திருமணம்-ஏழாம் பாவகம்
மனித வாழ்வு செம்மையுற இன்றியமையாதவை மனம்-மணம்-திருமணம், உடல், உள்ளம் யாவும் செம்மையுறச் செய்வது இல்லறம், இல்லறம் என்பது துறவறத்தை விடச் சிறந்தது. உடலில் சரிபாதி மனைவி அவர் உடல் ஆடவரின் இடப்பக்கம் இருக்கவல்லது என்பதால்தான் சிவன்-உமை இருவரும் வல, இடமாய் உள்ளனர். நமது சட்டையில் பையும் கூட இடப்பக்கம் இருப்பதன் தத்துவம் இதயத்தோடு இயைந்த மனைவிக்கு ஒப்பானது என்பதே.
வலக்கரம் செய்வது (தானம்) இடக் கைக்குத் தெரியக் கூடாது என்பது ஒருவர் செய்யும் தானம், தருமம் விளம்பரத்துக்கு அப்பாற்பட்டதாய் மனைவிக்குக் கூடத் தெரியக் கூடாது என்பதாகும். ஒருவருக்கு நல்ல மனைவி கிடைத்தால் எல்லாமே நல்லதாய் முடிந்துவிடும்,
மனைவியில் ஏழு வகை உண்டு என்று பெளத்த மதம் கூறுகிறது. அதாவது அவர்கள் குணத்துக்குத் தகுந்தாற்போல் வதிச்சமா, சோர்சமா, சூர்சமா, பகினிசமா, பத்னிசமா, பதசமா, கமசைமா என்பவை ஆகும். அதன் விளக்கங்கள் தற்போது தேவையில்லை.
ஒருவர் ஜாதகத்தில் ஏழாவது வீடே கணவர்/ மனைவியைக் (களத்திரத்தைக் குறிக்கும். பெரும்பாலும் 7 ஆவது வீடு சுத்தமாய் இருந்தால் நல்லது என்பர். ஏழாவது வீடு சுத்தமாய் இருந்தால் நல்லது என்ற முடிவுக்கு வரக்கூடாது.
அந்த ஏழாம் அதிபதி 6, 8, 12 இல் மறைந்தாலோ, நீச்சம், உச்சமானாலோ. தீய கிரகங்களுடன் சேர்ந்தாலோ வாழ்வு தொல்லையாய், நரகமாய் இருக்கும்.
7 ஆம் அதிபதி உச்சம்,நீச்சம், பகை, கெட்டவர் சேர்க்கையின்றி 5. 10, 11 ஆம் வீடுகளில் இருப்பதுவே நல்லது.
லக்கினத்திற்கு 12ஆம் வீடு மனைவியின் பூர்வீகத்தைக் குறிக்கும்.
இனி 7 ஆம் பாவத்தின் வகைகளைக் காணலாம்.
விதிவிலக்கு
உச்சம், நீச்சம் ஆகாத கும்பம், மிதுனம், சிம்மம், தனுசு இராசி லக்னங்களுக்கு எல்லாமே விதிவிலக்கு.
இருதார யோகம்
மேஷ லக்னத்துக்கு 12 இல் (7 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சமாவதால்) திருமணமாகி, ஓரிரு வருடங்களில் மனைவியைப் பிரிந்து வேறு பெண்ணை மணப்பார். மனைவி வேறு திருமணம் செய்ய மாட்டார்.
ரிஷப லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி செவ்வாய் 9 இல் உச்சமாவதால் தந்தை வழியில் திருமணமாகி, அத்தை வீட்டுடன் தங்கி விடுவார்,
மிதுன லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி குரு 2 இல் உச்சமாகும். கலப்புத் திருமணமே நடக்கும். கணவர் / மனைவி ஏதோ ஒரு காரணத்தால் நீதி மன்றம் போவார்.
கடக லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி சனி 4 இல் உச்சமானால் சித்தார்த், அரவிந்தன், கௌதம் என்பவரால் நலமுண்டு. சுயம்வர மணம். 7இல் சூரியன் இருந்தால் பிறமொழிப் பெண்ணை மணப்பார்.
சிம்ம லக்னத்துக்கு மணவாழ்வில் மனைவி / கணவர் வழி இன்பம் எதிர்பார்த்த அளவு திருப்தியாய்க் கிடைக்காது.
கன்னி லக்னத்துக்குக் 7 ஆம் அதிபதி குரு 11இல் உச்ச மானால் நல்ல துணை உண்டாகும்.
துலா லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சமானால் கணவர் / மனைவி துரோகமிழைப்பர், சுக்கிரனோ ஏழாம் அதிபதியோ 6 இல் மறைந்தால் பிற பெண்கள் / ஆடவர் தொடர்பு உண்டாகும். 8 இல் மறைந்தால் சந்தேகம் பெருகி பிரிவர் 12 இல் மறைந்தால் பிறருடன் சென்று விடுவர்.
விருச்சிக லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சமானால் பிற மொழிப் பெண் / ஆணை மணப்பர்.
தனுசு லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி உச்சமாவது நல்லது. மனைவி / கணவர் தூரக்கிழக்கு நாட்டில் பணியாற்றுவார். பெரும்பதவி உண்டாகும்.
மகர லக்னத்துக்கு 7 இல் குரு உச்சமாவதும் நல்லதே.
கும்ப லக்னத்துக்கு மனைவி / கணவர் பதி விரதையாய் இருப்பார். ஆனால், கும்பம் லக்கினக்காரர்கள் முன்பின்னாய் இருப்பர். மனைவி அருமை தெரியாதிருப்பர்.
மீன லக்னத்துக்கு குரு 5 இல் உச்சமாவது மனைவி / கணவர் சம்பாதிக்கும் ஆணவத்தில் அலட்சியம் செய்வர்.
அதே போல், லக்னத்தில் இருந்தோ, இராசியில் இருந்தோ அல்லது சுக்கிரனில் இருந்தோ 7 ஆவது வீட்டில் கிரகங்கள் அல்லது 1 கிரகம் உச்சமானால் இருதார யோகம் உண்டு.
மேலும் 7 ஆம் அதிபதிகள் சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன் நீச்சமானால் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று, வேறு நாளில் வேறு ஒருவரை மணக்க நேரும்.
7 இல் ஒரு கிரகம் உச்சமாகி, இன்னொரு கிரகம் நீச்சமானால் இரட்டையரில் ஒருவரை மணப்பார்.
இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை சில நேரம் திருநங்கைகளாய்ப் பிறக்க வாய்ப்புள்ளது.
நீச்சம்
சூரியன் 7 இல் நீச்சமானால் மனைவி / கணவருக்கு நோய் உண்டு.
சந்திரன் 7 இல் நீச்சமானால் சகோதரி சண்டையால் கணவர் / மனைவி பிரிவர்.
செவ்வாய் 7 இல் நீச்சமானால் பல பெண்களுடைய சகவாசம் வரும்.
புதன் 7 இல் நீச்சமானால் ஆண்மை / பெண் தன்மை அறவே இருக்காது.
குரு 7 இல் நீச்சமானால் கணவர் மலையிலிருந்து உருண்டு விழுந்து இறப்பார். மனைவி வேறு மணம் செய்வார். புதன், குரு இணைந்தால் ஸ்டாப் நர்ஸ் மூலம் இடருண்டு.
சனி 7 இல் நீச்சமானால் பிற மாநிலத்தவரை மணப்பார்.
இராகு அல்லது கேது உச்சம், நீச்சமானால் நல்லவர்போல் நடித்து தகாதன செய்வார்.
7ம் அதிபதி எந்த வீட்டில் இருந்தால்?
7 ஆம் அதிபதி ஆட்சியாய் இருப்பது நல்லது.
7 ஆம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் வயது தகுதி அறிவுக்கு மேம்பட்டவரை மணப்பார்.
7 ஆம் அதிபதி 2 இல் இருந்தால் சந்தோஷம் இருக்காது.
7 ஆம் அதிபதி லக்கினத்துக்கு 3 இல் இருந்தால் தாமதத் திருமணம்.
4,7ஆம் அதிபதி 9 இல் இருந்தால் தாய்மாமா, அத்தை பெண் மணப்பார்.
1,5 இல் இருந்தால் தர்ம சிந்தனையுள்ள மனைவி அமைவார்.
1,7 ஆம் அதிபதி 7, 8இல் இருப்பது நல்லதல்ல.
மற்றும் 10, 11 ஆம் வீடுகளில் இருப்பது நல்லது.
12 இல் 7 ஆம் அதிபதி இருந்தால் (கணவன் / மனைவி) நோய்வாய்ப்படுவார்.
எல்லா லக்னக்காரர்களும் இராசிக்காரர்களும் நட்சத்திரக்காரர்களும் காதல் வயப்படுவர் என்பதை மறக்கக்கூடாது. நான் நெருப்பு என்னை நெருங்கமுடியாது என்று வசனம் பேசுவதையோ, உன்னைத்தவிர வேறு ஒருத்தி நினைத்ததில்லை என்று சொல்வதையோ, நான் மாமிசம் சாப்பிட மாட்டேன் முட்டையை கூட தொட மாட்டேன் என்று மனதை தொடும் வார்த்தைகளையோ யாரும் நம்ப வேண்டாம்.
7 இல் சூரியன், சந்திரன் சேர்ந்தால் பெண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சூரியன், செவ்வாய் 2, 7, 8, 12 இல் சேர்ந்தால் கணவர் மனைவி பிரிந்து விவாகரத்து ஆகி வாழ்வர்.
சூரியன் + புதன் + சுக்கிரன் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு.
7 இல் குரு இருந்தால் பிற ஆடவர் ஸ்பரிசம் உண்டாகும்.
குரு + சுக்கிரன் 7 இல் இருந்தால் மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) போன்ற பெருந்தொழில் புரிவோரை மணப்பர்.
7இல் சனி இருந்தால் துடுக்கான காமம் உண்டு.
கலப்புத் திருமணம்
களத்திரகாரகன் அல்லது களத்திரஸ்தானாதிபதி நீச்சமானால் தாழ்ந்த குலத்தவரை மணப்பார்.
7 ஆம் அதிபதி 12 இல் நீச்சமாய் மறைந்தால் பதிவுத் திருமணம் செய்வார்.
7ஆம் அதிபதி 12 இல் நட்பு வீட்டில் இருந்தால் கோவிலில் கலப்பு மணம் நடக்கும்.
சுக்கிரன் + சூரியன் சேர்ந்து அல்லது இராகு + சனி சேர்ந்து 2, 5, 7, 8 இல் இருந்தால் கால தாமதக் கலப்புத் திருமணம் உண்டாகும்.
2 இல் கிரகம் உச்சமானால் திருமணத்தன்று பெண் தப்பியோடி காதலரைக் கைபிடிப்பாள்.
7 ஆம் அதிபதி 3 இல், 5 இல் அல்லது 3 ஆம் அதிபதி 7,5 இல் இருந்தால் சகோதரியிடம் தவறாய் நடந்து கொள்வார்,
7 இல் கேது பிற கிரகத்துடன் இருந்தால் கலப்பு மணம் நடக்காது. கேது தனித்திருந்தால் மதம் மாறிய மணம் நிகழும்.
7 இல் சந்திரன் நீச்சமாகி குருவால் பார்க்கப்பட்டால் அகதியைத் திருமணம் செய்வார்.
2 இல் சுக்கிரன், கேது இருந்தால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்வர்.
திருவாதிரை,பூரட்டாதி,விசாகம் நட்சத்திரக்காரர்கள் உடல் ஊனம் உள்ளவரை மணப்பர்.
சுக்கிரனையோ 7 ஆம் அதிபதியையோ சனி பார்த்தால் திருமணம் கிடையாது.
2 இல் அல்லது 7 இல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் கிடையாது,
12-இல் 1, 2,3,4 ஆம் அதிபதிகள் இருந்தால் ஒரே நாளில் இருவரும் மரிப்பா.
குடும்ப லக்னாதிபதி அம்சத்தில் இருக்கும் இடத்துக்கு குரு அம்ச ரீதியாய் வரும்போது திருமணம் நிகழும்,
உச்ச வீட்டுக்கு 7-இல் அதே கிரகம் நீச்சமாகும்.
உயிர் எண், உடல் எண் 21-01-1961-3 என்றானால் வெற்றி உண்டு.
விதவை (வைதவ்ய) யோகம்
தவம் என்றால் நோன்பு. விநாயகர் என்றால் இவருக்குமேல் தலைவர் யாரும் இல்லை என்பது போன் விதவை என்றால் மேலான தவம் செய்பவள் என்று பொருள். கணவன் இறந்து, இழந்த பின் கணவன் உயிருடன் இருப்பது போல் பாவித்து செய்யப்படும் தவம் விதவம். அந்த வேள்வியை மேற்கொள்பவர் யாரோ அவர் விதவை. கைம்மை என்றும் நோன்பு செய்பவள் கைம்மையாட்டி என்றும் அழைப்பர். இந்த நிலை வைதீகச் சடங்குகளில் கொடுமையானது, இந்த நிலை வரவிருக்கும் கிரக நிலை என்ன?
லக்னத்தில் சூரியன் + சந்திரன் அல்லது சூரியன் + செவ்வாய் அல்லது சூரியன்+ குரு அல்லது சூரியன் * சுக்கிரன் அல்லது சனி இராகு இருந்தால் விதவையாவார்.
7 இல் புதன் உச்சமுற்றால், நீச்சமுற்றால் விதவையாவார்.
2 இல் செவ்வாய்+ புதன் இருந்தால் திருமணமாகி, பத்தாண்டுகளில் விதவையாவார்.
7 ஆம் அதிபதி 4 இல் நீச்சமானால் (தனுசு லக்னத்துக்கு இது பொருந்தும்) வாகன விபத்தில் கணவர் மரித்து விதவையாவார்.
திருவோணம் நட்சத்திரக்காரப் பெண்களுக்குக் கணவர்கள் விபத்தில் உயிர் இழப்பது கண்கூடு
7ஆம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் கணவர் மனைவி பிரிவு உண்டு அல்லது கணவர் இறப்பார்.
களத்திரகாரகனும் களத்திரஸ்தானாதிபதியும் 6, 8. 12 இல் மறைந்தால் கணவர் இறப்பார்.
சூரியன்+ சந்திரன்+ செவ்வாய்+ புதன் எல்லாம் ஒரே வீட்டில் இருக்கும் ஜாதகர் திருமணமான காலத்தில் 10 நாளில் மரணமடைவார்.
7 ஆம் அதிபதி கடகம், விருச்சிகத்தில் இருந்து, லக்னத்தில் இருந்து, 8 ஆம் வீடாய் இருந்தால் வெளிநாட்டில் கணவர் இறந்து விடுவார்.
அசுபதி, சதயம் முதலிய நட்சத்திரப் பெண்களுக்குக் கணவர் சரியாய் வாழ்வது இல்லை.
பெரும்பாலும் சிம்மம், கும்பம் லக்கினக்கரார்கள் கலப்பு மணத்தை எதிர்த்தாலும் கலப்பு மணமே அமையும். தீர்க்க சுமங்கல்யம் உள்ளவராவார்.
ரேவதி, பரணி நட்சத்திரப் பெண்களுக்குச் சுமங்கல்ய பலமுண்டு
7 இல் சுக்கிரன் இருப்பின் அண்ணியின் சகோதரன் மனைவியுடன் களவு உண்டாகும்.
சூரியன்+இராகு சேரின் மாமன் மனைவியை புணர்வார்.
திருமணமாகாத ஜாதகம்.
7 ஆவது வீட்டைச் சனி பார்த்தால் திருமணமில்லை.
2,7,8 இல் கூட்டு கிரகம் இருந்தால் திருமணமில்லை.
2 ஆம் அதிபதி (குடும்பாதிபதி ) 6 இல் மறைந்தால் திருமணமில்லை.
லக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி சேரினும் திருமணமில்லை.
7 இல் புதன் அல்லது உச்ச சுக்கிரன் பார்வை இருப்பின் திருமணமில்லை.
சூரியன் நீச்சமாகி 10 இல் இருந்தாலும் திருமணமில்லை.
2 ஆம் அதிபதி உச்சமானால் இருதார யோகம். 2 ஆம் அதிபதி அல்லது 7 ஆம் அதிபதி, 10 ஆம் அதிபதியுடன் இருந்தால் மனைவியின் சகோதரியை மணப்பார்.
இவ்வகை அமைப்புள்ளவர் குலதெய்வ ஆராதனை மூலம் நல்வாழ்வு பெறலாம்