திருமணம்
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் காலங்களில் திருமணம் வைப்பது இல்லை. அதிலும் குறிப்பாக மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் காலத்தில் கீழ் காணும் விஷயங்களை செய்யவே கூடாது.
- கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
- நெடுந்தூரப் பயணம் செல்லக்கூடாது.
- பெரிய அறுவை சிகிச்சை செய்ய கூடாது.
- முக்கியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது
அதுவே ரோகினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் காலங்களில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு மற்றவை மத்திம பலனை தரும்.