பரணி
இது மூன்று நட்சத்திரங்களால் அடுப்புக்கட்டி போல் இருக்கும்.இம்மூன்றும் மங்கலாகவே தெரியும் .சந்திரன் இவற்றினுக்கு தெற்காக ஊர்ந்து கிழக்கே செல்வதை பார்க்கலாம்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்- தரணியை ஆள்வார்கள் -பெற்றோருக்கு உகந்தவர்கள்
- இந்த நட்சத்திரம்- பூரண உடல் பெற்றது
- இந்த நட்சத்திரம் -கீழ் நோக்கு நாள் ஆகும்.
- இந்த நட்சத்திரத்தில் -சுபகாரியம் செய்ய கூடாது.
- இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள்- லி,லு,லெ,லே
- இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள்- சௌ,சொ
- இந்த நட்சத்திர கணம்- மனித கணம்
- இந்த நட்சத்திரம் மிருகம்- ஆண் யானை
- இந்த நட்சத்திர தாவரம்- நெல்லி
- இந்த நட்சத்திர பட்சி – காக்கை
யந்திரம்
இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்
எப்படி பூஜை செய்ய வேண்டும் ?
- தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
- கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
- முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
- பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
- பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.
வசிய மந்திரம்