Homeஜோதிட குறிப்புகள்சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் தரும் சில ராஜயோகங்கள்

சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் தரும் சில ராஜயோகங்கள்

சனி பகவான்

உங்களுடைய ஜெனன லக்னமோ ராசியோ துலாம்,தனுர் , கும்பம் , மீனம் , ரிஷபம் , கடகம் இவையாக இருக்க வேண்டும்.இந்த ராசிகளுக்குள் ஒன்றில் சனீஸ்வரர் அமர்ந்து இருக்க வேண்டும். அப்படி அமைந்து இருக்கும் சனிக்குக் குரு பகவான் தொடர்பு இடம் பெற்று இருக்க வேண்டும்.

குரு பார்ப்பது , சனியுடன் சேர்ந்து இருப்பது அல்லது குருவின் நட்சத்திரங்களில் சனீஸ்வரர் இருப்பது மேலே தரப்பட்டுள்ள ( 6 ராசிகளுக்குள் ) லக்னம் , ராசியாக அமைந்து அங்கு இருந்து எண்ணும்போது சனீஸ்வரர் 3 , 5 , 10,11 ஆக இடம் பெற்று இருப்பது இப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஜாதகத்தில் சனீஸ்வரர் இருந்தால் பொங்கு சனி யோகம் உடையவர் நீங்கள் . இப்படி அமையப் பெற்ற மேற்கூறிய எல்லா விதிகளிலும் ராசி . அம்சம் இரண்டிலும் அமைந்தவர்கள் பூர்வ புண்ணிய பலன் உடையவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெனன லக்னம் அல்லது ராசிக்கு கேந்திர வீடுகளில் 1 , 4 , 7 , 10 இந்த ஸ்தானங்களுக்குள் சனீஸ்வரர் அமர்ந்து அவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அது சசயோகமாகும்.இதுவும் சனீஸ்வரரின் அதிர்ஷ்டத்தைப் பெறும் ஒரு அமைப்பாகும்.

சனி பகவான்

சனி பகவானும் , சந்திர பகவானும் 1 , 4 , 5 , 7 , 9 , 10 போன்ற ஸ்தானங்களுக்குள் இருந்தால் அது சனீஸ்வரரின் சனி சந்திர யோகமாகும்.இந்த ஸ்தானங்கள் துலாம் , மகரம் , கும்பம் , ரிஷபம் , கடகமானால் சிறப்பு.

சனீஸ்வரர் பரிவர்த்தனை பெற்று அந்த பரிவர்த்தனை கேந்திர,திரிகோணாதிபதி பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும். அப்படி இருப்பின் அவரால் அனுகூலம் அடையலாம்.

ஷட்பலம் என்ற 1. ஸ்தான பலம் , 2. கால பலம் , 3. நைசர்கிக பலம் , 4. திக்கு பலம் , 5. அயன பலம் , 6. ஜேஷ்ட பலம் . இந்த ஆறு வகையான பலன்களாலும் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு மேலே இருக்க வேண்டும்.

அஷ்டவர்க்கப்படி இவர் உங்க ஜாதகத்தில் அனுகூல இடத்தில் அதாவது எந்த லக்னமாக இருந்தாலும் 3 , 6 , 10 , 11 ல் இடம் பெற்று அந்த இடம் இவருக்கு பகை , நீச்சம் இல்லாமல் அவர் நின்ற இடத்தில் அவருக்கு பிரஸ்தார பரல் 4 அல்லது அதற்குமேல் அமையின் அல்லது சர்வாஷ்டகவர்க்கப்படி 25 பரல் அல்லது அதற்கு மேல் அமையின் இவரால் நீங்கள் அனுகூலங்களைப் பெற முடியும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!