Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கடக ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கடக ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கடக ராசி

மாதுர்காரனாகிய சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த வருடம் ஜூன் 1ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திலிருந்து ஜென்ம ராசிக்கு வருகிறார். அக்டோபர் 31ம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வருகிறார். ஜனவரி 24ம் தேதி வக்ரகதியில் மீண்டும் உங்கள் ராசிக்கு வருகிறார். 

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

டிசம்பர் 5ம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கும், கேது பகவான் இரண்டாம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கும் இடம் பெயர இருக்கிறார்கள். 

வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9வது இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இதனால் குடும்பத்தில் செலவினங்கள் அதிகமாகும். தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்வீர்கள். தெய்வ பலம் கிடைக்கும். ஐப்பசி முதல் தை மாதத்திற்குள் திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டு. 

வைகாசி முதல் ஐப்பசி மாதத்திற்குள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். மருத்துவ செலவுகள் குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:கடக ராசி

கடன் வாங்கி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. புதிய முயற்சிகளில் காலதாமதமாக வெற்றி கிடைக்கும். குடும்பத்திலிருந்து குழப்பங்கள் தீரும். மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண் பெறுவர்.தொழில்துறையில் புதிய வேகமும் வளர்ச்சியும் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. 

பரிகாரம்

பிரதி வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபமும், திங்கள்கிழமை விநாயகருக்கு நெய் தீபம் வைக்கவும். தை மாதம் ஜென்ம நட்சத்திரத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular