பத்மநாப சுவாமி கோவில் ரகசியங்கள்
கோவிலை காவல் காக்கும் முதலை
கேரள(Kerala) மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் என்ன தனித்துவம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா??
கேரளாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான திகழ்ந்துவரும் அனந்தபுரா கோவில் அனந்த பத்மநாப சுவாமியின்(Padmanaba Swamy) மூலஸ்தானமாக கருதப்படுகிறது.அனந்தபுரா கோவிலில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அதோடு பிரதான கோவிலை சுற்றி தலைவாயில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது
பச்சை பசேலென்று இருக்கும் இந்த கோவிலின் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது இதை அங்குள்ள மக்கள் பபியா என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இந்த முதலை கோவிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாக மதிக்கப்படுகிறது.அதோடு இந்த முதலை இறந்து போனாலும் அதன் இடத்தில் கோவிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் பொதுவாக முதலை இனமானது அசைவ வகையை சார்ந்தது ஆனால் இந்த முதலை குளத்தில் உள்ள மீன்களை கூட சாப்பிடாது .இந்த முதலைக்கு கோவில் குருக்கள் உச்சிகால பூஜையின்போது சாதம் வெல்லம் கலந்த உருண்டை சாப்பிடகொடுக்கிறார் இதற்கு முசலி நைவேத்திய என்கிறார்கள்.
கோவில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கல்களை இதுவரை தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதுசரியாக பிரசாதம் வழங்கப்படும் வேளையில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட முதலையை இந்த குளத்தில் எவரும் கண்டதில்லை ஒரு முதலை இறந்து விடுமேயானால் மறுதினமே இன்னொரு முறை தென்படுமாம்அருகில் வேறு ஆறுகளும் குளங்களும் இல்லாத நிலையில் எப்படி இந்த கோவில் குளத்தில் முதலை வந்தது என்பது எவருக்கும் புரியாத புதிர் என்கிறார்கள்.
Google Map :