7ல் ராகு
லக்கினத்திற்கு 7 – ல் ராகு இருப்பின் அரசாங்க எதிர்ப்பு என்றும் இருக்கும்.இடம் மாறிக் கொண்டே இருப்பார். பூர்வீக சொத்துக்கள் விரயமாகும்.வேலை ஆட்களால் தொந்திரவும் அவர்களால் கஷ்டமும் , ஆத்ம நண்பர்கள் விலகலும் நேரும்.குடும்பத்தில் பல தொல்லைகள் நேரும்.செலவுகள் கட்டுக் கடங்காது.கடும் உழைப்பிற்கு பின்னும் மனம் அமைதி அடையாது.வறுமை நீங்காது .
பெண்களால் பண விரையம் , தாய்க்கு கண்டம் , அல்லது மாரகம் , கணவன் மனைவி மன வேற்றுமை , குழந்தை பிறப்பு சிரமத்தின் பேரில் ஏற்படலாம்.தம்பதிகளில் யாராவது ஒருவர் நோய் வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பார். குடும்ப அமைதி குறைவு , பெண்களால் அவமானமடைதல் , பொருளை இழந்து தரித்திரனாவான். சுபக்கிரக சேர்க்கை பார்வை இருந்தால் மேலே சொன்ன பலன்கள் மாறி நல்லதாக நடக்கும்.
அற்ப புத்தி உடையவன்.விதவைப் பெண் மூலம் தனம் சேர்ப்பான்.அடிக்கடி மனைவிக்குக் கண்டம் ஏற்படலாம். செய்யும் காரியம் அநேகமாக தோல்வி அடையாது.
மனைவி க்கு கருத்தடை ஆபரேசன் ( அ ) குடல் சம்பந்தப்பட்ட கருப்பை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். பாவக்கிரகங்கள் – சேர்க்கை – பார்வை இருந்தால் நிச்சயம்.சுபக்கிரசு சேர்க்கை – பார்வை இருந்தால் பாதிப்புகள் வராது.
இரு மனைவிகள் ஏற்படலாம்.இவர் தசா புத்தியில் புத்திர நாசம் மனைவி நாசம் – ககம் , தனம் இவற்றையும் தருவார். தேக ஆரோக்கியமற்று – தாய்ப்பால் அற்ற மனைவி அமைவாள். மனைவிக்கு உதர ரோகம் ஏற்பட்டு தொல்லை தரும்.
பொதுவாக இந்த ஜாதகன் மனைவிக்கு அடங்கியவன்.வீடு , நிலம் உள்ளவள்.
- மனைவி வரும் திக்கு– கிழக்கு அல்லது மேற்கு
- மனைவியின் குணம்– கெட்ட குணம்
- மனைவியின் நிறம் – ஸ்தானாதி பதியின் நிறம் மனைவி வரும் தூரம் – சுமார் 70 மைலுக்குள் , கணவன் அல்லது மனைவி நீச்சத் தொழில் புரிவோர் .








