Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-22-திக்குபலம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-22-திக்குபலம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-22-திக்குபலம்

 
திக்கு-திசை. கிரகங்கள் குறிப்பிட்ட திசையில் நின்று இருக்கும்போது வலிமை உடையவர் ஆகின்றனர் அந்த அடிப்படையில் திக்பலம் கணக்கிடப்படுகிறது.
 
 லக்னம்-கிழக்கு திசை 
 ஏழாமிடம்-மேற்கு திசை 
 பத்தாமிடம்-தெற்கு திசை 
 நாலாமிடம்-வடக்கு திசை 
 
கிழக்கில்-குருவும், புதனும் 
மேற்கில்-சனியும் 
தெற்கில்-சூரியனும், செவ்வாயும் 
வடக்கில்-சந்திரனும், சுக்கிரனும் 
திக்பலம் பெறுகின்றனர். 
 
இவற்றிற்கு நேரெதிர் ராசிகளில் நின்று இருந்தால் இந்த கிரகங்கள் பலமிழக்கின்றன அதாவது ஏழாம் இடத்தில் குருவும், புதனும் லக்னத்தில் சனிக்கும் பத்தாம் இடத்தில் சந்திரனும்,சுக்கிரனும்,நாலாம் இடத்தில் சூரியனுக்கும் ,செவ்வாய்க்கும் திக்பலம் இல்லை.
 
 உதாரணமாக ஒருவருக்கு துலாம் லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாதகத்தில்
 
இந்த அமைப்பில் கிரகங்கள் வீட்டில் இருந்தால் அவை பலம் பெற்றிருக்கின்றன என்று பொருள். ஆனால் எல்லா கிரகங்களும் இதே அமைப்பில் வருவதற்கு வாய்ப்பே இல்லை.  ஏனெனில் இந்த 7 கிரகங்களுள் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் எப்பொழுதும் தங்களுக்குள் 90 பாகையை கடந்து போக மாட்டார்கள் என்பதால் அவர்கள் எப்போதும் அருகருகே ராசியிலேயே சஞ்சரிப்பதால் ஆதலால் இந்த மூவரில் யாராவது ஒருவர் மட்டுமே எல்லா ஜாதகங்களிலும் திக் பலம் பெறும் வாய்ப்பைப் பெறுவர். மொத்தத்தில் எந்த ஒரு ஜாதகத்திலும் அதிகபட்சமாக ஐந்து கிரகங்கள் திக்பலம் பெறும் வாய்ப்பு உண்டு.
 
மேற்கண்ட அமைப்பில் குரு துலாம் ராசியில் பகை, சனி மேஷ ராசியில் நீசம், செவ்வாய் கடகராசியில் நீசம் என்று பலவீனமாக தெரிந்த போதிலும் திக்பலம் என்ற ரீதியில் அவற்றிற்கு பலமும் வந்து சேர்ந்து விடுவதால் அது கிரகங்களை அடியோடு வலுவிழந்த கிரகங்கள் என்று கருதிவிடக்கூடாது. 
 
கிரகங்களின் பலத்தை நிர்ணயிக்கும் போது நட்பு, ஆட்சி, உச்சம், பகை என்ற ரீதியில் பார்வையை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவை திக்குப் பல ராசிகளில் நின்று இருக்கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். 
 
அதேபோல் திகபலம்பெரும் ராசிக்கு நேரெதிர் ராசியில் அந்தந்த கிரகங்கள் பலம் குறையும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக துலாம் லக்கினத்தில் சனி நின்று இருப்பதாகக் கொள்வோம் அங்கு  உச்ச பலம் பெறும் அதே நேரத்தில் திக்கு பல ரீதியாக பலவீனத்தையும் அடைவார். ஆதலால் துலாம் லக்னத்தில் உச்சம் பெற்று இருக்கின்ற சனியை அதிபலம் பெற்று நிற்பதாக கொள்ள முடியாது. சனியோடு சேர்ந்த, பார்த்த கிரகங்கள் பெற்றசாரம், சனி நின்ற அந்த ஸ்தானாதிபதியின் நிலை போன்ற எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பு சனியின் பலம் எவ்வளவு என்று முடிவுக்கு வரவேண்டும்
 
குருவும் புதனும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருந்தால் அதிக பலம் பெற்றவர்கள் 
 
சனியும் ராகுவும் ஏழாம் இடமாகிய கேந்திரத்தில் இருந்தால் 
 
சூரியனும் செவ்வாயும் பத்தாம் இடமான கேந்திரத்தில் இருந்தால் கூடுதல் ஆற்றல் உடையவர்
 
சந்திரனும் சுக்கிரனும் நாலாம் இடம் ஆகிய கேந்திர ஸ்தானத்தில் நின்று இருந்தால் பெரும் சக்தி வாய்ந்தவர்கள் ஆவார்கள்
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!