துவாதச பாவங்களில் (Moon) சந்திரன் நின்ற பலன்
2ல் சந்திரன்
- வெண்மதி ஆகிய சந்திரன் இரண்டாம் இடத்தில் நின்றால் வித்தை, புத்தி ,நல்ல வாலிப வயதில் திருமணம் செய்வான்.
- மேலும் சன்மார்க்கத்தை போதிக்கும் குணமுள்ளவன், அநேகவித சம்பத்து புத்திர யோகம் உடையவன்.
- சந்திரனைப் போன்று அழகான முகம் உடையவன்.
- சந்திரன் நட்பு,ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய சுப பலன்கள் நடைபெறும்.
- பகை,நீசம் பெற்று அசுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய அதற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்.
3ல் சந்திரன்
- சந்திரன் மூன்றில் இருந்தால் நல்ல ஆபரணாதி வஸ்துக்களை காதில் அணிவான்.
- நல்ல அறிவுக் கூர்மை உள்ளவன்.
- சற்று கர்வம் பிடித்தவன்.
- மழலைமொழி மேல் விருப்பம் உள்ளவன்.
- சந்திரனைப் போல் வாழ்ந்திருப்பான்.
- நல்ல பெண் துணை உடையவன்.
- பாக்கியவான், மிகுந்த பொறுமைசாலி.
4ல் சந்திரன்
- சிறப்பு பொருந்திய சந்திரன் 4ம் இடத்தில் நிற்க பரஸ்திரீ மோகமுள்ளவன்.
- மாடு,குதிரை, மனைகள் உண்டு.வித்தையில் வல்லவன்.
5ல் சந்திரன்
- சந்திரன் 5-ம் பாவத்தில் நின்றால் ஜாதகருக்கு பெண் குழந்தைகள் அதிகம் உண்டாகும்.
- மேலும் இப்புவியில் சீமானாய், செல்வ சிறப்புடன் வாழ்வார்.
- சந்திரன் சுப பலம் பெற்றிருந்தால் மேற்கூறியவாறு சுப பலம் உண்டாகும்.
- பலவீனமாக இருந்தால் மேற்கூறிய அதற்கு மாறான பலன்கள் நடைபெறும்.
- சுபம் பாவம் கலந்து சந்திரன் சமமாக இருந்தால் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து நடைபெறும்.
- நினைத்ததை சாதிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும்.
6ல் சந்திரன்
- சிறப்பு பொருந்திய சந்திரன் 6-ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு நீரால் பயமும், ரோக பயமும் உண்டாகும்.
- மேலும் அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
- தேசம் எங்கும் அலைந்து திரிந்து வயிற்றுப் பசியை தீர்ப்பான்.
8ல் சந்திரன்
- சந்திரன் 8-ம் இடத்தில் நிற்க அந்தக்குழந்தை பலவித கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்குவான்.
- அதேசமயம் மலக்கழிச்சல், நீர் பயம், முதலியவற்றால் வருந்துவான்.
7ல் சந்திரன்
- வளர்பிறைச் சந்திரன் 7-ம் இடத்தில் நின்றால் அந்த ஜாதகர் தனவந்தனாகவும், மற்றவர்களை அன்புடன் ஆதரிப்பவனாகவும் இருப்பான்.
- காதலியால் நல்ல அனுகூலமான பலன்களை அடைபவனாகவும், கற்புடைய பெண்ணை மனைவியாக அடைபவனாகவும் இருப்பான்.
- திருப்பாற்கடலில் வாசம் செய்யும் திருமால் அருளால் செல்வ சீமானாக வாழ்வான்.
- இருப்பினும் சந்திரனின் இருப்பிடம் அதன் வலிமையை அறிந்து சரியான செய்தியை கூற வேண்டும்.
9ல் சந்திரன்
- வளர்பிறைச் சந்திரன் பாக்கிய கோணத்தில் ஏற, ஜாதகர் பாக்கியவனாகவும், தெய்வபக்தி நிறைந்தவனாகவும், காம உணர்வு மிகுந்தவனாகவும் இருப்பான்.
- மேலும் பரஸ்திரீ பிரியன், புத்திரபாக்கியம் நிறைந்தவன்.
10ல் சந்திரன்
- வளர்பிறை சந்திரன் 10-ம் இடத்தில் நிற்க அந்தப் பாலகன் தனலாபமுள்ளவன், பாக்கியவான், மேலும் பல தீர்த்தமாடி உல்லாசமாய் வாழ்வான்.
11ல் சந்திரன்
- வளர்பிறைச் சந்திரன் 11-ல் நிற்க மாதுர் வழி ஜனங்களால் லாபம் உண்டு.
- மேலும் மாந்த்ரீக கலையில் வல்லவனாகவும், சுகபோகம் உள்ளவனாகவும், வீரனாகவும், தீர்க்காயுள் நிறைந்தவனாகவும் இருப்பான்.
12ல் சந்திரன்
- சந்திரன் 12ல் நின்றால் தாயால் பொருள் நஷ்டம் உண்டாகும்.
- சந்திரனின் வலிமையையும் அதன் இருப்பிட சிறப்பையும் அறிந்து சரியான பலன்களை எடுத்துரைக்க வேண்டும்.