வாழ்வில் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக நிலைகள்
12ம் வீட்டில் ,12-ம் வீட்டு அதிபதி அல்லது லக்கினத்தில் 12-ம் அதிபதி மாரகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ அந்த ஜாதகர் வறுமையில் இருப்பார்..
6-ம் இடத்தில் 6-ம் அதிபதி லக்னாதிபதியுடன் சேர்க்கையோ அல்லது மாரகாதிபதியுடன் சேர்ந்து இருக்க அல்லது மாரகாதிபதி பார்த்தால் அந்த ஜாதகர் தரித்திரனாக இருப்பார்..
லக்னாதிபதி அல்லது சந்திரன் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருந்தாலும் அவர் வறுமையில் இருப்பார்
லக்னாதிபதி அசுபக் கிரகங்களுடன் 6 ,8, 12ஆம் வீட்டிலும், இரண்டாம் வீட்டு அதிபதி பகை ராசியில் நீசம் பெற்றிருந்தாலும், ராஜ குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்.
லக்னத்தில் அசுப ஸ்தான அதிபதியுடன் (6, 8, 12 அதிபதிகள்)அல்லது சனியுடன் சேர்க்கை பெற்று, சுப கிரகங்கள் இல்லாமலும், பார்வையும் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகர் தரித்திரன் ஆக இருப்பார்.
5-ம் அதிபதி, ஒன்பதாம் அதிபதிகள் முறையே ஆறாம் இடம் 12-ஆம் இடங்களில் தங்கியிருக்க, மாரக கிரகங்களின் பார்வை பெற்றால் அவர் மிகவும் ஏழ்மையில் இருப்பார்.
9 மற்றும் 10-ம் அதிபதிகளை தவிர பாவ கிரகங்கள் லக்னத்தில் நின்றிட மாரகாதிபதி பார்த்திடில் அவர் ஏழையாக இருப்பான்.
6, 8, 12-ஆம் இடத்தில் ராசியதிபதிகள் நிற்கும் இடங்களில் பாவ கிரகங்களுடன் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றோ இருப்பின் அவர் துர்பாக்கியவான்.
நவாம்சத்தில் சந்திரன் நின்ற ராசி அதிபதி மாரக கிரகத்துடன் சேர்க்கை பெற்று அல்லது மாரககிரகத்தின் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் ஏழ்மையாக இருப்பார்.
லக்னாதிபதி, நவாம்ச லக்னாதிபதி, மாரகாதிபதியின் பார்வை பெற்றாலும், மாரககிரகத்துடன் இருப்பினும் ஏழ்மையானவர்
சுப ஸ்தானங்களில் அசுபர்களும் இடம் பெற்றிருந்தால், ஜாதகர் எளிமையாகவும், உணவுக்கு வழியில்லாமல் வருந்துவார்.
ஒரு கிரகமானது திரிகோண ஸ்தான அதிபதிகள் பார்வை இல்லாமலும் 6, 8, 12ஆம் அதிபதிகள் யாருடனாவது சேர்ந்து இருந்தாலும், அந்த கிரகத்தின் தசா காலங்களில் ஜாதகரின் பொருளாதார நிலைக்கு பங்கம் வரும்.
லக்னாதிபதி அல்லது ஆத்மகாரருக்கு 8, 12-ஆம் இடத்தை நவாம்ச ஆத்மகாரகனாக அதிபதி அல்லது லக்கினாதிபதி பார்த்திடில் அந்த ஜாதகர் செல்வம் அற்றவராக இருப்பார்.
லக்னத்திற்கு 12ம் இடத்தை லக்னாதிபதி பார்த்தாலும், ஆத்மகாரருக்கு, 12ம் இடத்தை ஆத்மகார அதிபதி பார்த்தாலும் அந்த ஜாதகர் பணத்தை வீணடிப்பார் அல்லது இழந்து விடுவார்.
சனி செவ்வாய் இருவரும் இரண்டாமிடத்தில் இருப்பினும் ஜாதகர் செல்வம் அழிந்து விடும். இரண்டாம் வீட்டில் இருக்கும் மேலே கூறிய இரண்டு கிரகத்தையும் புதன் பார்த்ததில் அதிகமான செல்வம் இருக்கும்.
சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து சனியை பார்த்தால் அது தரித்திரத்தை கொடுக்கும். சனியினால் பார்க்கப்படாமல் இருந்தால் செல்வமும் புகழும் கிடைக்கும். சனி இரண்டாம் இடத்தில் நின்று சூரியனைப் பார்த்தாலும் அவர் வறுமையில் வாழ்வார்.