மிதுன ராசி திருமண வாழ்க்கை
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி
இவர்களின் 7 – ஆம் அதிபதி தனுசு ஆகும். இதன் அதிபதி குரு ஆவார். பொதுவாக உபய ராசியான மிதுனத்துக்கு தனுசு குரு பாதகாதிபதியே ஆவார். தனுசில் கேது , சுக்கிரன் , சூரியன் சார நட்சத்திரங்களான மூலம் , பூராடம் , உத்திராடம் உள்ளன.எனவே , இவர்களின் வாழ்க்கைத் துணைவர் நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் என்றிருப்பர்.இவர்களுக்கு எல்லாமே ஒழுங்கு முறைப்படிதான் இருக்க வேண்டும் . ஏனெனில் , தனுசு என்பது தெய்வீக நெருப்பு ராசி.
எனவே , எதிலுமே அளவாக- அழகாகச் செயல்படுவர். அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்தாலும் , லக்ன 7 – ஆம் அதிபதிகள் சுப ராசி ஆதலால் பொறுத்துப்போய் விடுவர்.மிதுன ராசி , லக்னக்காரர்களின் வாழ்க்கைத் துணைவரின் வீடு , கோவில் அருகிலோ அல்லது கடல் , ஏரி , குளம் அருகிலோ இருக்கும்.
- இவர்களின் மாமியார் தெய்வபக்தி மிகுந்தவராகவும் , மாமனார் பிரபலமானவராக பொல்லாதவராக- பயப்படும் படியானவராக இருப்பார்.
- கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் துணைவர் அமைவார்.
- 7 – ஆம் அதிபதி உச்சமானால் மிகுந்த செல்வச் செழிப்பும் , குடும்ப மேன்மையும் உண்டாகும்.
- மனைவி அல்லது கணவன் வந்தபிறகு தொழில் மேன்மை அடையும்.
- கல்யாணம் ஆன நேரம் , எப்படி ஓகோன்னு ஆகிவிட்டார் ‘ என அடுத்தவர் பொறாமைப்படும்படி வாழ்க்கைத்தரம் உயரும்.
- இதே 7 – ஆம் அதிபதி நீசமானால் தொழிலில் சறுக்கல்கள் , அவமானங்கள் , கௌரவக் கேடு என விரும்பத்தகாதவை எல்லாம் நடக்கும்.
- ‘ கல்யாணம் ஆனதிலிருந்து விளங்கவே இல்லை ‘ என சலிக்கும்படி நேரிடும்.
- யே , யோ , ப , பி , பூ , த , ப , டா , பே (Y,P,T,D,)மற்றும் தா என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும்.