அடிப்படை ஜோதிடம்-கிரக அவஸ்தை
அவஸ்தை 5 வகைப்படும்
1.பால்ய அவஸ்தை-குழந்தைப்பருவம்
2.கௌமார அவஸ்தை- விளையாட்டுப் பருவம்
3.யெளனவ அவஸ்தை-வாலிபப்பருவம்
4. விருத்தாஅவஸ்தை-முதுமைப்பருவம்
5. மரண அவஸ்தை-இறப்புநிலை
இந்த ஐந்து நிலைகளில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இதில்
சனி, ராகு,கேது-விருத்தா அவஸ்தையில் இருக்கக்கூடாது
சுக்கிரன்-கௌமார, மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது.
புதன், குரு, சூரியன்-மரண அவஸ்தையில் இருக்கக்கூடாது
சந்திரன்-பால்ய அவஸ்தையில் இருக்கக் கூடாது
இது தவிர மற்ற அவஸ்தைகளில் இருக்கும் பொழுது தர வேண்டிய பலனை சிறப்பாக தரும். யெளனவ அவஸ்தையில் இருக்கும் கிரகம் தம் பலனை முழுமையாக செய்யும்.
அவஸ்தை காணும் முறை
ஆண் ராசிக்கு ஒருவரிசை கிரகமாகவும், பெண் ராசிகளுக்கு அதே வரிசை தலைகீழாக மாறியும் வரும்.
ஆண் ராசி(ஒற்றை ராசி): மேஷம், மிதுனம், சிம்மம் ,துலாம் ,தனுசு, கும்பம்
- 1° முதல் 6°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-பால்ய அவஸ்தை.
- 7°முதல் 12° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-கெளமார அவஸ்தை.
- 13° முதல் 18° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-யெளனவ அவஸ்தை.
- 19° முதல் 24°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-விருத்தா அவஸ்தை
- 25° முதல் 30° க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-மரண அவஸ்தை
பெண் ராசி (இரட்டைப்படை): ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
- 1°முதல் 6°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-மரண அவஸ்தை
- 7° முதல் 12° ஒரு கிரகம் இருப்பின் அது-விருத்தா அவஸ்தை.
- 13°முதல் 18°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது-யெளனவ அவஸ்தை
- 19°முதல் 24°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது கௌமார அவஸ்தை
- 25° முதல் 30°க்குள் ஒரு கிரகம் இருப்பின் அது பால்ய அவஸ்தை.