திசையறிந்து வாசல் /மனை கோலுதல்
ஸ்ரீவாஸ்து புருஷன் அந்தந்த மாதத்தில் சூரியன் நின்ற ராசியில் காலை நீட்டி அந்த ராசிக்கு எதிராக அதன் ஏழாவது இராசியில் தலையை வைத்து படுத்திருப்பார் . எப்போதும் இடக்கை கீழும் வலக்கை மேலுமாகவே வைத்து படுத்திருப்பார்.
ஐப்பசி கார்த்திகை மாதத்தில் கிழக்கு திசையில் தலையை வைத்தும் மேற்கு திசையில் காலை நீட்டியும் தெற்கு திசையை நோக்கி பார்வை செலுத்துவார்.
மனை பூஜை போட்டாலும் வாசக்கால் வைத்தாலும் ஸ்ரீவாஸ்து பகவனார் பார்க்கும் திசையை நோக்கி அதாவது வயிற்று பாகம் இருக்கும் பக்கமே செய்ய வேண்டும்.
- தலை இருக்கும் திசையில் செய்தால்- தலைவன் மரணம்
- மார்பு திசையில் செய்தால் மனை எரிந்து போகும்
- கை திசையில் செய்தால் குழந்தைகள் மரணம்
- வயிற்று திசையில் செய்தால் – சிறந்த வாழ்வு அமையும்
- முதுகு பகுதியில் செய்தால் -அரச பயம் ஏற்படும்
- கால் பகுதியில் செய்தால் மனைவிக்கு தீங்கு ஏற்படும்
உதாரணமாக வடக்கு திசை பார்த்த மனையுள்ளவர்கள் ஐப்பசி-கார்த்திகை மாதத்தில் மனை பூஜை நிலை பூஜை செய்தால் அரச பயம்-குழந்தைகள் மரணமாம் .
கிழக்கு திசை பார்த்த மனையுள்ளவர்கள் ஐப்பசி – கார்த்திகை மாதத்தில் மனை பூஜை நிலை பூஜை செய்தால் தலைவன் / தலைவி ( அ ) தாய் / தந்தை மரணமாம் .
மேற்கு திசை பார்த்த மனையுள்ளவர்கள் ஐப்பசி கார்த்திகை மாதத்தில் மனை பூஜை நிலை பூஜை செயதால் மனைவிக்கு மகளுக்கு கேடு.
வாஸ்து ஆனந்து
9445205291