புதன் வக்கிரம், அஸ்தமனம்
நவகிரகங்களில் சூரியனை வேகமாக சுற்றி வரும் கிரகம் புதன். பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்குள் புதன் சூரியனை நான்கு முறை சுற்றி வந்துவிடுகிறது. சூரியனைச் சுற்றி வரும் புதன் நான்குவித நிலைகளை அடைகிறது.
அவை
1.சகஜ நிலை
2.மகாஅஸ்தமனம்
3.வக்கிரம்
4.வக்கிரஅஸ்தமனம்
மகா அஸ்தமனம்:
புதன் சூரியனை அதன் சுற்றுவட்டப்பாதையில் வழக்கமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி சுற்றி வரும் போது சில சமயம் பூமியை விட்டு விலகி வெகுதூரம் சென்று சூரியனின் மறு பக்கத்தை அடைகிறது. அதாவது பூமிக்கும் புதனுக்கும் இடையே சூரியன் நிற்கும் நிலை ஏற்படுகிறது. புதனை விட சூரியன் பல மடங்கு பெரியதாக இருப்பதால் பூமியிலுள்ள நாம் பார்வைக்கு புதன் தெரியாமல் முழுவதும் மறைக்கப்படுகிறது.புதனை பார்க்கமுடியாமல் முழுவதும் மறைக்கப்படும் இந்த நிலைதான் “மகா அஸ்தமனம்” எனப்படுகிறது.
மகா அஸ்தமன பலன்கள்!
இவ்வாறு புதன் மகா அஸ்தமனம் அடைகிற காலத்தில் புதனுடைய கதிர்கள் நேரடியாக பூமியிலுள்ள நம்மை வந்தடைவது இல்லை. எனவே புதனின் மகா அஸ்தமன காலத்தில் பிறந்த குழந்தையின் வாழ்க்கையில் புதனின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். உதாரணமாக குழந்தையின் பேச்சுத் திறன், கல்வித் திறன் பாதிக்கப்படலாம். அறிவு வளர்ச்சியிலும் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
வக்கிர அஸ்தமனம்
புதன் சூரியனை சுற்றி வரும் போது சில சமயம் பூமிக்கு மிக அருகில் வந்து விடும் இத்தகைய காலத்தில் புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும். பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது புதனும் சூரியனை சுற்றி வருகிறது ஆனால் பூமியின் வேகமும் புதனின் வேகமும் வித்தியாசமானவை எனவே இந்த வேக வித்தியாசத்தால் புதன் வக்கிரகதியில் பின்நோக்கி (இயற்கைக்கு மாறாக மறு திசையில் திரும்பி) வருவது போல் தோன்றுகிறது. இவ்வாறு புதன் வக்கிரகதியில் சஞ்சரிப்பது போல் தோன்றும் காலகட்டத்தில் கிட்டத்தட்ட சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் புதன் சஞ்சரிக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையில் புதனின் ஒருபக்கம் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும்
இன்னொரு பக்கம் பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும். சூரியனைப் பார்த்து திரும்பியுள்ள புதனின் பக்கம் வெளிச்சம் உள்ளதாக இருக்கும். பூமியை பார்த்து திரும்பியுள்ள புதனின் மறுபக்கம் இருட்டு உள்ளதாக இருக்கும். அதாவது பூமியில் உள்ள நமக்கு புதன் புலப்படுவதில்லை. கண் எதிரே புதன் இருந்தும் காண முடியாமல் போவதற்கு காரணம் நாம் காணும் புதனின் பக்கம் சூரிய வெளிச்சத்தை பெறுவதில்லை இந்த நிலையைத்தான் வக்கிர அஸ்தமனம் என்கிறோம்.
வக்கிர அஸ்தமன பலன்கள்
வக்கிர அஸ்தமனத்தில் பிறக்கும் குழந்தைக்கு புதனுடைய கதிர்கள் நேரடியாக அதிகமாக கிடைக்கின்றன எனவே குழந்தைகளை அதிக புத்திக் கூர்மை உள்ளதாக காணப்படுகிறது. இதைத்தான் ‘மறைந்த புதன் நிறைந்த கலை’ என்று சொல்லுகிறோம். இங்கு மறைந்த புதன் என்பது வக்கிராஸ்தமன மடைந்த புதனை குறிக்குமேயொழிய மகா அஸ்தமன மடைந்த புதனை குறிக்காது
ஆனால் புதன் வக்கிரகதியிலோ ,வக்கிராஸ்தமன நிலையிலோ பிறக்கின்ற குழந்தை அதிக புத்தி கூர்மை உடையதாக இருந்தாலும் சில சமயங்களில் குதர்க்கமான நிலையில்(சட்ட விரோதம், தீவிரவாதம்) புத்தி கூர்மையுள்ள குழந்தையாக இருந்து விடுகிறது. அதிக புத்தி கூர்மைக்கு காரணம் புதன் வக்கிரகதியில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவது தான். குதர்க்கமான குணம் இருப்பதற்கு காரணம் இயற்கையான சகஜ நிலையில் சஞ்சரிக்காமல் வக்ர கதியில் சஞ்சரிப்பதுதான்.
வக்கிர நிலை !
வக்கிர அஸ்தமன நிலைக்கு முன்பாக பூமியும் புதனும் சூரியனை சுற்றும் போது ஏற்படும் வேக வித்தியாசத்தால் புதன் பின்னோக்கி வருவது போல் தோன்றும் இதைத்தான் ‘வக்கிர நிலை’ என்கிறோம். இந்த வக்கிர காலத்தில் பிறந்த குழந்தைகளும் நல்ல அறிவுள்ளவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
சகஜநிலை
புதன் மகா அஸ்தமனம், வக்கிரஅஸ்தமனம், வக்கிரம் அடையாத காலத்தில் புதனின் அளவான கதிர்கள் பூமியை நோக்கி வந்தடைகின்றன. இந்த நிலையை சகஜ நிலை என்கிறோம். இந்த காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் அறிவாற்றல் அளவுக்கு சரியானதாக இருக்கும்.
இவ்வாறு புதனின் கதிர்கள்
1.சகஜ நிலை
2.மகா அஸ்தமன நிலை
3.வக்கிர நிலை
4.வக்கிர அஸ்தமன நிலை
ஆகிய 4 நிலைகளில் நம்மை வந்தடைகின்றன.
எனவே ஒரு குழந்தை பிறக்கும் காலத்தில் புதன் இந்த நான்கு வித நிலைகளில் எத்தகைய நிலைகளில் இருந்து இருக்கிறான். அதனால் குழந்தையின் வாழ்க்கையில் புதன் காரகத்துவம் எவ்வாறு பாதிப்பான பலனளிக்கிறது என்பவைகளை நாம் ஆராய வேண்டும்.
வக்கிரம் தொடரும்….
புதன் வக்கிர மறைவு நிலைய மிகத்தெளிவாக சொன்னது மகிழ்ச்சி. லக்னாதிபதியாக புதன் வக்கிரமடைந்து ஆறில் 4° க்குள் மறைவது பிறப்பு ஜாதகத்தில் என்ன பலனைத்தரும்? விளக்குங்கள்