Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -39-12ம் வீட்டு கிரக பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -39-12ம் வீட்டு கிரக பலன்கள்


12ம் வீட்டு கிரக பலன்கள்(12th House in Astrology) 

  • 12ம் வீட்டு கிரக பலன்கள்  :12- ம் அதிபதி(12th House in Astrology)  சுபர் உடன் அல்லது சொந்த வீட்டில் உச்சம் பெற்று இருந்தால் அல்லது 12ஆம் இடத்தில் சுபர் இருந்தால் ஒருவர் அழகான வீடுகள், படுக்கைகள், உயர்ரக வாசனை திரவியங்கள் பெற்று சந்தோஷத்துடன் இருப்பார். நல்ல காரியங்களுக்கும் செலவு செய்வார்.
  • சந்திரன் 12ம் அதிபதியாக இருப்பின், உச்சம் பெற்று அல்லது சொந்த வீட்டில் இருந்து. சொந்த நவாம்சம் அல்லது 11-ல்/ 9-ல்/5-ல் இராசிலோ அல்லது நவாம்சத்தில் பெற்றிருத்தல் ஜாதகருக்கு நல்ல மதிப்புமிக்க ஆடை, ஆபரணங்களுடன், கற்றுத் தேர்ந்தவராகவும், அதிபதியாகவும் இருப்பார்.
  • 6,  12ம் அதிபதி 6 ,8 அல்லது பகை நவாம்சம், நீசம் நவாம்சம் அல்லது எட்டாமிடம் நவாம்சம் பெற்று இருப்பின் ஒருவர் மகிழ்ச்சி இல்லாமல் மனைவி மூலம் செலவினங்களினால் தொல்லைகளும் பொதுவாக சந்தோஷம் இல்லாமல் இருப்பார். 12ம்அதிபதி திரிகோணத்தில் அல்லது 120 பாகை பெற்றிருந்தால் ஜாதகர் மனைவியை பெறுவார்.
அடிப்படை ஜோதிடம் -பகுதி -39-12ம் வீட்டு கிரக பலன்கள்
  • கிரகங்களின் முதல் பகுதி 0° முதல் 180° வரை தெளிவான முடிவுகளையும் 180° முதல் 360° வரை ரகசியமான நிகழ்வுகளையும் தரும்
  • ராகு 12ஆம் வீட்டில் செவ்வாயுடன் சனி, சூரியன் இருப்பின் ஜாதகர் நரகத்துக்குச் செல்வார். 12ம் அதிபதியுடன் சூரியனுடன் இருந்தால் இதே மாதிரி முடிவு ஏற்படும்
  • சுபர் 12ஆம் வீட்டிலும் அதனுடைய அதிபதி உச்சம் பெற்று அல்லது சேர்க்கை பெற்றோ அல்லது சுபர் பார்வை பெற்று இருந்தால் ஒருவர் மோட்சம் அடைவார்
  • 12ஆம் அதிபதியும்(12th House in Astrology)  12ஆம் வீட்டில் அசுபருடன் சேர்ந்து இருந்தால் மற்றும் அசுபர்களின் பார்வை பெற்றிருந்தால் ஒருவர் ஒரு தேசம் விட்டு ஒரு தேசம் அலைந்து திரிவார்
  • ஒருவர் தன்னுடைய தேசத்திற்கு திரும்பி வர வேண்டுமானால் 12 ஆம் அதிபதி 12ஆம் வீடு சுபர்களாலும் ,சுபர்களின் பார்வை பெற்றிருத்தல் வேண்டும்
  • இரண்டாமிடத்தில் சனி அல்லது செவ்வாய் சுபர்களின் பார்வை இல்லாது இருப்பின் அவரது வருமானம் பாவச் செயல்கள் மூலம் பெறுதல் ஆகும்
  • லக்னாதிபதி 12ஆம் வீட்டிலும்(12th House in Astrology)  12ஆம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் மத சம்பந்தமான வற்றுக்கு செலவு செய்வார்
அடிப்படை ஜோதிடம் -பகுதி 1-E BOOK-தமிழில்  
 
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!