சிவன் கோயிலில் உள்ள அம்பாளுக்கு திங்கட்கிழமை காலை தும்பை மலர் சாற்றிவழிபட சாபங்கள் நீங்கும்
மகாலெட்சுமிக்கு வெள்ளிமாலை செந்தாமரை படைத்துவழிபட செல்வம் செழிக்கும்.
வீட்டில் மண்பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.
துர்க்கைக்கு செவ்வாய்கிழமை ராகு காலத்தில் அசோகபூ படைத்து வழிபட கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
திருச்செந்தூர் முருகப்பெருமானை தினமும் மனதார வழிபட திருமண தடை அகலும்.
வெள்ளிமாலை பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு செத்தாமரை படைத்து வணங்க கடன் தொல்லையில் இருந்துவிடுபடலாம்.
கருமாரி அம்மனுக்கு சனிக்கிழமை மாலை நீலசங்கு புஷ்பம் சாற்றி வழிபட நல்லவேலை கிடைக்கும்.
மிதுன லக்னம்-திருமண தடை நீங்க ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை வழிபட்டு பின்பு ராமானுஜரை வழிபட திருமண பாக்கியம் உண்டு.
மேஷ லக்னம், பரணி நட்சத்திரம் கொண்டவர்கள் எருமை மாடு பலி கொடுக்கும் காளியம்மன், எருமை மாட்டின் மீது அமர்ந்திருக்கும் காளி, கரூர் மேட்டுப்பட்டி துர்க்கை, திருச்சி மட்ட பாரப்பட்டி பத்ரகாளி, சிந்தலக்கரை வெட்காளியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடும் பொழுது தங்களுக்கு நம்மை வந்து சேரும்.
பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருந்தால் காலையில் பறவைகளுக்கு இனிப்பு வழங்க விரயம் கட்டுப்படும்.
பாலும் சர்க்கரையும் கலந்து ஆலமர வேரில் விடவும் அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள செல்வ வளம் பெருகும்.
மிதுன லக்னம்-புத்திர தடை தோஷம் நீங்க சோட்டாணிக்கரை சென்று பகவதி அம்மன் வழிபாடு செய்வது புத்திர பாக்கியம் உண்டு.
சரஸ்வதிக்கு புதன் காலை நந்தியாவட்டை படைத்து வணங்க கல்வி தடை நீங்கும்.
மேஷ லக்னம், அஸ்வினி நட்சத்திரம் கொண்டவர்கள் பழனி மலைகள் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமியையும், அடிவாரத்தில் இருக்கும் நக்கீரர் பகவானையும், கொடுமுடி மும்மூர்த்தி தளத்தையும் அவ்வப்போது மாதமொருமுறை வழிபட்டு வருவது மிகுந்த நன்மையை பெற்று தரும்.
ஆடி பெளர்ணமி விரதம் இருந்து அம்பாளை வழிபடுங்கள் நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
பெளர்ணமியான அன்று கோவில்களிலும் ,வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடையலாம்.
துர்க்கைக்கு செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் சிவப்பு ரோஜா படைத்து வணங்க குடும்ப ஒற்றுமை ஏற்படும்.