Homeகோவில் ரகசியங்கள்சங்கு வடிவில் அதிசயமான தமிழ் கோவில் – அறிய வேண்டிய விவரங்கள்

சங்கு வடிவில் அதிசயமான தமிழ் கோவில் – அறிய வேண்டிய விவரங்கள்

சங்கு வடிவில் அதிசயமான தமிழ் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலசங்காடு என்ற இடத்தில் சங்காரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 3அடி உயரத்தில் மூலவர் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

தமிழ் கோவில்

இந்த மூலவர் சங்கு போன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பதே அதிசயமான ஒன்றாகும்.காக்கும் கடவுளான மாகவிஷ்ணு இத்தல இறைவனை வழிபட்டு பஞ்சஜன்ய சங்கை பெற்றதாக தலவரலாறு தெரிவிக்கிறது.இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு சங்காரண்யேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த ஆலயமும் ஒரு சங்கு வடிவிலேயே அமைந்திருக்கிறது,பழங்காலத்தில் இந்த பகுதியில் சங்கு பூக்களை அதிகமாக பயிரிட்டு,இங்குள்ள ஆலயத்திற்கும் சுற்றியுள்ள கோவில்களுக்கும் அனுப்ப பட்டதாக தெரிகிறது. 

இதன் காரணமாகவே இந்த பகுதிக்கு தலசங்காடு என்ற பெயர் வந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்..

Google Map 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!