவட்டம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!