பஞ்சாங்கம்
பஞ்ச+அங்கம் =பஞ்சாங்கம் ஐந்து அங்கங்கள் சேர்ந்த அமைப்பிற்கு பஞ்சாங்கம் என்று பெயர். அவை 1.கிழமை 2.நட்சத்திரம் 3.திதி 4.யோகம்5.கரணம் இவை அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை ஆகும்.
கிழமைகள்-7
ஞாயிற்றுக்கிழமை: இதன் அதிபதி சூரியன் ஆகும். இதில் பதவி ஏற்றல், உயர்ந்த மனிதர்களை சந்தித்தல், வாகனம் வாங்குதல், போர் புரிதல், வியாபாரம் ஆரம்பித்தல், குடும்பத்தில் மூத்தவர்களை சந்திப்பது, மருந்து தயாரிக்க, சேமிப்பு, வீடு கட்ட உகந்த நாள்.
திங்கள்கிழமை:இதன் அதிபதி சந்திரன் ஆகும். இதில் கடல்பயணம், சங்கு, முத்து, நீர், வெள்ளி, மரம் நடுதல், கரும்பு விவசாயம் தொடர்பான செயல்கள், பெண்களுடன் சேர்க்கை, பால், நீர் மோர் அருந்துதல், மலர் மாலை அணிதல், கடல் வாணிபம் கப்பல் பயணம், கதை, கவிதை, கட்டுரை எழுதுதல் போன்றவற்றிற்கு உகந்தநாள்.
செவ்வாய்க்கிழமை: இதன் அதிபதி செவ்வாய் ஆகும். இதில் போரிடுதல், தாதுப்பொருள் சேகரிப்பு, சுரங்க வேலை, ஆயுதம் செய்தல், பாகப்பிரிவினை செய்ய, அக்னி காரியங்கள், முதலியன செய்ய உகந்த நாள்.
புதன்கிழமை: இதன் அதிபதி புதன் கிரகம் இதில் நாட்டியம் பயிலுதல், தூது போதல், சிற்ப ஜோதிடம் கற்றல், கணிதம் கற்க, வியாபாரம் செய்ய, சங்கீதம் பயில, திருமண காரியங்கள் பேசி முடிக்க, வழக்காடுவதற்கு உகந்த நாள்.
வியாழக்கிழமை: இதன் அதிபதி குரு சுபகாரியங்கள், மங்களகரமான காரியங்கள் செய்தல், தங்கநகை வேலைகள் செய்ய, யாகம் செய்ய, குரு உபதேசம் பெற, மத போதனைகள் பெற, மகான்களை தரிசிக்க, மரம், செடி கொடிகளை நட்டு வளர்க்க உகந்த தினமாகும்.
வெள்ளிக்கிழமை: இதன் அதிபதி சுக்கிரன் கிரகம் ஆகும் இதில் திருமணம் செய்ய, சங்கீத நாட்டியம் பயில, வெள்ளி பாத்திரங்கள் வியாபாரம் செய்ய, வாங்க, வண்டி, வாகனம் வாங்க, புது வீடு குடிபோக ,வீடு கட்ட ஆரம்பிக்,க அலங்கார பொருள் வாங்க முதலியன செய்ய உகந்த நாள்.
சனிக்கிழமை:இதன் அதிபதி சனி கிரகம் ஆகும். இதில் இரும்பு வியாபாரம், கருங்கல் வியாபாரம், ஆயுதம் தயாரித்தல், வீடு வாங்க, நீதி வழங்கல், கழிவுகளை அகற்றுதல், மருந்து சாப்பிடுதல் போன்றவற்றை செய்ய உகந்த நாளாகும்..
மீண்டும் நாளை நட்சத்திர பதிவில் சந்திப்போம்…
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266