திதி சூனியம்
திதி சூன்ய ராசிகளில் இருக்கும் கிரகங்கள் தங்கள் பலனை சிறப்பாக செய்வது இயலாது. எனவே தசாநாதன் திதி சூன்ய ராசிகள் இருந்தால் தான் இருந்தால் தான் தர வேண்டிய பலனை சரியாக தர முடியாது.
குறிப்பு: திதி சூன்யாதிபதிகள் 6, 8,12ல் இருந்தாலும் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ராசிகளில் இருந்தாலும் சிறப்பு விதிப்படி திதி சூனியம் இல்லை, தோஷம் செய்யாது.
அமாவாசை,பெளர்ணமி திதிகளுக்கு திதி சூனியம் இல்லை.
திதி சூன்யம் பெற்ற கிரகத்தின் காரகம் மட்டுமே பாதிப்படைகிறது
விளக்கம்:
ஜனனம் ஆனது எந்த திதியோ அந்தத் திதி சூன்ய ராசி அதிபதிகள் லக்னத்திற்கு 1 ,2, 4 ,5 ,7 ,9 ,10, 11 இடங்களுக்கு அதிபதியாக இருந்து அவர்கள் திசை வந்தால் திசா நாதன் மேற்கூறிய ஸ்தானங்களில் நின்றாலும் ஆட்சி ,உச்ச, வீடுகளில் நின்றாலும் யோக பலனை தர மாட்டார்.
3,6, 8 ,12-க்கு உடையவர் ஆக இருந்து 3,6,8,12 ல் நின்றால் அவர்களின் திசையில் யோக பலனை தர மாட்டார் மற்ற இடங்களில் நின்றால் யோக பலன்களைத் தருவார் என்றும் நூல்களில் கூறப்பட்டுள்ளது இது அனுபவத்தில் ஒத்துவரவில்லை…