Homeகோவில் ரகசியங்கள்அபூர்வ தமிழ் கோவில்: 8 தல விருட்ச மரங்கள் கொண்ட கோவிலின் சிறப்புகள்

அபூர்வ தமிழ் கோவில்: 8 தல விருட்ச மரங்கள் கொண்ட கோவிலின் சிறப்புகள்

8 தல விருட்ச மரங்கள் இருக்கும் அபூர்வ கோவில்

ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும்.ஆனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் 8 தல விருட்சங்கள் உள்ளன .

முந்தைய காலங்களில் அடர்ந்த வணப்பகுதிகளில் இருந்தே ஆலயங்கள் உருவாகின.பின்பு வன பகுதிகள் நகரங்களாக உருமாற்றம் செய்ய பட்டபோது  அந்த பகுதியில் எந்த மதம் அதிகமாக இருந்ததோ ,அந்த மரம் கோவில் விருட்சமாக வைக்க பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

8 தல விருட்ச மரங்கள்

பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும் .ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும்.ஆனால் கும்பகோணம் அருகே உள்ள

திருவீசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில் 8 தல விருட்சம் மரங்கள் இருக்கும் அதிசயத்தை காணலாம் .

தல விருட்சங்கள்: 

வன்னி, உந்துவில்வம், புன்னை,மகிழம் ,ஆல், அரசு, நெல்லி,பரசு வில்வம் என 8 தல விருட்சங்கள் உள்ளன .

8 தல விருட்ச மரங்கள்

இன்னும் சில அபூர்வங்கள்

பொதுவாக எல்ல சிவ தலங்களில் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் முதலில் இருக்கும் பின்னர் பலிபீடம்,நந்தி என்று இருக்கும் .ஆனால் இந்த ஆலயத்தில் நுழையும் போது நந்திதான் முதலில் உள்ளது.

இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது ஏழு சடைகள் இருக்கும்.

சித்திரை 1,2,3 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி கதிர் லிங்கத்தின் மீது விழுகிறது.

கோவிலின் தென்புற மதில் சுவருக்கு அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது.காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையை கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்க பட்டுள்ளது .

கோவில் இருப்பிடம் 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!