மேஷ ராசி
மேஷ ராசி ராசிகளின் முதலாவது ராசி ,பஞ்ச பூதங்களில் நெருப்பு ராசி மேஷ ராசி
- சரம் என்னும் நகரும் ராசி
- ஆண் ராசி
- ஆட்டுக்கிடா
- முரட்டுத்தனம், அவசரம், கோபம், போட்டி, சண்டை எல்லாம் உள்ளது இந்த ராசி. இவர்களின் குணமும் இப்படியே.
மேஷ ராசி வடிவம்:
மேஷ ராசி குணங்கள்
- தலைமைப் பீடத்திலேயே இருக்க விருப்பம்,
- பணி செய்ய மாட்டார்.
- தன் தீர்மானமே பெரிது பிறர் அறிவுரையை விரும்பமாட்டார்.
- அவசர தீர்மானம் ஆனால் சரியாய் இருக்கும்.
- பிறரை ஆட்டிப் படைப்பவர்கள்.
- ஊர் சுற்றிகள்
- சதா குமுறும் உள்ளம்.
- சந்தர்ப்பங்களுக்கு காத்திராமல் சந்தர்ப்பங்களை வரவழைத்து கொள்வார்.
- அவசர முடிவுகளை சரியாக தீர்மானிப்பதில் வல்லவர்.
- சண்டைக்காரன் அல்ல ஆனால் வரும் சண்டையை விட மாட்டார். விட்டுக்கொடுக்க மாட்டார்
- தான் என்ற கர்வம் அதிகம்
- அதை நிலைநாட்டுவார்
- ஆனால் அதில் கவர்ச்சி உண்டு
- குரூரமும், பழிவாங்கும் குணமும் உண்டு
- ராசிக்கு பாவக்கோள் சம்பந்தம் அதிகமானால் கொலையும் செய்யத் துணிவார்
மேஷ ராசி காதல், கல்யாணம்:
எளிதில் கவரபடுவர் ,அவசர குடுக்கை ,கண்டதும் காதல், அவசர மோதல் ,இல்லையேல் சாதல் இது இவர்களின் வேகம்.
ஆணாயினும் ,பெண்ணாயினும் தான் அடங்காமல் மற்றவர்களை அடக்கி ஆள விருப்பம்.இவர்கள் இஷ்டப்படிதான் நடக்க வேண்டும்.
பெண் மேஷராசிக்காரர் தாங்களாகவே காதலில் முதனமை ஏற்பர்.அதில் வெட்கமில்லை.எதிராளி அடக்கினால் உதறிவிடுவார்.முடிவையும் மாற்றி கொள்வர்.
இது ஆண்ராசியாகையால் இந்த ராசி பெண்களுக்கு கவர்ச்சி உருவம் எல்லாவற்றிலுமே ஒரு ஆண் தன்மை உண்டு.
மேஷ ராசி பெண்கள் :
இந்த ராசிப் பெண்கள் எப்படியும் கணவனை அடக்கி கைக்குள் வைத்துக் கொள்வர். இவர்கள் தம் கணவர்களை தனியாக விட்டுவிட்டு திரைப்படம், நாடகம், பொது அலுவல், லேடிஸ் கிளப் போன்றவற்றுக்கு செல்லும் பெருந்தனக்காரிகள்.
இந்த ராசி ஆண்களோ பெண்களை மலரென மதியாமல் கசக்கி நுகரும் இயல்பினர். அதிலே இவர்களுக்கு ஒரு ரசனை.
தன் காரியமே குறி , இப் பெண்கள் அடிக்கடி சண்டையிடுவார், அனால் குடும்ப ஈடுபாடு உண்டு. குடும்பத்தை தாமே நிருவகிப்பார்கள்.
குழந்தைகளை அடித்து வளர்ப்பர். விளக்க வரும் தாய்க்கும் பங்கு உண்டு. மேஷத்தாயோ இதேபோல் செய்துவிட்டு பாசத்தை காட்டாமல் தனியாக இருக்கும்பொழுது தாய்மை பாசத்தால் தவித்து பொறுமுவார்கள்.
அடித்துக்கொள்ளுதலும் , உடனே கூடிக் குலவி சிரித்தலும், இரவில் கூண்டில் அடைபட்ட கோழி போல் இவர்கள் வேகமும் அமுங்கிவிடும்.
மேஷ ராசி தொழில்
செவ்வாய் சனி சம்பந்தப்பட்டவையெல்லாம் காவல்துறை, மருத்துவம் அதிலும் சிறப்பாக அறுவை மருத்துவம், ரசாயனம், மின், தீ சம்பந்தமானவை, சமையல், இரும்பு சம்பந்தமான தொழில், முடி திருத்துதல், கடிகாரம் பழுது பார்த்தல், தையல் தொழில், பீங்கான் சுண்ணாம்பு கால்வாய் தொழில், சிராமிக் என்னும் கனிம பொருள் சம்பந்தப்பட்டவை, மருந்துகள், புடம் வைத்து செய்யும் சித்த மருத்துவம் முதலியன இவர்கள் தொழிலாக அமையலாம்.
மேஷ ராசியின் ஆக்கபூர்வமான பண்புகள்
தலைமை, திறமை, தானே முன்னின்று எல்லா சூழ்நிலைகளிலும் சங்கடங்களைச் சமாளிக்கும் வலிமை, மிக உயர்ந்த குறிக்கோள்,பேராவல்
மேஷ ராசிக்காரர்கள் சரி செய்து கொள்ள வேண்டிய பண்புகள்
கோபம், சிடுமூஞ்சி தனம், சுயநல, பொறுமையின்மை, தன் உணர்ச்சிகளை அடக்கி கொள்ள முடியாமல் வெடித்தல்.
மேஷ ராசிகாரர்களுக்கு வரும் நோய்
பொதுவாக நல்ல ஆரோக்கியமும் உண்டு, வெட்டின காயம் ,தீப்புண் , சீரான தலைநோய், கூரான ஆயுதம் காயம், உஷ்ணம் காங்கை, மூளை இரத்த நாள வெடிப்பு முதலியன.
அதிஷ்ட எண்: 3,6 ,5
அதிஷ்ட நிறம் : இரத்த சிவப்பு
அதிர்ஷ்ட மணி : (இரத்தினம்)பவளம்
அதிர்ஷ்ட நாள் : வியாழன், வெள்ளி ,திங்கள்.
இராசி அதிபதி செவ்வாய் ஆயினும் வியாழக்கிழமை தீமையே