Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021 -துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021 -துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021 -துலாம் 

நீதி, நியாயம், நேர்மை தவறாத சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!!

 நவம்பர் மாதம் குரு பெயர்ச்சி ஆனது நடைபெற இருக்கின்றது துலாம் ராசிக்கு குரு நான்கில் அமரப் போகிறார் சுப அசுப பலன்களை பற்றிய சிறுகுறிப்பு.
 நான்கில் அமரும் குருவால் உறுப்பினர்கள் இடத்தில் கவனமாக இருத்தல் அவசியம். தாயின் உடல்நலத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.குடும்பம்  சார்ந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். புதிதாக வீடு வாங்குவது அல்லது வீட்டை மாற்றுவது தற்சமயத்துக்குவேண்டாம்  ஆனால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு பல நன்மைகளை வாரி வழங்குவார் .

 குருவின் ஐந்தாம் பார்வை

குருவின் ஐந்தாம் பார்வையானது உங்களது ராசிக்கு எட்டாம் வீடான ரிஷபத்தில் உள்ளது.

 இதனால் உங்களின் உடல் நலம் மேம்படும், இதுவரை இருந்து வந்த உடல் தொந்தரவுகள் நீங்கிநிம்மதி அளிக்கும் . உங்களது அலுவலகம் மற்றும் உறவினர்களிடையே ஏற்பட்டு இருந்த பகை மற்றும் குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் ஒன்று கூடுவார்கள் .

குருவின் ஏழாம் பார்வை 

குருவின் 7-ஆம் பார்வை உங்களது ஒன்பதாம் வீடான கடக ராசியில் உள்ளது இது பித்ரு ஸ்தானம் என்று கூறுவது மரபு.

 ஒன்பதாம் இல்லத்தில் உள்ள குருவின் பார்வையால்  உங்களுடைய தொழில் செழிக்கும், ஆலயப் பணிகளில் அதிக ஈடுபாடு ஏற்படும், உடல் நலம் சீராகும், தந்தையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும், குடும்பத்தில் அன்பு பெருகும், தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

குருவின் 9ம் பார்வை 

 குருவின் 9ம் பார்வையானது உங்கள் ராசிக்கு 12-ம் வீடான கன்னியில் விழுகிறது. விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிட்டும் ,நிம்மதியான தூக்கம் ஏற்படும்,வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் , சுப விரயங்கள் ஏற்படும், வீண் விரையங்கள் தடுக்கப்படும்.

 பரிகாரம் :

வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணா மூர்த்திக்கு விரதமிருந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வர அசுப பலன்கள் நீங்கி சுபபலன்கள் அதிகமாகும் நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!