Homeஜோதிட குறிப்புகள்சக்தி தரும் மந்திரம் : ஜாதகத்தில் உள்ள குறை நீக்கி பகை வெல்லும் மந்திரம்!

சக்தி தரும் மந்திரம் : ஜாதகத்தில் உள்ள குறை நீக்கி பகை வெல்லும் மந்திரம்!

மந்திரம்

லக்னாதிபதி பலவீனமடைந்து அவரது தசை நடைபெறும் காலங்களில் ஜாதகருடைய அரசாங்க உத்யோக நண்பர், உறவினர் மற்றும் திடீரென முளைக்கும் சக்திகளால் எதிர்ப்பு உருவாகலாம்

10ஆம் வீட்டோன் 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்த அவரை பாவர் ஒருவர் பார்த்தால் பொதுமக்களால் எதிர்ப்பு ஏற்படலாம்.

3-ஆம் வீட்டுக்கு உடையவன் 6 ,8, 12ஆம் வீடுகளில் ஒரு ஸ்தானத்தில் இருந்து அந்த ஸ்தானத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்துகொண்டோ, பார்வையிடப்படியோ இருப்பின் சகோதரர் மூலம் எதிரிகள் வருவர்

லக்னாதிபதி உச்சம் பெற்று சந்திரனை நோக்கினால் செல்வம் சேர்ப்பதன் மூலம் பகை அதிகரிக்கலாம். ஆனால் அவர்களும்வெல்லும்  திறமையும் வெளிப்படும்

சூரியனும் ராகுவும் 7ஆம் இடத்தில் ஒன்று சேர்ந்து இருந்தாலும் 12இல் சேர்ந்து இருந்தாலும் தங்கை மூலமாகவும் மற்ற பெண்கள் வழியாகவும் எதிரிகள் உருவாகலாம்

2ஆம் அதிபதியுடன்  புதன், குரு, சுக்கிரன் சேர்ந்து 6,8,12-ல் இருந்தால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பகை உருவாகும்

1 அல்லது 8-ஆம் வீட்டுகாரகன் குருவாகி இருந்து 9ஆம் வீட்டுக்கு உடையவன் பலம் குறைந்து, 11ஆம் வீட்டுக்கு உடையவனும் பலவீனம் அடைந்திருந்தால் பொருளாதார நெருக்கடியும் பகையும் வலுவாகும்

பொதுவாக 6ஆம் வீட்டில் பாவிகள் இருக்கப்பெற்றவர்கள், சனி விரயமாவதுடன் சுக்கிரன் கன்னியில் மறையப் பெற்றவர்கள், எதிரிகளால் பொருளாதார இழப்பை சந்திப்பர்

இப்படியான ஜாதகர்கள் சிவபெருமானின் சூலாயுதத்தை மனதில் தியானித்து கீழ்காணும் மந்திரத்தை சொல்லி வழிபாடு  செய்யலாம்

 திங்கள்கிழமை, பிரதோஷம், மாத சிவராத்திரி முதலான புண்ணிய தினங்களில் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பகை யாவும் காணாமல் போகும்

ஓம் ப்ரணவாசு நவாரூடம் துராதர்ஷம் மகா பலம்

பஞ்சாஸ்யம் தசகர்ணம் ப்ரதி வக்த்ரம் த்ருலோசனம்

தம்ஷ்ட்ரெள கராள மத்யுக்ரம் முக்தா நாதம் கதர்ஜயம்

கபாலா மாலா பரணம் சந்த்ரார்த்த க்ருத சேகரம் 

மகாபாசு பதம் த்யாயேத் சர்வா பீஷ் டார்த்த சித்தயே!!

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!