Homeஜோதிட குறிப்புகள்ஜாதகத்தில் செவ்வாய் பலம் மற்றும் பலவீனங்கள்

ஜாதகத்தில் செவ்வாய் பலம் மற்றும் பலவீனங்கள்

 செவ்வாய் 

ஜாதகத்தில் செவ்வாய் நிலையை கொண்டு ஒருவரது உடல் நலம், அவர் தைரியமானவரா? அவருக்கு ஏதாவது விபத்து நிகழுமா? போன்ற விவரங்களை கூறி விடலாம். செவ்வாய் பூமிகாரகன், சகோதரர்களுக்கிடையேயான  உறவையும் குறிக்கும்.

 செவ்வாய் லக்னத்தில் இருந்தால்

அந்த ஜாதகர் பூமி,வாகனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார். நண்பர்கள் பலர் அமைவர்.சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.பலர் ராணுவத்தில் பணியாற்றுவார்கள்.பலசாலியாக இருப்பார்கள்.

செவ்வாய் பலவீனமாக அல்லது பாப கிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது வாழ்க்கையில் பல சிக்கல்கள் நேரும். மேலும் பலருக்கு அடிக்கடி விபத்துகள் நிகழும். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்படும். சிலருக்கு மறுமணம் செய்ய வேண்டிய சூழல் அமையும்.சிலர் உரிய நேரத்தில் உணவு அருந்த மாட்டார்கள். தலைவலி, மூட்டுவலி உண்டாகும்.

லக்னத்திற்கு 2-ல்  செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகருக்கு பலவிதமான சந்தோஷங்களும் கிடைக்கும்.அதிகமாக உணவு அருந்துவார்.அதனால் வயிற்றில் கோளாறு ஏற்படும்.

செவ்வாய் பாப கிரகத்துடன் இருந்தால் அல்லது பார்க்கப்பட்டால் அவரது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு மறுமணம் செய்யும் நிலை உண்டாகும்.செவ்வாய் பலவீனமாக இருந்தால் ஜாதகர் சரியாக சாப்பிட மாட்டார். வேலைக்காக அலைந்து கொண்டிருப்பார். சிலர் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பார்கள்.சிலருக்கு பித்தம்,தோல் நோய் ஏற்படும்.

லக்னத்திற்கு 3-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார். நன்கு உணவு உண்பார்.செவ்வாய் ராகு, சனியால் பார்க்கப் பட்டால் அவருக்கு சகோதரர்களுடன்  உறவு சரியாக இருக்காது, சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் வரும் ,சிலரது உடல் மிகவும் பருமனாக இருக்கும்.

லக்னத்திற்கு 4-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் பல தொல்லைகள் ஏற்படும்.பலருக்கு திருமணத்தடை உண்டாகும்.நிறைய பேசுவார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய் இருந்தால் அவர் எப்போதும் சண்டையிடுவார். கணவன் மனைவிக்கிடையே உறவு நன்றாக இருக்காது.நன்கு சாப்பிடுவார், தூங்குவார், பிறருக்கு தொல்லைகள் தருவார்.

லக்னத்திற்கு 5-ல் செவ்வாய் இருந்தால்

செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் இருந்து அந்த செவ்வாயை பாவ கிரகம் பார்த்தால் அவருக்கு வயிற்றில் நோய் ஏற்படும்.குழந்தை பிறப்பதில் பிரச்சனை உண்டாகும். ,பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது, கர்ப்பப்பையில் பிரச்சனை, ரத்தக் குறைவு இருக்கும்.உடலில் கால்சியம் குறைவாக இருக்கும்

லக்னத்திற்கு 6-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் அதிகமாக கோபப்படுவார்.செவ்வாய் சனியின் பார்வை இருந்து ஜாதகருக்கு தசா காலங்கள் சரியில்லாமல் இருக்கும் பொழுது யாரோ சூனியம் செய்து விட்டதாக உணர்வார்.அவர் மிளகாய், உப்பு, வறுத்த பொருட்களை அதிகமாக உண்பார்கள். அதனால் ரத்தக்கொதிப்பு உண்டாகும்.

லக்னத்திற்கு 7-ல் செவ்வாய் இருந்தால்

ஜாதகருக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படும்.செவ்வாயின் ஏழாம் பார்வை லக்கனத்திற்கு இருப்பதால் ஜாதகர் ருசியாக  உண்பார். கோபம் அதிகமாக வரும். இரண்டாம் பாவத்திற்கும் பார்வை இருப்பதால் தேவையற்றதை பேசுவார். அதிகம் உண்பார். அவரது காலில், வயிற்றில், பிரச்சனைகள் ஏற்படும்.

லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் இருந்தால்

சிலருக்கு ரத்த சம்பந்தமான நோய் இருக்கும்.சிலருக்கு அடிக்கடி விபத்து நிகழும்.செவ்வாய் சனியால் பார்க்கப் பட்டால் தீய தசா புத்திகளில் சிலருக்கு உயிருக்கே ஆபத்து உண்டாகும்.செவ்வாய் ராகுவுடன் இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும். எட்டில் உள்ள செவ்வாய் இரண்டாம் பாவத்தையும் ,மூன்றாம் பாவத்தையும் பார்க்கும். சிலர் வீண் பேச்சால் பகைவர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.

லக்னத்திற்கு 9-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் யாரையும் மதிக்க மாட்டார்.தந்தையுடன் உறவு சரியாக இருக்காது.உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்காது.அந்த செவ்வாய் சனி ராகுவுடன் இருந்தால் அவர் தன் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்.வீணாக சுற்றிக் கொண்டிருப்பார் ,மரியாதை குறைவான நபர்களுடன் பழகுவார், சரியாக உணவு உண்ண மாட்டார்.

லக்னத்திற்கு 10-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார். குடும்பத்தின் குத்துவிளக்காக விளங்குவார். ,கடுமையாக உழைப்பார்.சந்திரனுடன் செவ்வாய் இருந்தால் பெரிய அரசியல்வாதியாக திகழ்வார்,நிறைய நிலங்கள் இருக்கும்.குருவுடன் செவ்வாய் இருந்தால் சிலர் பிறரை ஏமாற்றுபவர்கள், சொத்துக்களை அபகரிக்க முயல்வார்கள்.

லக்னத்திற்கு 11-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் பணக்காரராக இருப்பார்.செவ்வாய் சனி மற்றும் ராகு உடன் இருந்தால் வயிற்றில் பிரச்சினை ஏற்படும்.

லக்னத்திற்கு 11-ல் செவ்வாய் இருந்தால்

அந்த ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார்.செவ்வாய் சனியுடன் இருந்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.செவ்வாய் குருவுடன் இருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அவர்கள் புகழுடன் விளங்குவார்கள்.

 செவ்வாய்க்குரிய பரிகாரங்கள் 

வறுத்தஉணவுப்பொருட்களைஅதிகம்உண்ணகூடாது.செவ்வாய்க்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.குலதெய்வ வழிபாடு அவசியம்.தினமும் இரவில் தூங்குவதற்கு முன் சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயரை நான்கு முறை சுற்றி வந்து வணங்க வேண்டும்.வெல்லம் வாழைப்பழம் ,பூந்தி ஆகியவற்றை அவருக்கு பிரசாதமாகப் படைத்து பின்னர் அவற்றை பிறருக்கு தந்து தானும் உண்ண வேண்டும்

 சகோதரர்களுடன் இணக்கமாக பழக வேண்டும்.படுக்கை அறையில் சிவப்பு வண்ணத்தை தவிர்க்கவும்.வீட்டில் தென்கிழக்கில் நீர் பிடித்து வைப்பது கூடாது

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!