பிரசன்னம் என்றால் என்ன
பிரசன்னம் என்ற வடமொழி சொல்லிற்கு கேள்வி என்று பொருள். ஒருவர் தன்னைச் சார்ந்த நற்செயலுக்கான காரியங்களுக்காகவோ, தனக்கும். தன் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு, நோக்கிலோ, கேள்வியை தேய்விக்யனிடம் கேட்கும் பொழுது அது பிரசன்னமாக மாறுகிறது. பிரசன்னம் என்ற சொல்லுக்கு கேள்விக்கு பதில் உரைத்தல் என்றும் பொருளாகும்.
பிறப்பு ஜாதகம்
ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுவது பிறப்பு ஜாதகம் ஆகும்.
பிரசன்ன ஜாதகம்
ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்தில் கணிக்கப்படுவது பிரசன்ன ஜாதகம் (அன்றைய கோள்களின் அடிப்படையில்).
பிரசன்னத்தில் 108 முறைகள் இருப்பதாக முன்னோர்களும் கூறியுள்ளார்கள்.
இந்த பிரசன்ன முறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மனிதர்களுக்காக பார்க்கப்படுவதில், தனிமனிதனுக்காக பார்க்கப்படுவது “சாமானிய பிரசன்னமும்”.
“தாம்பூல பிரசன்னமும்” இதில் ஒரு குடும்பத்திற்காகவோ, அவர்களின் தலைமுறைகளுக்காக பார்க்கப்படுவது “அஷ்ட மங்கல பிரசன்னம்”,
இறைவனுக்காக மட்டும் அதாவது குலதெய்வத்திற்க்காகவோ, பொதுமக்கள் வழிபடும் கோவிலுக்கான கேள்விகளுக்காக்கவோ பார்க்கப்படுவது “தேவ மங்கள பிரசன்ளம்” ஆகும்.
கிரகங்கள், அவற்றின் குணங்கள், காரகத்துவங்கள், கிராக சஞ்சாரங்கள், பஞ்சாங்கத்தினுடைய தெளிவு. இவற்றையெல்லாம் நன்றாக கற்றுனந்து, பிரசன்னம் கற்றுத்தந்த குருவை மனதார வணங்கி, பக்தியுடன் பிரசன்னத்தை முழுமையாக கற்றுணர்ந்து பிரசன்னத்தை பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன் எழுத்து, உடலை சுத்தம் செய்த பின், தாய், தந்தையர்கள், குலதெய்வம், குருமார்கள், இஷ்ட தெய்வங்கள் இவர்களையெல்லாம் மனதில் நினைத்து வணங்கி நவ கிரகங்களைத் தொழுது பதட்டமில்லாத மனதுடன் பிரசனினம் பார்ப்பதற்காக அன்றைய கோள்களின் சஞ்சார நிலைகளை முழுமையாக கணித்து தயார் நிலையில் கிழக்கு நோக்கி தெய்வயக்ஞன் அமர்ந்து. பிரசன்னம் பார்க்க வருபவர்களுக்காக காத்திருக்க வேண்டும்.
பிரசன்ன பலகை 2,1/2 அடி நீளமும், 1 1/4 அடி அகலம் கொண்ட பினைப்பு, வெடிப்பு, கரும்புள்ளிகள் இல்லாத பா அல்லது தேக்கு மரத்தினா பகையை பயன்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்யப்பட்ட மந்திரங்கள் ஜெபித்த சோழிகளைக் கொண்டு பிரசன்னத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிரசன்ன இடதுபக்கம் அதாவது வடக்கு பகுதியில் சூரிய சந்திரர்களுக்கு இரண்டு சோழிகளையும், பஞ்ச தெய்வங்களுக்கு 5 சோழிகளையும் அவற்றிட்க்கு கீழ் சிறு சோழிகளாக 108 சோழிகளும்
இந்த 108 சோழிகளுக்கு உதவிக்காக ஒரு சில சோழிகளையும் குறைத்த பட்சம் வைத்திருக்க வேண்டும். இத்துடன் வலது பக்கம் அதாவது தெற்கு பகுதியில் “ஓம்” என்று வரைத்து. ஒம்க்கு கீழ் ராசி சக்கரம் வரைந்து அந்த ராசி சக்கரத்தில் 9 கிரகத்திற்கும் அன்றைய கோள் நிலைப்படி சோழிகளை நிறப்ப வேண்டும்.
இத்துடன் மாந்திக்கு 1 சோழியும், உதய லக்னத்திற்கு 1 சோழியும் ஆருடத்திற்க்காக 1 சோழியும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சொர்ண ஆருடத்திற்கு 1 சோழி, எப்பரிச ராசிக்கு 1 சோழி வெற்றிலை ஆருடத்திற்கு 1 சோழிகளையும். மாந்தியை வைத்து பிரசன்னம் பார்க்க தோராயமாக 247 சோழிகளையும் கொண்டு பிரசன்னம் பார்க்கலாம்.
“ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணனாதம் மஹேஸ்வரம்! பஞ்சதெய்வான் ஸமரேன் நித்யம் சர்வ அபிஷ்ட அர்த்த சித்தயே” என்று தியானம் செய்து ஐந்து தெய்வீக சோழிகளை வணங்கி வரிசையாக பலகை மேல் வைத்து 108 சோழிகளை இரண்டு கையாலும் தொட்டு “ஓம் நமசிவாய” என்று பஞ்சாட்ஷரத்தை 108 முறை சொல்லி வணங்கி வேண்டும்.
மேற்கூறியது நித்யப்படி செய்ய வேண்டிய காரியமுறையாகும், அனால், முதன் முதலாக சோழியை வைத்து பிரசன்னம் பார்ப்பதனால் சோழிகளை வணங்கி பக்தியுடன் முதலில் பாலில் கொதிக்க வைக்க வேண்டும். பின் தண்ணீர், பன்னீர், பஞ்சகவ்யம், அதன்பிறகு தண்ணீர், மஞ்சள் நீர் மற்றும் கடைசியாக தண்ணீரிலும் கழுவி துடைத்து (துடைப்பதற்கு தனி துணியை வைத்துக் கொள்ளவும்) சுத்தம் செய்ய வேண்டும்.
தினமும் பாலில் கழுவிய பிறகு, தண்ணீரிலும் நன்றாக கழுவி சுத்தம் செய்து குறைந்தது ஒரு மண்டல காலத்திற்காவது கிழக்கு திசையைப் பார்த்து உட்கார்ந்து சோழியை பலகையின் மேல் வைத்து கைகளால் மூடிக் கொண்டு 108 ஆவர்த்தி பஞ்சாட்ஷரம் ஜெபித்து நம்முடைய உபாசனை வலுவை சோழிக்கு ஏற்ற வேண்டும்.
நம்முடைய சோழிகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது. தினமும் சோழியை தொட்டு பஞ்சாட்ஷரம் மட்டுமல்லாமல், தங்களுடைய குலதெய்வ மந்திரங்களும் சொல்லாம். எவ்வளவு உரு ஏற்றுகின்றீர்களோ அவ்வளவுக்கு உங்கள் உபாசனை பலம் சோழியில் பதிந்து உண்மைகளை காட்டித்தரும்.
உச்சி வேளைக்கு முன் பிரசன்னம் பார்ப்பது மிக உத்தமம்.
தனிமனிதனுக்காக சாமானிய பிரசன்னம்மோ, தாம்பூல பிரசன்னம்மோ பார்த்தால் போதுமானது. இதில் தாம்பூல பிரசன்னத்தை மட்டும் எந்த நேரத்திலும் (பகல், இரவு) பார்க்கலாம். குடும்பத்திற்காகவோ, குடும்ப முக்கிய காரியங்களுக்காகவோ “அஷ்ட மங்கல பிரசன்னம்” பார்க்கலாம்.
அஷ்ட மங்கள பிரசன்னம்
பிரசன்னம் என்பது ஜாதகர் வந்து பிரசன்னம் பார்ப்பதற்காக தெய்வயக்ஞனிடம் கூறும் நேரம் அல்லது தாம்பூலத்துடன் காணிக்கை கொடுத்து பிரசன்னம் பார்க்கும்படி தெய்விக்ஞனிடம் அழைக்கும் நேரம் பிரசன்னம் ஆரம்பம்,
அன்றைய தேதி நேரம் இவற்றைக்குறித்துக் கொண்டு பலன்களை ஆரம்பிக்க வேண்டும். எந்தவிதமான பிரசன்னமாக இருந்தாலும் பிரஜை தான் அனைத்திற்கும் ஆரம்பம்.
பிரஜகர் வந்து சுப நாளில் பிரசன்னத்திற்கு அழைத்தாலும், சுப நாட்கள் இல்லாத நாட்களில் அழைத்தாலும், அழைத்த நாளில் அமைப்பையே பிரசன்னத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக:
ரிக்தா திதியில் (சதுர்த்தி, சதூர்தசி, அஷ்டமி, நவமி) வந்து அழைத்தாலும், பிரசன்னம் பார்க்கும் நாள், சுப நாளாக அழைத்தாலும், ரிக்தா திதியின் அமைப்பே பிரசன்னம் ஆரம்பம்
இந்நாளில் தான் வர வேண்டும் என்பது பிரஜகருக்கு தெரியாது, அனால் இவைகளைப்பற்றி தெய்வயக்ஞன் முழுவதுமாய் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக, சனி மற்றும் செய்வாய் கிழமைகளில் தவிர்ப்பது நன்று. அதேபோல் அவர்களின் ஜனன நட்சத்திரத்திற்கு தாரா பலன் உள்ள நாட்களான நல்ல நட்சத்திரமுள்ள நாளில் வந்து பிரசன்னம் கேட்டால், அவர்களுக்கு நட்பலன்கள் வரக்கூடும்.
மதிய வேளையில் பிரஜை வந்தால் அவர் கர்ம பலனை அனுபவித்து தீர்த்துவிட்டார் என்றும், அஸ்தமௗ வேளையில் வந்தால் பிதுர்தோஷம் உள்ளது என்று கருத வேண்டும். –