கிரக வக்கிர பலன்கள்
வக்ர காலம்
குருவின் வக்ர காலம்– 3மாதங்களுக்கு அதிகமாகவும்
சனியின் வக்ர காலம் -4 முதல் 5மாதம் வரையிலும்
செவ்வாயின் வக்ர காலம்-சுமார் 2மாதம் (2ஆண்டுக்கு ஒருமுறை)
சுக்ரனின் வக்ர காலம்-சுமார் 50 நாட்கள் 11/2 வருடத்திற்கு ஒருமுறை
சுக்ரனின் வக்ர நிலை
சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களுமே மாத கோள்கள் முக்கூட்டு கிரகங்கள் ,வேகமாக நகரக் கூடியவை எனவே சுக்கிரனின் வக்கிரத்தை துல்லியமாகக் கணிப்பது சற்று கடினம். எனவே பஞ்சாங்கம் மூலம் அறிந்து கொள்வது சிறப்பு. சுக்ரனின் வக்ர நிலை களத்திர வழியில் திருப்தியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும்.
வக்ர நிலை பற்றி ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்
1.சுப கிரகங்கள் வக்ரம் ஆனால் அதிபலம் ஏற்படும்.அவை ராஜ்யத்தை கொடுக்கும்.
2.பாவ கிரகங்கள் வக்ரம் ஆனால் மனிதனுக்கு துக்கத்தை தருவதுடன், வீண் அலைச்சலை உண்டாக்கும்.
(1,2 பிருகத் ஜாதகம், கிரகயோனி அத்தியாயம்-2 )
3.வக்ரமடைந்த கிரகங்கள் உச்ச பலனை தரும்.
(ஜாதக கணிதா மிருக சாகரம்)
4. வக்ர கிரகம்+ வக்ர கிரகம் சேர்ந்தால் மிக அதிக அளவு பலம் பெறும்
5. வக்ர கிரகம் உச்ச ராசியில் -மத்திம பலன்
6. வக்கிர கிரகம் ஆட்சி வீட்டில்-பலம் இல்லை
7.வக்கிர கிரகம் நீச ராசியில்-அதிக பலம் பெறும்
8.சனி, செவ்வாய் வக்ரம் பெற்று நீச்ச, பகை வீடு பெற்றால் அதிக பலம் இவர்கள் நல்ல பலன் தருவார்கள்
நடைமுறையில் வக்கிர பலன்
1வக்கிரம் பெற்ற கிரகங்கள்இளமையில் கஷ்டங்களையும் போராட்டத்தையும் கொடுத்து முதுமையில் ஏதோ ஒரு வகையில் புகழை தருகிறது
2.பாவ கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்கள் அதிகம் தந்து கடைசியில் பயனற்ற நிலையையோ அல்லது புகழோடு மரணத்தையோ தந்துவிடுகிறது
3. சுப கிரகங்கள் வக்ரம் பெற்றால் பல சோதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் தந்து பின் நல்ல வாய்ப்பை தருகிறது
4.ஒரு ஜாதகத்தில் 3 அதற்கு மேலும் கிரகங்கள் வக்கிரம் அடைந்திருந்தால் கடினமான சோதனைகளையும் வேதனைகளையும் தந்து கடைசியில் உயர் நிலைக்கு வந்து புகழையும், எதிர்பாராத திடீர் மரணத்தையும் தருகிறது.
5.சனி வக்கிர நிலை-உலக பற்றுகளில் இருந்து விடுவித்து ஆன்மீகத்தில் உயர்வடைய வழிகாட்டுகிறது.
6.புதன் வக்கிர நிலை-சமயோசிதமான புத்திசாலித்தனத்திற்கும், ஏமாற்றுவதற்கும்,திறமையாக பேசுவதற்கும், கபடநாடகத்திற்கும் துணைபுரிகிறது.
7.குரு,சனி வக்கிர நிலை கௌரவம் புகழை ஏற்படுத்துகிறது.
குரு வக்கிர நிலை பலன்:
நாஸ்திக எண்ணங்களுக்கும், தவறான வருமானத்திற்கும், முறைகேடான செயல்களுக்கும், முறையற்ற சந்ததிகளுக்கும் வழிவகுத்து விடுகிறது. குரு துரோகம்,கோயில் சொத்தை அபகரித்தல், பொய்யான ஆன்மீகம் போன்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன.
சனி வக்கிர நிலை பலன்:
கடின உழைப்பால் உயர வைக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும், வாழ்வில் போராட்ட சூழ்நிலையில் இருந்து கொண்டே இருக்கும்
திடீர் அதிர்ஷ்டத்தை தரும், திடீர் நோய்,விபத்து, வழக்கு போன்றவையும் தரும்.
செவ்வாயின் வக்ர நிலை பலன்:
இதுவும் வாழ்வில் போராட்டத்தையும் கடின உழைப்பையும் காட்டும். சில சமயம் திடீர் லாபமும் உண்டு, சில சமயம் விபத்தும் உண்டு.
புதனின் வக்கிர நிலை பலன்:
இது நன்மையைத் தரும் உயர்ந்த கல்வியையும், நல்ல பேச்சாற்றலையும் திறமையையும் தரும்.
சுக்கிரன் வக்கிர நிலை பலன்:
இது பெண்கள் விஷயத்தில் பல முறைகேடான வழிகளை ஏற்படுத்தும். திருமண வாழ்வில் குறைபாடுகள் தோன்றும். எதிலும் ஒரு கட்டுப்பாடான நிலை இருக்காது.
வக்கிரம் முடிவு:
ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் அந்த கிரகத்தின் தன்மையிலும் காரகத்துவத்திலும் குறைபாடுகள் இருக்கவே செய்யும். அதே போல் வக்கிர கிரகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டின் ஆதிபத்திய பலனையும் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.
ஆக வக்கிரம் பெற்ற கிரகம் அதன் ஆதிபத்தியம் காரகத்துவத்திலும், இருக்கும் வீட்டிலும் தன் வக்கிர குணத்தை காட்டவே செய்யும். எனவே அதை ஒரு சூத்தகத்தரிக்காய் என்று சொல்லலாம். ஒரு பைத்தியக்காரனைப் போல அதன் செயல்பாடுகள் உறுதி அற்றதாக இருக்கும்…
வக்கிரம் முடிந்தது ….அடுத்தது திதி சூன்யம்…
மீண்டும் நாளை சந்திப்போம்…
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266