Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026 : சிம்மராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026 : சிம்மராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026 : சிம்மராசி

பித்ருகாரனாகிய சூரியனை ஆட்சி வீடாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! இவ்வருடம் குரு பகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். அக்டோபர் 31ம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு வந்த குருபகவான் டிசம்பர் 5ம் தேதி முதல் வக்ரகதியில் மீண்டும் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். 

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

சனிபகவான் வருடம் முழுவதும் அஷ்டம சனியாக 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். 

டிசம்பர் 5ம் தேதி ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கும், கேது பகவான் உங்கள் ராசியில் இருந்து 12-ம் இடத்திற்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

இதனால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் தாமதமாக நடக்கும். மூட்டு வலி, கால் வலி உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்திலும் மனைவியின் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை தேவை. வருடத்தில் பிற்பகுதியில் மார்கழி முதல் பழைய பாக்கியங்கள் வசூலாகும். 

இவ்வருடம் கடன் கொடுத்தால் திரும்ப வராது. கடன் வாங்கினால் மார்கழி முதல் திரும்பக் கட்டும் நேரம் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டு. எப்போது திருமணம் முடிவானாலும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் திருமணம் முடிக்க வேண்டும். காலதாமதம் செய்தால் முடிவான திருமணம் நிற்க வாய்ப்பு உண்டு. 

தொழில் துறையில் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்து குறைந்த வருமானம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை கிடைக்கும் வரை இருக்கும் விலையை விடக்கூடாது. மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். 

பரிகாரம் 

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கும், ஆஞ்சநேயருக்கும் நல்லெண்ணெய் தீபம் வைக்கவும். 

ஒருமுறை சனிக்கிழமை அன்று திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட்டு வரவும்.

மொத்தத்தில் இந்த வருடம் 55 சதவீதம் நற்பலன்கள் நல்கும் வருடமாக இருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular