Homeஜோதிட தொடர்வாழ்க்கைத்துணை தொடர்பான ரகசியம்: 7ல் நிற்கும் கிரகங்கள் உங்கள் காதல் வாழ்கையை எப்படி பாதிக்கின்றன?

வாழ்க்கைத்துணை தொடர்பான ரகசியம்: 7ல் நிற்கும் கிரகங்கள் உங்கள் காதல் வாழ்கையை எப்படி பாதிக்கின்றன?

7ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலனும் பாவ கிரகங்கள் இருந்தால் கொடுபலனும் அடையநேரிடும். 7ம் வீட்டில் குரு சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணையானது பொன் போன்ற நிறம் கொண்டவராக இருப்பார்.

7ம் வீட்டில் புதன் அமையப் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கை துணையானது மாநிறமாக இருப்பார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் கறுப்பு நிறமாக இருப்பார்கள். அதுபோல 7ம் வீட்டிலிருக்கும் கிரகங்களை கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையின் சுபாவத்தையும் வெளித் தோற்றத்தையும் அறியலாம்.

7ல் நிற்கும் கிரகங்கள்
  • 7ல் சூரியன் அமையப் பெற்றால் மணவாழ்வில் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது.
  • 7ம் வீட்டில் சந்திரன் புதன் அமையப்பெற்றால் இளமையான வாழ்க்கைத் துணை உண்டாகும்.
  • 7ல் சுக்கிரன் அல்லது செவ்வாய் அமையப் பெற்றால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய இளவயது வாழ்க்கைத் துணை அமையும்.
  • 7ல் குரு அமையப் பெற்றால் நல்ல குண நலம், அறிவாற்றல், கவர்ச்சியான உடலமைப்பு கொண்டவர் வாழ்க்கை துணைவராக அமைவார்.
  • 7ல் சனி ராகு அமையப் பெற்றால் முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக அமைவார்.

அதுபோல 7ல் அமையக் கூடிய கிரகங்களைக் கொண்டு கூட ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணையில் இயல்பினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

7ம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் நல்ல அழுகான நற்பண்புகளை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும்.

7ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் அமைந்தாலும் நல்ல பண்புள்ள வாழ்க்கை துணை அமையும்.

7ம் வீட்டில் சனி ராகு அமையப் பெற்றால் மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. குறை உள்ளவர் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புஉண்டாகும்.

சுக்கிரன் 7ம் வீட்டில் வலுவாக ஒரு ஆண் ஜாததகத்தில் அமையப் பெற்றால் பல பெண்களை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.

குரு பலமாக அமையப் பெற்றால் நல்ல மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஏற்படும்.

7ல் நிற்கும் கிரகங்கள்

சனி செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் அமையப் பெற்றால் வரக்கூடிய மனைவிக்கு ஒரு நிலையான மனநிலை இருக்காது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, உடலில் தழும்புகள் இருக்கும்.

7ல் சந்திரன் செவ்வாய் அமைந்து சனி பார்த்தால் மனைவிக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக 7ல் அமையக் கூடிய கிரகங்களை பொருத்துதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? கசப்பான சம்பவங்கள் நடைபெறுமா? என்பதைப் பற்றி அறியலாம்.

7ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் அவர்களுடய ஆசைகள் அபிலாஷைகள் திருப்திகரமாக நிறைவேறும். பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்று தெரியாமல் சில செயல்களை செய்து சில கசப்பான அனுபவங்களை அடைவார்கள்.

7ம் வீட்டில் புதன் போன்ற கிரகங்கள் பலஹீனமாக அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் திருப்திகரமான நிலை இருக்காது.

7ம் வீட்டில் ராகு பகவான் இருந்து சுபர்பார்வையின்றி இருந்தால் மண வாழ்க்கையே அமையாது. அப்படி அமைந்தாலும் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாழ்க்கைத் துணையாக அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 1, 7, 12ல் பாவிகள் அமையப் பெற்று 5ல் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றால் மணவாழ்க்கை அமைவது கேள்விக்குறியாகி விடும். அதுபோல சூரியன் 1, 6, 12ல் இருந்தால் ஏக தாரம்தான் செவ்வாய் சுக்கிரன் இணைந்து 5, 7, 9ல் இருந்தாலும் ஏகதாரம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் ராகு இணைந்து 6, 7, 8ல் இருந்தால் எத்தனை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை நன்றாக இருக்காது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

2 COMMENTS

  1. 7 இல் எந்தகிரகமும் இல்லை என்றால்.. துலாம் ராசி & விருச்சக லக்கினதிற்கு 7 இல் ரிஷப ராசி யில் எந்த கிரகமும் இல்லை ஐயா அதை எப்படி கணிப்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!