கும்பத்தில் இணையும் 5 கிரகங்கள்
மே 11 வரை கிரகங்கள் சூழும் மேகத்தால் சுழலப்போவது யார் யாரோ? பாவ கிரக சேர்க்கைகள் படிப்படியாய் சேர்ந்து பிரியும் வரை அடுத்தடுத்து அதிரும் உலகம் மேற்கத்திய நாடுகளால்…
நவகிரகங்களில் கிரக இணைவுகள் கிரக யுத்தங்களாய் மாறி பல தாக்கத்தை உலக மக்களுக்கு தரப்போகிறது..
மாசி மாதம் 4 கிரக சேர்க்க சேர்க்கைகள் சித்திரை வரை நித்திரை போச்சு மகா கலவரமும் மக்களுக்கு பாதகத்தையுமே தரும்..
பிப்ரவரி 17, 18 கும்பத்தில் கிரக இணைவுகள் சூரியனும் சந்திரனும் அவிட்டத்தில், சுக்கிரனும் ராகுவும் சதயத்தில், புதன் பூரட்டாதியில் சங்கமிக்கும் ஐந்து கிரகங்கள்.
- எதிரும் புதிருமாய் இருப்பவர்கள் இணைவார்கள்
- ரத்தமும் சதையுமாய் இருப்பவர்கள் பிரிவார்கள்
- உலகம் அமாவாசை இருட்டில் மூழ்கி அவ்வளவும் இருண்டு போகும்.
இயற்கை அழிவுகளால் குண்டு மழையால் கொலை நடுங்க வைக்கும்.
- கலைத்துறையில் மாற்றங்கள் வரும்.
- சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து கெட்டதால் பெண்களுக்கு ஆபத்து வரும். பேரழகு பிரம்மாண்டத்தை காட்டி மக்களை ஏமாற்றச் செய்யும். ஆசை பேராசையாக மாறி இருப்பதை தொலைப்பர் மக்கள்.
புதன் பூரட்டாதியில் இருப்பதால் பேராசையில் பணம் போட்டவர்கள் பரிதாபமாய் நிற்பார்கள் பண பரிவர்த்தனை பாதாளத்திற்கு செல்லும் பணத்தில் மாற்றம் வரும் பாக்கெட் காலியாகும்..
காற்று ராசி கும்பத்தில் ஐந்து கிரக சேர்க்கை உலகம் நூலருந்தபட்டமாய் திக்கு திசை தெரியாமல் சுழலும்..
பல நாடுகளின் கஜானா காலியாகும். தங்கம் வித்தை காட்டும். சிம்மத்தில் இருக்கும் கேது 5 கிரக பார்வையால் உலகத் தலைவன், மக்கள் தலைவன் மாயமாய் காற்றில் கரைந்து போவான். மாசி மாதம் மல்லுக்கட்டு உண்டு..
குறிப்பாக தனிநபர் ஜாதகத்தில் கிரக இணைவுகள் தனிநபர் வாழ்க்கையை பாதித்து விடுகிறது.
புனர்பூசம் முதல் ஆயில்யம் வரை சந்திராஷ்டம தினம்…
- கடக ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை.
- விருச்சகத்திற்கு விபரீதம் உண்டு..
- மகரம் தனம் குடும்பம் கெட்டது..
- ஜென்ம கும்பம் பொறுமை தேவை.
- கூட்டாளி சிம்மராசிக்காரன் தன்மீதே கவனம் தேவை..
- மீனத்திற்கு விரயம் உண்டு யாரையும் நம்பி பணம் கொடுக்காதே..
பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை மீண்டும் 5 கிரக இணைவு பிப்ரவரி 28 மிக முக்கியம்..
சித்திரை முதல் உத்தராட நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினம் ஜாக்கிரதை..
சூரியன் ராகு சேரும் சூரிய கிரகணம் அத்தோடு மாட்டிக்கொள்ளும் சுக்கிரன் புதன் அரசுக்கும் கலைத்துறைக்கும் அவ்வப்போது சண்டை உண்டு அர்த்த ராத்திரி போர்கள் உண்டு ஆறு நாட்கள் அவசியம் கட்டுப்பாடு தேவை.
கடக கும்ப ராசிக்காரர்கள் கட்டாயம் என்னும் சில மாதம் நல்லதுக்கு காத்திருக்க வேண்டும் நல்லதுக்கு காலமில்லை நல்லவர்களுக்கும் இது காலமில்லை..
மகரம் பேச்சை குறை,மீனம் விரயத்தை குறை வெளிநாடு சென்றாலும் ஆபத்து, வெளியில் உலா வருவதும் ஆபத்து.
பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை செவ்வாய் ராகு:கும்பத்துக்காரன் கும்பாபிஷேகத்திற்கு சென்றாலும் குறை சொல்வார்கள் போக்குவரத்தில் கவனம் சதயத்துக்காரன் சத்தியமாய் சமாதானமாய் போ..
மகர கும்பத்தில் குடுமிபிடி சண்டை உண்டு. உலக அளவில் அடித்துக் கொள்வார்கள் இந்தியா பாகிஸ்தானுக்கு உரசல் உண்டு மார்ச் 14 வரை சூரியன் செவ்வாய் புதன் ராகு பல நாடுகளுக்கு பக்கத்து நாடுகளுடன் பதட்டம் உண்டு பணப்படைவர்த்தனையில் பஞ்சாயத்து உண்டு தங்கத்துக்கு கிடைக்கப் பிடி தங்கம் வைத்திருப்பவனுக்கு ஆப்பு உண்டு
ஏப்ரல் 2 முதல் 14 வரை மீனத்தில் சூரியன், செவ்வாய் சனிசேர சிம்மத்திற்கு ஆபத்து உண்டு..
அள்ளி அள்ளி வீசும் பொய்யான அரசியல் வாக்குறுதிகள் மக்களை அல்ல பட வைக்கும் மக்கள் அதிருப்தி மக்கள் தலைவன் மேல் உண்டு உலகெங்கும் நாடெங்கும் சிலர் நான் வைத்ததே சட்டம் என்பர் தமிழக தேர்தலில் தலைசிறந்த தலைவன் வருவான் நாடு நலம் பெறும் கவலை வேண்டாம்.
ஏப்ரல் 14 முதல் மே 11 வரை செவ்வாய் சனி ஆட்டம் பல நாடுகள் பைனான்ஸ் பிரச்சனையால் அவதிப்படும்.
மகர இந்தியாவிற்கு இரண்டாம் இடம் கும்பம். கடக தமிழகத்திற்கோ எட்டாம் இடம் கும்பம்.
மாசி முதல் சித்திரை வரை கெட்டதெல்லாம் மொத்தமாய் விட்டுப் போக, மே 11 வரை கட்டம் சரியில்லை. பல கட்டங்களும் சரி இல்லை. சரிய போகும் வாழ்க்கையில் நிமிர போவது யார் யாரோ…














