Homeஜோதிட தொடர்ஜோதிட தகவல்கள் : காவல் துறையில் உயர்வு பெற உதவும் சிறந்த கிரக நிலைகள்!

ஜோதிட தகவல்கள் : காவல் துறையில் உயர்வு பெற உதவும் சிறந்த கிரக நிலைகள்!

ஜோதிட தகவல்கள்

ஒருவர் காவல் துறையில் சேர்ந்து புகழ்பெற அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி, 5, 9 ஆம் அதிபதிகள் செவ்வாயுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ள வேண்டும்.அல்லது செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்து அதை குரு, சூரியன் பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி ஐந்தில், ஐந்தாம் அதிபதியுடன் இருந்து அதை செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால் அந்த ஜாதகர் காவல் துறையில் பெரிய பதவி வகிப்பார்.

சூரியன், செவ்வாய் லக்னம் அல்லது 5, 9-ல் இருந்தால் அவருக்கு காவல் துறையில் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

லக்னாதிபதியான செவ்வாய் லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு ருசக யோகம் உண்டாகும். அதனால் அந்த ஜாதகர் காவல்துறையில் புகழுடன் இருப்பார்.

லக்னத்தில் உள்ள செவ்வாயை  5 அல்லது 9 ல் இருக்கும் குருபகவான் பார்த்தால் அந்த ஜாதகர் காவல்துறையில் நல்ல பதவியில் இருப்பார்.

சந்திரன் ,சூரியன் ,செவ்வாய் 3,5,9-ல் இருக்க அதை குரு பார்த்தால் அந்த ஜாதகர் காவல்துறையில் பலரும் பாராட்டும் நிலையில் இருப்பார்.

5ல் குரு, சூரியன், செவ்வாய் இருந்தால் அவர் காவல்துறையில் உயர் பதவி வகிப்பார். ஆனால் பல வேளைகளில் அவருக்கு அங்கு பிரச்சனை உண்டாகும் எனினும் அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.

லக்னத்தில் சூரியன், புதன் 5-ல் குரு 9-ல் சந்திரன் இருந்தால் அவர் காவல் துறையில் புலன் விசாரணை இலாகாவில் உயர் பதவியில் இருப்பார்.

ஜோதிட தகவல்கள்

3-வது வீட்டில் சூரியன், புதன், செவ்வாய் 5-ல் சந்திரன் 10-ல் சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு இருக்கிறது.

லக்னத்தில் சந்திரன், 5-ல் குரு, செவ்வாய் இருந்தால் அவர் ஐபிஎஸ் தேர்வாகி காவல்துறையில் உயர் பதவி  வகிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

 5-ல் செவ்வாய், புதன், சூரியன் 11-ல் குரு இருந்தால், அவர் காவல் துறையில் நல்ல புகழுடன் பெரிய பதவி வகிப்பார்.

9-ல் சூரியன், புதன், செவ்வாய் 11-ல் சந்திரன் ,3-ல் குரு இருந்தால் அந்த ஜாதகர் காவல்துறையில் நல்ல பெயர் பெறுவார் அவருக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும்.

லக்னத்தில் சந்திரன், 4-ல் சனி, 6-ல் சூரியன் இருந்தால் அவருக்கு காவல் துறையில் நல்ல வாய்ப்பு கிட்டும். 6-ல் இருக்கும் சூரியன் அவருடைய விரோதிகளை அழிக்கும்.

5-ல் சனி, 9-ல் செவ்வாய் ,குரு லக்னத்தில் சூரியன் இருந்தாலும் லக்னத்தில் சூரியன் ,புதன் ,செவ்வாய் 5-ல் குரு இருந்தால் அந்த ஜாதகர் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பார்.

4-ல் சூரியன், 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 7-ல் சனி, சந்திரன் இருந்தால் அவர் காவல்துறையில் உன்னத பதவியில் இருப்பார்.

சூரியன் 5-ல் ,குரு 9-ல் சந்திரன், செவ்வாய், ராகு இருந்தாலும் லக்னத்தில் செவ்வாய், சந்திரன், புதன் 9-ல் குரு இருந்தாலும் அந்த ஜாதகர் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பார்.

லக்னத்தில் சூரியன் ராகு இருக்க, பத்தில் செவ்வாய் குரு இருந்தால் அவர் காவல் துறையில் நல்ல பதவியில் இருப்பார் அரசியல்வாதி ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 5-ல் செவ்வாய் ,குரு, சனி இருந்தாலும் 5-ல் செவ்வாய், புதன், சூரியன் 9-ல் குரு 11-ல் சுக்கிரன் இருந்தாலும் அந்த ஜாதகர் காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருப்பார்.

ஜோதிட தகவல்கள்

பரிகாரங்கள்

காவல்துறையில் நுழைவதற்கும் பணியாற்றுவதற்கு பதவி உயர்வு பெறுவதற்கும் தடைகள், பிரச்சனைகள் இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை.

  • தினமும் ஆஞ்சநேயரை நான்கு முறை சுற்றி வர வேண்டும்
  • செவ்வாய்க்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் துர்க்கை அல்லது காளி  ஆலயத்திற்கு சென்று  தீபமேற்றி ,சிவப்பு நிற மலரை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
  • தினமும் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • வீட்டின் வடகிழக்கில் குப்பைகளை சேர்த்து வைக்கக் கூடாது.
  • மேற்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.
  • தன் லக்னாதிபதி, 5ம் அதிபதியின்  ரத்தினத்தை அணியலாம்.
  • வீட்டின் தென் மேற்கில் கிணறு ஆள்துளை கிணறு இருக்கக் கூடாது.
  • வீட்டின் தென் கிழக்கில் நீர் பிடித்து  வைத்தல் கூடாது நீர் தொட்டியும் இருக்கக் கூடாது.
  • வீட்டில் மாருதி எந்திரத்தை வைத்து பூஜை செய்வது நற்பலன் தரும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!