கற்பூரம் மிகவும் தூய்மையானது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையை மிகவும் அமைதியாக மாற்றுகிறது. அதனால் தான் ஒவ்வொருவரும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை ஏற்றுகிறார்கள். பூஜை நேரம் இல்லாவிட்டாலும் சாதாரணமாக கூட வீட்டில் கற்பூரம் ஏற்றுவார்கள். அதே போல பிரியாணி இலையும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த இரண்டையும் சேர்த்து எரிப்பதால் வாஸ்துபடி நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்?
சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்தில் ஒரு பிரியாணி இலையை போட்டு எரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விரட்டியடிக்க முடியும். சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்துடன் பிரியாணி இலைகளை சேர்த்து எரிப்பதால் பண விஷயத்திலும் தடைகள் இருந்தால் நீங்கிவிடுமாம்.
தொழிலில் ஏதேனும் தடைகள் இருந்தால் தடைகள் நீங்கிவிடும். அதுமட்டுமின்றி யாராவது நிதி சிக்கல்களால் அவதிப்பட்டால், இந்த கற்பூரத்துடன் பிரியாணி இலையையும் சேர்த்து எரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. நிதி பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.
வீட்டில் சனிக்கிழமை இரவு கற்பூரத்துடன் பிரியாணி இலையை சேர்த்து எரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏதேனும் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் அது முற்றிலும் நீங்கிவிடும். அதுமட்டுமின்றி வீட்டில் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கிறது. சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டால் சனிக்கிழமை இரவு கண்டிப்பாக கற்பூரத்துடன் பிரியாணி இலையை எரிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் கையில் எப்போதும் பணம் இருக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. பலபேர் வீட்டில் யாராவது ஒருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள், அந்த சண்டையால் வீட்டில் மன அமைதி இருக்காது, ஏதோ ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த கற்பூரத்துடன் பிரியாணி இலையை எரிப்பதால் அந்தப் பிரச்சினைகள் வராமல் இருக்கும்.
வீட்டில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் குறைந்து வீடு அமைதியாக இருக்கும். தம்பதிகளுக்குள் பிரச்சனை இருந்தாலும் நீங்கும். கண் திருஷ்டி ஏதேனும் பட்டாலும் அது போய்விடும். எனவே இந்த வழிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.