அடிப்படை ஜோதிடம்-பகுதி-53- பஞ்சபட்சி ரகசியங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பஞ்சபட்சி ரகசியங்கள்

பஞ்ச பட்சி “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களால் ஆனது. அதேபோல் மனித உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது.

பஞ்சபட்சி

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோகாரகன் என்று பெயர். மனித உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியை காரணம். மனிதர்களின் உடற் கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது.உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது கோட்சார  சந்திரனின் சுழற்சிக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமை அடைந்தும் சில நேரங்களில் வலுவிழந்து போகும்.

 ஒருவரின் மனநிலைகளில் உணர்வு நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களே காரணமாக உள்ளன. ஆக உடலின் இயக்கங்கள், தோஷங்கள், நோய்கள், மனநிலை மாற்றங்கள் என அனைத்துமே பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

கால சுழற்சிக்கு ஏற்ப பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செயல்பட்டால் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நடை போடலாம் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு பஞ்சபட்சி சாஸ்திரம் உருவாக்கப்பட்டது.

பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் பட்சி என்றால் பறவை என்று பொருள் சாஸ்திரம் என்றால் ஞானிகள், சித்தர்களால் எழுதப்பட்டவை என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகள் ஆகும் நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் ஐந்து பஞ்ச பட்சிகள் உடன் ஒப்பிடுகிறோம்.

வல்லூறு (நிலம் )

பஞ்சபட்சி

வானத்தில் இருந்து நிலத்தை துல்லியமாக பார்க்கும் தன்மை கொண்டதால் வல்லூறு நில தத்துவ பட்சி ஆகிறது.வல்லுறை நட்சத்திரபட்சியாக கொண்டவர்கள் புத்திகூர்மை மிகுந்தவர்கள்,பிடிவாதம், விஷமத்தனம் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஆழமான கொள்கை பிடிப்புகளோடும் நிதானத்தோடும் வாழ்க்கையை எதிர் கொள்வதால் பிறர் தொட முடியாத உச்சத்தை இவர்களால் தொட முடியும் சாதனை புரிய முடியும்.நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பார்கள் 

ஆந்தை( நீர்) 

பஞ்சபட்சி

சந்திரனின் நீர் தன்மை கொண்ட கிரகம். சந்திரனுக்கு  இரவில் பலம் அதிகம். இரவு நேரத்தில் பார்வை துல்லியமாக இருக்கக்கூடிய ஒரு பறவை ஆந்தை எனவே இது நீர் தத்துவ பட்சி.சுறுசுறுப்பு புத்திசாலித்தனம் தன்னம்பிக்கை தைரியம் மிகுந்தவர்கள் முரட்டுத்தனம் முன்கோபம் இவர்களிடம் காணப்படும்.தற்பெருமை மிகுந்தவர்கள் .தோல்விகளை கண்டு மனம் தளர மாட்டார்கள்.எந்த பிரச்சனையையும் எதிர்கொண்டு சமயோசிதமான புத்தியால் வெற்றியை சுவைப்பார்கள் .கடுமையான உழைப்பாளிகள் வித்தியாசமான சிந்தனை செயல்பாடுகள் அதிகம் நிறைந்தவர்கள்.கனவை நனவாக்கும் புத்திக்கூர்மை உண்டு.சமுதாயத்திற்கும் பிறருக்கு உதவும் குணம் அதிகமாக இருக்கும் 

காகம்(நெருப்பு)

பஞ்சபட்சி

அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டக் கூடிய சனி பகவானின் வாகனம் காகம். இதுவே நெருப்பு தத்துவ பட்சி ஆகும்.பட்சிகளிலே மிகவும் வலிமை வாய்ந்தபட்சி காகம் ஆகும்.உடலாலும் உள்ளத்தாலும் மிக வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் கலங்க மாட்டார்கள். தங்கள் மன உறுதியால் பல சாதனைகளைச் செய்வார்கள். ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டால் உடனே மனதில் வேறு ஒரு ஆசை முளைக்கும்.மிகவும் நாணயமானவர்கள்.அனைவரது கவனத்தையும் எளிதில் ஈர்ப்பார்கள்.எந்த கூட்டத்திலும் இவர்களுக்கு மரியாதை இருக்கும் .நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தராதவர்கள்.எதிலும் நடுநிலையோடு நடப்பார்கள்.

கோழி( காற்று) 

பஞ்சபட்சி

அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக கூவும் சேவல் காற்று தத்துவ பட்சி.சுயநலம் மிக்கவர்கள்.பிறரைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள்.தனக்குப் பிறர் உதவ வேண்டும் என்று நினைப்பார்கள் .ஆனால் பிறருக்கு இவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.எந்த விஷயமாக இருந்தாலும் ஆழமாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த காரியத்திலும் இறங்க மாட்டார்கள் .ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு அகப்பட்டுக் கொள்ள மாட்டார்கள் எவராவது இவர்களை புண்படுத்தி விட்டால் அவர்களை பகைத்துக் கொள்வார்.எந்த வகையிலாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.மன்னிக்கும் மனப்பக்குவம் இருக்காது இவர்களே எதிரிகளை உருவாக்கிக் கொள்வார்கள். 

 மயில் (ஆகாயம்)

பஞ்சபட்சி

மழை வரக்கூடிய நேரத்தை முன்கூட்டியே அறிந்து ஆகாயத்தைப் பார்த்து நடனமிடும் மயில் ஆகாய தத்துவ பட்சி.ஆற்று மணலை அளந்துவிடலாம் ஆனால் இந்த நட்சத்திரத்தினரின்மனதை யாராலும் அறிய முடியாது.வெளியில் சாந்தமான மனநிலை உள்ளவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்களாகவும் தோன்றுவார்கள் கொள்கைப் பிடிப்புள்ள தங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள்.கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.எதையும் மறக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டிருப்பதால் தூக்கம் கெடும், உடல் நலமும் கெடும்.

பஞ்ச பட்சி ரகசியங்கள் தொடரும்…..

2 thoughts on “அடிப்படை ஜோதிடம்-பகுதி-53- பஞ்சபட்சி ரகசியங்கள்”

Leave a Comment

error: Content is protected !!