அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-1

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிட குறிப்புகள்-பகுதி-1

ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், சனி, ராகு இவர்கள் மூவரைத் தவிர மற்ற ஆறு கிரகங்களில் எவர் இருந்தாலும் ஜாதகர் மத கோட்பாடுகளில் சித்தம் செலுத்த கூடியவராக இருப்பார்.

லக்னாதிபதியும் 9-ம் வீட்டு அதிபதியும் தொடர்புகொண்டு 9-ம் வீட்டு அதிபதி குருவுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகர் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்படுகிறவர்கள் ஆவார்கள்.9-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்து, அதை குரு பார்த்தாலும் இந்தப் பலன் பொருந்தும்.

லக்னாதிபதியும் 4-ம் வீட்டு அதிபதியும் 9-ம் வீட்டு அதிபதி உடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அவரவர் வீடுகளைப் பார்த்தால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். குறிப்பிட்ட பல வகைகளில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டு விசேஷமானது.

  • சூரியனுக்கு-22வயது
  • சந்திரனுக்கு-24வயது
  • செவ்வாய்க்கு-28வயது
  • புதனுக்கு-32வயது
  • குருவுக்கு-16வயது
  • சுக்கிரனுக்கு-25வயது
  • சனிக்கு-35வயது
  • ராகுவுக்கு-42வயது
  • கேதுவுக்கு-48வயது

மேலே சொல்லப்பட்ட எண் கொண்ட வருடங்கள் அந்தந்த கிரகத்தின் மூலம் நற்பலன்கள் உண்டாவதற்கு ஆரம்ப காலம் ஆகும். பலமுள்ள சூரியன் 9-ல் இருந்தாலும், ஒன்பதாம் வீட்டுக்கு உரியவராக இருந்தாலும், சூரியன் மூலம் ஜாதகருக்கு 21 வயது முடிந்து 22வது வயதில் தொடங்கும் போது அதிர்ஷ்ட காலம் ஆரம்பமாகும் இப்படியே மற்ற கிரகங்களுக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5-ம் வீட்டுக்குரிய கிரகம் 10-ம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு இந்த வாய்ப்பு அமையக்கூடும். 5-ம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆகும். சுக்கிரனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆண்டு 25. அந்த 25 ஆம் ஆண்டில் சுக்கிரன் புத்திர ஸ்தானாதிபதியாகையால்,ஜாதகருக்கு ஒரு செல்வ மகனை அளிக்கக்கூடும். அல்லது தொழிலில் ஒரு ஏற்றத்தை வழங்கக் கூடும். அல்லது லாட்டரி ரேஸ் போன்ற இடங்களில் திடீரென்று பணம் வரக்கூடும்.இப்படியே அந்தந்த பாவாதிபதிகளின் நிலையை பார்த்து அந்த ஆண்டிலிருந்து பலன்கள் உண்டாகும் என்று முடிவு செய்துவிட வேண்டும்.

ஜோதிட குறிப்புகள்

ஒரு ஜாதகத்தில் நல்ல பாவத்திற்கு சனி அதிபதியாகி நாலாம் வீட்டில் இருப்பாரானால் அந்த ஜாதகர் சனியின் ஆண்டாகிய 35 வயதுக்கு பிறகு ஏராளமான நிலங்கள் பொருட்களை அடைய துவங்குவார்

இதே சனி பத்தாம் வீட்டில் இருந்தால் 35 வயதில் இருந்து ஜாதகருக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கிரகமும் எந்த பாவத்திற்கு அதிபதி என்று பார்த்து எந்த பாவத்தில் அவர் இருக்கிறார் என்பதையும் பார்த்து அந்த பாவங்களுக்கு உரிய காரகத்துவங்களை கொண்டு அந்த கிரகத்தின் ஆண்டிலிருந்து அப்பலன்கள் ஏற்படும் என முடிவு செய்யப்படுதல் முறையாகும்.

புதன் ஐந்தாம் வீட்டு அதிபதியாகி 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு 32 வயதில் இருந்து அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

புதன் ஒன்பதாம் வீட்டு அதிபதியாகி 10 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் 32-வது வயதில் இருந்து தர்ம காரியங்கள் மூலமாகவும், தந்தை மூலமாகவும், புண்ணிய வசத்தாலும் லாபம் அடைவதுடன் தொழில் அபிவிருத்தியும் அடையப் பெறுவார் என்று முடிவு எடுக்க வேண்டும்.

ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரனாக இருந்து அவர் பத்தாம் வீட்டில் இருப்பார் ஆனால் ஜாதகருக்கு அதிர்ஷ்டவசமாக 24 வயதிலிருந்து பொருள் வரவும் தொழில் மேன்மையும் உண்டாக ஆரம்பிக்கும் என கொள்ள வேண்டும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியாகிய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு 28வது வயதில் இருந்து மதிப்பும் கௌரவமும் தொழிலில் முன்னேற்றமும் ஏற்பட தொடங்கும் என கருத வேண்டும்.

மீன லக்னத்தில் ஒரு ஜாதகர் பிறந்து லக்னாதிபதி குரு ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு 16 வயதில் இருந்து சௌபாக்கியங்கள் உண்டாக ஆரம்பித்துவிடும். இதே குருவானவர் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதி ஆகிறார்.அவர் கடகத்தில் இருந்தால் ஜாதகருக்கு 16 வயதில் இருந்து தந்தை மூலமாக நல்லதொரு வளர்ச்சி உண்டாகத் தொடங்கும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2 5 ஆகிய இடங்களுக்கு உரிய குரு 9-ஆம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தால் ஜாதகர் கல்வித்துறை மூலம் முன்னேற்றம் அடைவதுடன், அதிஸ்ட வசத்தால் பொருள் வரவையும் பெறுவதற்கு உரிய காலம் 16 ஆவது வயதில் இருந்து ஆரம்பமாகும்.

ராகுவானவர் சுப கிரகங்களுடன் கூடி சுபக்கிரகங்களின் பார்வை பெற்று கேந்திரத்தில் குடிபுகுந்து, சம பலம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அவர் மூலமாக விளையக்கூடிய நற்பலன்கள் 42-வது வயதில் இருந்து ஆரம்பமாகி விடும்.

கேதுவானவர் பலம் பெற்று எந்த பாவத்தோடும் எந்த கிரகத்துடன் தொடர்பு கொண்டு இருக்கிறாரோ அந்த பாவத்தின் பலனையும் சேர்ந்துள்ள கிரகத்தின் பலனையும் தன் கையில் வாங்கிக் கொண்டு ஜாதகருக்கு அவருடைய 48-வது வயதில் இருந்து நலம் விளைவிக்க ஆரம்பிப்பார்.

Leave a Comment

error: Content is protected !!