திருமண பொருத்தம்
உங்கள் திருமண ஜாதக பொருத்தத்தை தமிழில் தெரிந்து கொள்ளுங்கள். மணமகன் மற்றும் மணமகளின் ராசி மற்றும் நட்சத்திர பொருத்தத்தின் அடிப்படையில் கீழே திருமண பொருத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படும் 12 திருமண பொருத்தங்களின் அடிப்படையில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் திருமண பொருத்தத்தை கண்டுபிடிக்க, கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்ட 12 வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 என்று வந்தால் தினப் பொருத்தம் உண்டு. இந்த எண்ணிக்கையில் இல்லாதிருந்தால் அந்த ஜாதகத்தை விலக்கி விடலாம்.
கணப் பொருத்தம்
ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரிக்கிறார்கள். அவை முறையயே தேவ கணம், மானுஷ கணம், மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். வாழ்வில் மங்கலங்கள் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியம்.
மகேந்திர பொருத்தம்:
திருமண பந்தம் இனிமையுடன் இருக்கவும் இல்லறம் இனிதே நடக்கவும் சம்பத்து மிகவும் அவசியம். அதிலும் புத்திர சம்பத்து அவசியம். இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்கு சம்பத்து கொடுக்கும். அதுமட்டுமின்றி புத்திரர்கள் மூலம் சம்பத்துக்கள் பெருகும்.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
இல்லற வாழ்வை இனிதே துவக்கும் திருமணப் பெண், தனது வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாய் காட்சியளிக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பெரியோர்களும் திருமணமான பெண்களை “தீர்க்கசுமங்கலி பவ” என்று வாழ்த்துவார்கள். சுமங்கலிதத்தனமாய் இருக்க ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் காண வேண்டும்.
யோனி பொருத்தம்
நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. அதன் அடிப்படையில் இந்த பொருத்தம் காணப்படுகின்றது. ஆண்-பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் தேவை. எனவே தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருத்தம் இருந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும்.
ராசி பொருத்தம்
இரு மனம் ஒத்த தம்பதியர் வாழ்வு இனிமையாய் இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். அதற்கு ராசிப் பொருத்தம் காண வேண்டியது அவசியம்.
ராசி அதிபதி பொருத்தம்
வாழையடி வாழையென வம்சம் வளர வேண்டும் என்று தம்பதியரை வாழ்த்தாத பெரியோர்களே இல்லை எனலாம். சந்ததி விருத்திக்கு ராசி அதிபதி பொருத்தம் அவசியம் காண வேண்டும்.
வசிய பொருத்தம்
கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர்.
ரஜ்ஜு பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம் என்பதே, பத்து திருமண பொருத்தங்களுள் மிகவும் முக்கிய பொருத்தம். பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள். அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.
வேதை பொருத்தம்
வேதை என்றால் ஒன்றுகொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய பலத்தை குறிப்பது. ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமலிருத்தலே வேதைப் பொருத்தம் எனப்படும்.
இந்த12 பொருத்தங்கள் மட்டும் வைத்து ஒரு திருமணத்தை நிச்சயிக்கலாமா என்றால், நிச்சயமாக இது மட்டும் போதாது. ஆண் பெண் இருவரின் ஜாதகத்தையும் உள்ளார்ந்து பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. முக்கியமாக இருவரின் ஆயுள், இருவரின் குழந்தை பெறும் தகுதி, பெண்ணின் மாங்கலிய பலம் போன்ற பல சிறப்பு அமசங்களை இருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் வைத்து கணிக்க வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு பத்து பொருத்தங்கள் இருக்கும். ஆனால் கிரக அமைப்புகள் சரியாக இருக்காது. சிலருக்கு கிரக அமைப்புகள் சரியாக இருக்கும். ஆனால் பொருத்தங்கள் குறைவாக இருக்கும்.
நாம் திருமணம் என்று தொடங்கும் போது ஆண் வீட்டாரோ பெண் வீட்டாரோ, சிலருக்கு பெண் அல்லது ஆண் தேடும் போது கூடிய சீக்கிரமே அமைந்து விடும். சிலருக்கு அதிக காலம் தேவைப்படும். அல்லது அதிக ஜாதகங்கள் வந்து வந்து பொருந்தாமல் போகும்.
எனவே, உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணத்திற்கு பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் திருமணத்திற்கு தேவையான பொருத்தங்கள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ள எங்கள் சாப்ட்வேர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் நீங்கள் ஜோதிடரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பொருத்தம் உள்ளதா என்று நீங்கள் பார்த்து சில சாதகங்களைத் தேர்வு செய்து பிறகு ஜோதிடரை அணுகலாம்.