நட்சத்திர சிறப்பம்சங்கள்-புனர்பூசம்
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதி களாக இருப்பார்கள்.
- இசையில் விருப்பம் உடையவர்கள்.
- நல்ல குணம் கொண்டவர்கள்.
- சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவார்கள்.
- பலரும் மிக அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள்.
- சிலர் பெண் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
- மிகப்பெரிய திட்டங்களை தீட்ட கூடியவர்கள்
- பலருக்கும் வழிகாட்டியாக இருப்பவர்கள்
- அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள்
- தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரை உறுதியாக நம்பக் கூடியவர்கள் ஆனால் பார்ப்பதற்கு மிக எளிய தோற்றத்தில் இருப்பார்கள்
- K, H ஆகிய ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் வண்ணம் பெயர் அமைக்க வேண்டும்
யோனி-மார்ஜா(எலி)
கணம்-தேவ கணம்
நாடி-ஆதிநாடி
நட்சத்திர அதிபதி-அதிதி
நட்சத்திர கிரகம்-குருபகவான்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக ஏழு நாட்கள் ஆகும் “அதிதி கோ ரித்தி” எனும் மந்திரத்தை கூற நோய் குணமாகும். பித்தளை தானம் அளிப்பது நன்று. கருவேல மரத்தை வழிபட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் கிரகம் குருபகவான் பிறக்கும்போது ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் மகிழ்வுடன் வாழ்வார்கள்.
- குரு 6 அல்லது 8ல் இருந்தால் காலில் அடிபடும் சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்
- சந்திரனுடன் குரு இருந்தால் ராஜயோகம் உண்டு. மிக மகிழ்வுடன் வாழ்வார்கள்
- சந்திரனுடன் சேர்ந்து குரு உச்சமாக இருந்தால் அரசனைப் போல் வாழ்வார்கள்
- செவ்வாயுடன் குரு லக்னத்தில் இருந்தால் பலசாலிகளாக இருப்பார்கள்
- குரு சனியுடன் சேர்ந்து 4ல் இருந்தால் பிறந்த வீட்டு உறவு நன்றாக இருக்காது
- ராகுவுடன் குரு 8 அல்லது 12ல் இருந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும் பல காரியங்கள் தடைபடும்
- கேதுவுடன் குரு 5-ல் இருந்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் பலருக்கு வாரிசு இருக்காது