சனி பெயர்ச்சி பலன்கள்-2023:ரிஷபம்(தொழில் ஸ்தான சனி )
சுக்கிர பகவானின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசிக்கு சனி 9,10-ம் அதிபதி இதனை தர்மகர்மாதிபதி யோகம் தரும் சனி என கொள்ளலாம்.சரி இவ்வளவு காலம் மகரம் என்றும் ஒன்பதாம் இடத்தில் இருந்து தற்போது பத்தாம் இடம் எனும் கும்பத்திற்கு வருகிறார். உங்களின் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த சனிபகவான் உங்களின் 12-ம் வீடு, 4 மற்றும் 7-ம் வீடுகளை பார்வையிடுகிறார்.
சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date
இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
பத்தாமிடம் என்பது தொழில் வேலை என்றாலும் அது கௌரவத்துக்குரிய ஸ்தானமாகும். பத்தாம் இடத்தில் அமர்ந்த சனி ரிஷப ராசிக்காரர்களுக்கு முதலில் திடமான ஒரு தொழிலை கொடுப்பார். அந்தத் தொழிலை நல்ல விதமாகவும், குறுக்குவழியில் நன்கு வளரச் செய்வார். தொழில் வளர கையில் காசு புரள செய்வார். பணப்புழக்கம் 4 பேரை இவரை நோக்கி இழுக்கும். சனி பகவான் பத்து மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.
நீங்கள் விருப்பமாக போற்றி வரும் உறவுகள், கொள்கைகள், தொழில்கள், பொருள்கள் அனைத்திலும் ஒரு கடினமான குறுக்கீடும், சேதாரமும் ஏற்படும். அவமானம் அடைய வேண்டிய சில சந்தர்ப்பங்களும், உடல் நலிவால் வேதனையும் அடையக்கூடிய சில சூழ்நிலைகள் ஏற்படலாம்.
அலைச்சல் ,அலைச்சல் ஓயாத அலைச்சல் அதனால் எந்தவிதமான லாபத்தையும் நிம்மதியையும் சொல்லிவிட முடியாது. களத்திர சுகமம் வீட்டின் அமைதியும் கூட பாதகமாய் போய் வருத்தத்தை தரலாம்.
பதவி பறிபோதல், தொழில்வழி தொல்லை, அதிகார வீழ்ச்சி, வெளியூர் பயணம், வேலை மாற்றம், தீராப்பகை, பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.
சனி தான் நின்ற இடத்திலிருந்து 3, 7, 10-ஆம் பார்வையாக ராசிகளின் மீது பார்வையை பதிப்பார்
ரிஷப ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்த சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் ரிஷபத்தின் விரய வீடு எனும் 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது செலவுகளை குறிக்கும் வீடு.சனி பார்வை பட்ட இடத்தை சுருக்குவார். எனவே ரிஷப ராசியினரின் செலவு மிகக் குறைந்துவிடும்.
12-ம் இடம் தூக்கத்துக்கு உரிய வீடு இதனால் இவர்களுக்கு தூங்கும் நேரம் குறையும். 12-ம் இடம் படுக்கை ஸ்தானம் அதை சனி பார்ப்பதால் நல்ல மெத்தை ,கட்டில் இவற்றை கொடுக்கமாட்டார். கிடைத்த இடத்தில் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான்.சனி தனது பார்வையால் பார்க்குமிட பலனை அழிப்பார்.இத் தன்மையால் 12ம் வீட்டின் கெடு பலன்கள் மறையும்.
சனி தனது ஏழாம் பார்வையால் ரிஷப ராசியின் 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ரிஷப ராசிக்கு 4மிடம் என்பது சிம்ம ராசி. இதன் அதிபதி சூரியன். ஏற்கனவே சனிக்கும் சூரியனுக்கும் ஆகாது, இந்த நிலையில் சூரியனின் வீடு நாலாம் இடமாகி அதனை பார்க்கும் சனி அதனை பாதிப்படைய செய்வார்.
முதலில் ஜாதகருக்கும் அவரின் தாயாருக்கும் பெரும் கருத்து வேற்றுமையை உண்டாக்கி சண்டையை இழுத்து விடுவார். இதன் அடிப்படை காரணம் வீடாக இருக்கும். அடுத்து ரிஷப ராசி குழந்தைகள் படித்து பாஸ் செய்வதே உம்பாடு எம்பாடு என்றாகிவிடும். இந்த சனி பெயர்ச்சியில் ரிஷப ராசியில் வயல், தோட்டம், காடு வைத்திருப்போர் கொஞ்சமாக செலவழிக்க பழகுங்கள். அதிக முதலீட்டை தவிர்ப்பது நலம்.
இந்த சனிப்பெயர்ச்சி முடியும் வரை சற்று காத்திருக்கவும். பால் சார்ந்த உற்பத்தியாளர்கள் கவனமாக இருத்தல் அவசியம். பயம் காட்டுவதாக எண்ண வேண்டாம். உங்களின் 4 ஆம் வீட்டு அதிபதி சூரியன் அதனை சனி நேராக பார்க்கும் போது சற்று கலவரம் தான்.
ரிஷப ராசியின் ஏழாம் வீடு விருச்சகம் சனி தனது பத்தாம் பார்வையாக விருச்சிகத்தை பார்க்கிறார். சனி பார்வை பலன்களை தாமதப்படுத்தும். எனவே திருமணம் முடித்து விட வேண்டும் எனும் ரிஷபராசி ஜாதகர்கள் இந்த சனி கும்பத்திற்கு போவதற்கு முன் முடித்து விட்டால் நல்லது. இல்லாவிட்டால் மிக தாமதமாகிவிடும்.
ரிஷப ராசியின் ஏழாம் அதிபதி செவ்வாய் இதனை சனி பார்வையிடும்போது நல்ல காலத்திலேயே கோபம் கொண்டவர்கள் இப்போது முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்களாகி விடுவார். ஏழாம் வீடு என்பது வியாபாரத்தை குறிக்கும். இதுனால் வரை பரபரப்பாக சென்ற வணிகம் இப்போது சற்று சோம்பி நிற்கும். இப்போது பங்குதாரரை சேர்த்தால் சற்று முட்டாளான சோம்பேறியாக வாய்த்துவிடுவார். தொழிலில் லாபம் காண்பதற்கு சிலசமயம் சில அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனினும் முழு முயற்சியும் உழைப்பும் உங்களை அருமையான தொழிலதிபர் ஆக்கிவிடும்.
பரிகாரம் :
சனிக்கிழமை சனி ஓரையில் அருகிலிருக்கும் சிவாலயங்களில் சென்று சனி பகவானுக்கு எள் முடிச்சு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.இன்னல்கள் குறையும்.