நட்சத்திர சிறப்பம்சங்கள் பூசம்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
- நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள்
- புலன்களை அடக்கி சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள்
- பண வசதி கொண்டவர்கள் தர்மத்தை காப்பாற்றக் கூடியவர்கள்
- எல்லோரிடமும் நற்பெயர் எடுப்பவர்களாக இருப்பார்கள்
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மற்றவர்கள் அன்புடன் நோக்குவார்கள்
- சில நேரங்களில் மனதில் சோர்வு ஏற்படும் விரக்தி உண்டாகும் எனினும் கடுமையாக உழைப்பார்கள்
- எந்த செயலை செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள்
- முன்கூட்டியே பல விஷயங்களை உணர கூடியவர்கள்
- ஆராய்ச்சி மனம் கொண்டவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்
- ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் H,D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த நட்சத்திரத்திற்குரிய ராசி-கடகம்
- யோனி-மேஷம்
- கணம்-தேவ கணம்
- நாடி-மத்திம நாடி
- அதிபதி-சந்திரன்
- கிரகம்-சனி
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு உண்டானால் அது குணமாக ஏழு நாட்கள் ஆகும். உடல் நலம் பெற குரு மந்திரத்தை கூற வேண்டும்.
- எண்ணை தானம் செய்தல் நன்று.
- அரச மரத்தை வழிபட வேண்டும்
- பிறக்கும்போது ஜாதகத்தில் சனி சந்திரனுடன் சேர்ந்து ஆறு எட்டில் இருந்தால் இரண்டரை வயது குழந்தையின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்
- அடிக்கடி காய்ச்சல் வரும் லக்னத்தில் சனி உச்சமாக இருந்தால் மன்னரைப் போல் வாழ்வார்கள்
- அந்த உச்ச சனியை குரு பார்த்தால் பலரும் மதிக்கத்தக்க வகையில் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்
- சனி 4-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்
- சனி தனித்து எட்டில் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அடிக்கடி அடிபடும் ஆனால் நீண்ட ஆயுள் உண்டு இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது குறை இருக்கும்
- சனி ராகுவுடன் லக்னத்தில் இருந்தால் இல்வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும்