Home108 திவ்ய தேசம்திவ்ய தேசம் -திருமணி மாடக் கோயில் (திருநாங்கூர் )-குரு பரிகார ஸ்தலம்

திவ்ய தேசம் -திருமணி மாடக் கோயில் (திருநாங்கூர் )-குரு பரிகார ஸ்தலம்

திருமணி மாடக் கோயில் ( திருநாங்கூர் )

திருமாலின் தரிசனத்தை அடுத்தடுத்து காணக்கூடிய வாய்ப்பு திருநாங்கூரில் இருக்கிறது. திருமால் தரிசனம் மட்டுமின்றி கருட வாகனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூலோகத்தில் வைகுண்டத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் ஒருமுறை திருநாங்கூர் திருமணி மாடக் கோயிலுக்கு வந்து நாள் முழுவதும் தங்கி தரிசனம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

சீர்காழியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த திருமணிமாடக் கோயிலின்

மூலவர் நாராயணன் நந்தாவிளக்கு என்றும் வேறு பெயர் உண்டு வீற்றிருந்த திருக்கோலம்.

உற்சவர் நாராயணன்.

அளத்தற்கரியான் என்று மற்றொரு உத்ஸவரும் உண்டு.

தாயார் புண்டாரீகவல்லித் தாயார். புருஷோத்தம நாயகி

தீர்த்தம் இந்திர புஷ்கரணி ருத்ர புஷ்கரணி

விமானம் ப்ரணவ விமானம் என்ற பெயரும் உண்டு.

இந்திரனுக்கும் ஏகாதச ருதரர்களுக்கும் பெருமாள் நேரிடை தரிசனம் தந்த தலம்.

திருமணி மாடக் கோயில்

இந்தக் கோயிலின் மிகப்பெரிய விசேஷம் என்பது அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடக்கும் 11 கருட சேவைதான். இந்தக் கோயிலில் மட்டுமின்றி , திருநாங்கூரிலுள்ள மற்ற பெருமாள் கோவிலிலிருந்தும் பெருமாள்கள் கருட வாகனங்களில் ஒன்றாக வந்து இங்கு சேர்வை சாதிப்பார்கள்.

ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் அவர்தம் தர்ம பத்தினி குமுதவல்லியுடனும் அவர் ஆராதித்த பெருமாளுடனும் பெருமாளின் சகதர்மினியான உபய நாச்சியாருடனும் பல்லக்கில் மேலேறி , 11 க்ஷேத்திரங்களுக்கும் வயல் வழியாக இறங்கி , பயிரை மிதித்துக் கொண்டு , அங்கங்கே மங்களா சாசனம் செய்து கொண்டே , தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் நாராயணப் பெருமாள் ( அருகில் உள்ளது ) கோயில் வாசலில் வந்து சேர்வார்.

பிறகு அங்கு கருட வாகனத்தில் நிற்கும் 11 திவ்ய தேசப் பெருமாள்களையும்ஆழ்வார் பிரதக்ஷிணமாக வந்து மாலை மரியாதைகள் செய்துவிட்டு பின்பு வீதி புறப்பாடு நடக்கும். பயிரை ஆழ்வார் மிதித்ததால் பயிர் நன்றாக வளரும் என்பது ஐதீகம்.

திருமணி மாடக் கோயில்

பரிகாரம் :

ஒரு கருட வாகன தரிசனமே நமது அனைத்துப் பாவங்களையும் தீர்க்கும் . 11 கருட சேவையைக் கண்டால் பத்து தலைமுறைக்கு நமக்கு பாவம் என்பதே ஏற்படாது.

குழந்தை இல்லாத பாவம் கழிய , குறையுடைய குழந்தை இருந்தால் அந்தக் குறை நீக்க செய்கின்ற பரிகாரம் , நோயுற்ற கணவனோ – மனைவியோ இருந்தால் – அவர்கள் முன் ஜென்ம பாவம் விலக , நோய் விலக , செய்ய வேண்டிய பரிகாரம் , ஏழ்மை நிலை மாற செய்ய வேண்டிய பிரார்த்தனை , கோர்ட் விவகாரத்திலிருந்து நல்லபடியாக வெளிவர செய்ய வேண்டிய பரிகாரம் – அத்தனையும் இதுவரை செய்யாதவர்கள் திருநாங்கூர் வந்து தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடக்கும் 11 கருட சேவையைக் கண்டு பெருமாளை தரிசனம் செய்தால் போதும். அவர்கள் குறைகள் களையப்பட்டு விடும்.

கோவில் இருப்பிடம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!