Homeஅடிப்படை ஜோதிடம்7ல் புதன் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

7ல் புதன் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

7ல் புதன்

லக்கினத்திற்கு 7 – ல் புதன் நல்ல மனைவி வாய்ப்பாள்.மனைவி வகை சொத்து உண்டு.அநேகர் தாய் மாமன் புதல்வியை மணம் புரிவர்.குதிரை வாகனம் அமையும். அந்திம காலத்தில் பெயரும் – புகழும் ஏற்படும்.

எல்லோரிடத்தும் அனுசரணையாக நடக்கக் கூடியவளும் , லக்ஷ்மிகடாட்சம் பொருந்தியவளாகவும் , வீட்டுக்கு வரும் விருந்தினர் அல்லது மற்றவர்களை அன்போடு உபசரித்து போஜனம் தருதல் ,தெய்வ பக்தி உடைய மனைவி அமைவாள்.தாயாருக்கும்,கால்நடைகளுக்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

புதன்-சந்திரன் கூடிடில் பெண் பித்தன்.

புதன்-கேது இணைந்தால் ஸ்தூல தேகமுள்ள மனவி உத்தியோகமுடையவள் ஆகவும் இருக்கலாம்.

சந்திரனோ , புதனோ , நீச்சமானாலோ அல்லது சேர்க்கையில் பார்வையில் கெட்டுப்போனாலோ மகன்கோளாறு உள்ள மனைவியும் அமையுைம்.

சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உள்ள கணவனோ , மனைவியோ அமையும்.இவர்களுக்கு திடீர் கோபம் தோன்றி , செய்யும் காரியத்தைக் கெடுப்பார்.தர்ம காரியங்களில் ஆழ்ந்த பற்றுடையவர்.தாய் சுகம் அதிகம் உள்ளவர்.70 வயது வரை ஆயுளுண்டு.

7ல் புதன்

அழகாக அலங்கரித்துக் கொள்ளல் , நடுத்தர வயதில் பெண் நோய், வீம்பு பேசும் குணம் , தகாத முறையில் உடல் உறவு கொள்ளல் , ஆனால் கல்வியில் சிறந்து விளங்குவார்.கை கால் ஊனமாகும் வாய்ப்பு உண்டு .

இவர் தசா புத்தியில் உடலில் ஹீனமேற்படல் , களத்திர உறவினர் துவேஷம் அரசு வழி கோபம் , திடீர் மரண பயமும் உண்டாகும். தாய்ப்பால் அதிகமுள்ள மனைவி அமைவாள் .

மனைவி வரும் திக்கு-வடக்கு ( தாய்வழியில் ) ஸ்தானாதிபதி கிரகத்தைப் பொறுத்து பலன் மாறும் .

மனைவி நிறம் -மேக வர்ண சரீரம் .

மனைவியின் குணம் – எல்லோரையும் அனுசரிக்கும் குணம் .

மனைவி இருக்கும் தூரம்-சுமார் இருநூறு மைல் தொலைவுக்குள்.

கணவன் அல்லது மனைவி தொழில் – அரசாங்க உத்தியோகம் அல்லது தனியார் துறையில் கணக்கர் அல்லது வியாபாரி .

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!