Homeஜோதிட குறிப்புகள்ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

ரேவதி நட்சத்திர ரகசியங்கள்

ரேவதி நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண அமைப்புகள்

ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும். அழகான உடலைப்பும், வசீகரமான கண்களும் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தி முந்திடுவார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பம்

அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்ப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தொழில்

முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரும் நோய்கள்

இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்.

திசை பலன்கள்

ரேவதி நட்சத்திராபதி புதன் பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இத்திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் திசை காலங்களில் புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.

இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.

மூன்றவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.

நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும், சந்திரன் 10வருடமும் செவ்வாய் 7வருடமும் நடைபெறுவதால் இத்திசைகளின் காலங்களிலும் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

ரேவதி நட்சத்திர காரர்களுக்கு ராகு திசை மாராக திசையாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

விருட்சம்

ரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.

ரேவதி நட்சத்திரம் முதல் பாதம்

தேன்போல் தித்திக்கும் மதுர வார்த்தைகள் பேசுவான். சண்டை, சச்சரவுகளை உண்டு பண்ணுவதில் ஆர்வம் உள்ளவன். நுட்ப அறிவாளி, மிகுந்த நற்பண்பு உடையவன. எப்போதும் மனக்கவலை உடையவன். களிப்புடையவன்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம்

தான் என்ற அகங்காரமும், திருட்டு புத்தி உடையவன். அஞ்சாநெஞ்சன், சுகவான், கோபக்காரன், மிகுந்த பாலுணர்வும், அலைபாயும் மனதை உடையவன். மென்மையான தேகம் கொண்டவன்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்

பால்போலும் இனிய வார்த்தைகள் பேசுவான், அறிவீனன், தீச்செயல்கள் செய்வான். கபடதாரி, செல்வம் அற்றவன், இரக்கமுள்ள கொடையாளி, நற் பண்பு இல்லாதவன்.

ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம்

தன்மான உணர்வுள்ள அஞ்சா நெஞ்சன்,வாய்மை பேசுவான்,குல சிறப்பை குலைப்பவன்,சௌக்கியவான்,விரோதிகளை வெல்வான்,துணிச்சலுடன் காரியம் சாதிப்பவன்.

ரேவதி நட்சத்திரத்தில் செய்யவேண்டிய காரியங்கள் :

ருது சாந்தி,பூ முடித்தல், பெயர் சூட்ட, காது குத்த, அன்னப்பிரசானம் செய்ய, உபநயம், விவாகம், ஆபரணம் பூண, விதை விதைக்க,பிரயாணம் செய்ய, கும்பாபிஷேகம், கிரக ஆரம்பம், மருந்துண்ண, குளம் வெட்ட, சுபம் செய்ய ஏற்ற நட்சத்திரம்.

ரேவதி நட்சத்திர அடிப்படை தகவல்:

நட்சத்திரம் -ரேவதி

நட்சத்திர அதிபதி -புதன்

நட்சத்திர நாம எழுத்துகள் -D,தே-தோ-ச-சி(CH)

கணம் -தேவ

மிருகம் -பெண்யானை

பட்சி-வல்லூறு

மரம் -இலுப்பை

நாடி -வாம பார்சுவ நாடி

ரஜ்ஜு -இறங்கு பாதம்.

அதி தேவதை – அரங்கநாதன் ,ஈஸ்வரன்

ஆதி சங்கரர் அருளிய நட்சத்திர மாலா

சூலினே நமோ நம :கபாலினே நம:சிவாய பாலினே
விரிஞ்சி துண்ட மாலினே நம :சிவாய
லீலினே விசேஷ முண்ட மாலிநே நம:சிவாய சீலினே
நம ப்ரபுண்ய சாலினே நம:சிவாய

பொருள் :
சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும்,தம்மை வணங்கும் ஜீவர்களை காப்பவரும்,பிரம்மாவின் கபாலத்தை உடையவரும்,ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும்,நிறைய புண்ணியயும் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!