பூரி ஜெகநாதர் கோவில் அதிசயங்கள்
(Puri Jagannath Temple Miracle)
ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு அதிசயம் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கிறது .அந்த வகையில் ஒடிசா(Odissa) மாநிலம் பூரி(Puri) கடற்கரை பகுதியில் அமைந்த வைணவத் தலமான பூரி ஜெகநாதர்(Puri-Jagannath) ஆலயத்தில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.
கருவறை விக்ரக மர்மம்
உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோயில் இதுதான் இந்த ஆலயத்தில் ஜெகநாதர்(Jagannath) மற்றும் சுபத்திரை தேவி(Subatharai Devi), (கிருஷ்ணர் ,பலராமர் மற்றும் சுபத்திரை )ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவரின் சிலை உரிய சடங்குகளுடன் அதே மரத்தினால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
முழுமையடையா கடவுள் சிலைகள்
இதன் மூலவர் சிலைகள்முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் முழுமையடையாமல் இருக்கின்றன.
எதிராக பறக்கும் கொடி
இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம்(Sudharsana Sakkaram)நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே காட்சியளிக்கும்.
அதேபோல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும் இது சாதாரண கொடி அல்ல ஏனென்றால் இந்த கொடியானது காற்றில் எந்த பக்கம் வீசுகிறது அதற்கு எதிர் திசையில் பறக்கும்
நேர் எதிராக நடக்கும் நிகழ்வு
பொதுவாக காலையில் இருந்து மாலை வரை யிலான நேரங்களில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிரே நடக்கும்
கோபுரத்தின் நிழல்
இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்க முடியாது. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகள் பறப்பதில்லை.
சமைக்கும் உணவின் அதிசயம்
இந்த கோவிலில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாக இருக்கும் ஆனால் பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை அதுபோல மீதாமும் ஆவதில்லை.
மடப்பள்ளியில் இன்றுவரை விரகு அடுப்பு வைத்து மண்பானைகளை கொண்டுதான் சமைக்கிறார்கள் இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே விழுகின்றனர் அப்படி சமைக்கும் போது அதிலுள்ள பானையின் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்துவிடும் அதிசயம் நடக்கிறது .
அதிசய ஆலயம்
கடற்கரை ஒட்டி ஜெகன்நாதர்(Jagannath)இருந்தாலும் சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புற மாக காலெடுத்துவைத்து உள்நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.
ஆனால் அதே சிங்கத்துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப் புற மாக நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் சப்தம் நமக்கு கேட்கும் இதையும் மாலை நேரங்களில் தெளிவாக உணரமுடியும்.