Homeஜோதிட தொடர்குரு : ராஜயோகங்களை தரும் குரு பகவான் !

குரு : ராஜயோகங்களை தரும் குரு பகவான் !

குரு

ஹம்ச யோகம்

லக்னத்திற்கு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) குரு உச்சம், ஆட்சியாக அமைந்து இருப்பாரானால் அது ‘அம்ச யோகமாகும்’. இதனால் ஜாதகர் முகவசியமாகவும், புகழ்மிக்கவராகவும், ஆராய்ச்சி திறனும், மிகப்பெரிய பதவிகளையும் பணத்தை நன்கு சேமிக்க கூடியவராகவும் இருப்பார். எந்த வகையிலாவது ஒரு துறையில் ஏற்றம் பெறுவார்.

கோடீஸ்வர யோகம்

தனத்தில் அதிபதி குருபகவான் கேதுவுடன் கூடி லக்னத்திற்கு கேந்திர இடம்பெற்றால் இது ‘கோடீஸ்வர யோகமாகும்’. இதனால் அந்த ஜாதகர் சாதரண நிலையில் இருந்தால் பெரிய அளவில் தொழில் செய்து சம்பாதிப்பார். எந்த வகையிலாவது எதிர்பாராத நல்லதொரு வாழ்க்கை இந்த யோகத்தால் ஜாதகர் அடையமுடியும்.

குரு

அங்கிச் யோகம்

உங்க லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு நட்பு, ஆட்சி, உச்சமாக அமையின் அது அங்கிச யோகமாகும். இதனால் உடலில் விந்துவை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை உடையவராக இருப்பர். தன் மூளையை நன்கு பயன்படுத்துவீர்கள். நல்ல புத்திர அம்சங்களை,சமூகத்தில் ஒரு மதிப்புள்ளவராக இருப்பார். கடல் அமைப்பை நன்கு பெற்று இருப்பவர். ஆனால் பெண் மோகம் அதிகம் இருக்கும்.

குருவுக்கு கேந்திரத்தில் 1,4,7,10-ல் சந்திரன் இடம் பெற்றால் இந்த யோகம். இதன் பலன் ஜாதகத்தில் எவ்வித தோஷம் இருப்பின் அவை நீங்கும். அரசனுக்கு சமமான வாழ்க்கை வாழ்பவர். ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக கூடியவர். எத்தனை கஷ்டம். நஷ்டம் ஏற்பட்டாலும் துவண்டுவிடமாட்டீர்கள். எப்பொழுதும் பண வருவாய் இருந்துகொண்டே இருக்கும்.

குருவும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் நீசம் பகையில்லாமல் இடம்பெறின் இந்த யோகம் உண்டாகும். இதனால் நல்ல தந்திரசாலியாகவும், இத்துடன் ஏதேனும் ஒரு நுட்பத்தை அறிந்து ,எந்த வகையிலாவது பலர் பாராட்டும் அளவில் ஜாதகர் ஈடுபடக்கூடும்.

குரு

குருவும்- சூரியனும் சிம்மம், தனுஷ், மீனம் இவற்றில் இடம்பெற்றிருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசு பீடத்தை எத்தவகையிலும் ஆளக்கூடியவராக இருப்பார் அரசு சகாயம் உடையவர். தன் பிறப்பு இடத்தின் மூலம் பெருமை அடைபவர். பேச்சால், செயலால், எதையும் சாதிப்பவர்.சிவ பக்தர். எதையும் நன்கு நிர்வகிக்கும் ஆற்றல் உடையவர்.

குருவும். சந்திரனும் லக்னத்திலிருந்து லக்னாதிபதி சுபர்களுடன்கூடி இருந்தால் இந்த யோகம். இதன் பலன் அரசியலில் ஈடுபாடு, பல பொது சமூக சேவைகள் அல்லது டிரஸ்டு நிறுவனம் இதுபோன்றவற்றில் கௌரவ பதவி, பவர், பணியாட்களை பெற்று இருப்பவர் சரித்திர சான்றாககூட திகழ்பவர்.

குருவுக்கு திரிகோணத்தில் 1, 5, 9-ல் சந்திரன் நீசம் பகை இல்லாமல் இருப்பின் இந்த யோகம். இதனால் கடைசிவரை ஜீவனக் கஷ்டம் இராது. முகஸ்துதி உடையவர். முன்னேற்றம் உள்ளவர். துன் தேஜஸை நன்கு அமையப் பெற்றவர். ஏதேனும் ஒரு துறையில் பெயர் புகழுடன் விளங்ககூடும். உங்க சொல்லுக்கு மக்கள் மதிப்பு இருக்கும்.

குருவுக்கு திரிகோணத்தில் 1, 4, 7, 10-ல் செவ்வாய், பகை நீசம் இல்லாமல் இடம்பெற்று இருப்பது இந்த யோகமாகும். இதன் பலன் மணி, மனை, தோட்டம் இப்படி பூமி இனங்களினால் பயன் பெறுவீர்கள். ஸ்திர சொத்தின் மூலம் செல்வம் சேரும். எதையும் சாதிக்க கூடியவர். வாழ்வில் எந்தவகையிலும் போராடி எப்படியும் தான் நினைத்ததை அடைய நினைப்பவர்.

குரு

குருவும் புதனும் கேந்திர, திரிகோணத்தில் குறிப்பாக இயற்கை சுபக்கிரக ராசியில் இடம்பெற்று இருப்பது இந்த யோகம். இதனால் படிப்பு, பட்டம், தொழில், கதை, கவிதை, இதன் ஈடுபாடு எந்தவகையிலாவது சில துறைகளிலும் நன்கு பிரகாசிக்க கூடியவராக இருப்பீர்கள். லீகல் அட்வைசராக இருப்பவர்களுக்கு இந்த யோகம் கூடியமட்டும் அமைந்து இருக்கும்.

குறிப்பாக குருபகவானையும், தட்சிணா மூர்த்தியையும், வியாழக்கிழமையில் வழிபடுவதுடன் இவர்களுக்கு முல்லை, செம்மங்கி மலர்களை மாலையாக சூடி, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டக்கடலை, நெய் பொங்கல் நெய்வேத்தியம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்து அபிஷேகமும் செய்து வழிபடவும்.

கரும்பு சாற்றினால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும். யானைக்கு ஏதேனும் தானம் செய்யலாம். குறிப்பாக சிதம்பரம், கடலூர், தஞ்சை நாச்சியார் கோவில் இங்கே சென்று தரிசிப்பது,அர்ச்சனை செய்வது, குரு ஸ்தலமான திரு ஆலங்குடி சென்று ஆபத்துசகாஸ்வரரை வழிபடவும். இத்தகைய பரிகாரங்களை சரியாக செய்துகொண்டால் பட்டமங்கலம் அசுப பல குருவின் அமைப்பில் இருந்து விடுபடலாம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!