அடிப்படை ஜோதிடம்-பகுதி3-கிரகங்கள், ஆட்சி, உச்சம், நீசம்,மூலத்திரிகோணம்,கேந்திரம் ,திரிகோணம்,பணபரல்,

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அடிப்படை ஜோதிடம்-பகுதி-3
கிரகங்கள், ஆட்சி, உச்சம், நீசம்,மூலத்திரிகோணம்

பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் உச்சம். ரிஷபத்தில் சந்திரன் உச்சம். கடகத்தில் செவ்வாய் நீசம். சனி பகை என்று ஒவ்வொரு கிரகத்துக்கும் சொல்லப்பட்டுள்ளன.

பொதுவாக மக்களிடையே ஆட்சி, உச்சம், நட்பு பெற்ற கிரகங்கள் பற்றி சில மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

6, 8, 12-க்குடைய கிரகம் ஆட்சி,உச்சம், நட்பு பெற்றால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.

6-க்குடையவர் நீசம் பெற்றால் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு ஏற்படாது.

8-க்குடையவர் நீசம் ஆயுள் பங்கம் ஏற்படும்.

6-குடையவர் ஆட்சி பெற்றால் சரள யோகம்.

12-க்குடையவர் நீசம் பெற்றால் விரையம் குறையும். அதே நேரத்தில் வெளிநாடு செல்ல நேரும். தூக்கம் கணவன்-மனைவி தாம்பத்திய உறவு பாதிக்கும்.

எனவே ஒவ்வொரு கிரகத்திற்கும் நன்மையும் தீமையும் கலந்தே பலன்கள் நடைபெறும். யோகத்தை செய்யும் கிரகம் நீசம், பகை,அஸ்தமனம், கிரக யுத்தம், மறைவு போன்றவற்றால் பாதிப்படைய கூடாது. பாதித்தால் முழுமையான பலன்கள் கிடைக்காது. யோகத்தை செய்யாத கிரகம் நீசம், பகை, அஸ்தமனம்,  போன்றவற்றால் பாதிப்பு அடைய வேண்டும். நன்மைகள் உண்டாகும்.

அடிப்படை ஜோதிடம்
அடிப்படை ஜோதிடம்

பொதுவாக ஆட்சி, உச்சம், நீசம் பெற்ற கிரகம் ஒரு ராசியில் இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட டிகிரி வரை இருக்கும். அந்த டிகிரியில் இருக்கும் வரை ஆட்சி, உச்சம், நீசம், மூலத்திரிகோணம் உறுதியாக உள்ளதாக அர்த்தம். அந்த குறிப்பிட்ட டிகிரியில் இல்லையென்றால் மேற்கண்ட நிலையை அடைவதில்லை. சமநிலையில் அல்லது நட்பு நிலையில் உள்ளதாக அர்த்தம். 

ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் நீசம் என பொதுவாக ஜாதகத்தில் உள்ளதை மேலோட்டமாக நம்பி ஏமாறக்கூடாது மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் எந்தெந்த டிகிரியில் கிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

மூல திரிகோணம்

அடிப்படை ஜோதிடம்

சந்திரனை தவிர மற்ற கிரகங்களில் ஏதாவது ஒன்று தன் ஆட்சி வீட்டில் மட்டுமே மூலத்திரிகோணமாக அமையும்.

கிரகங்களில் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் தமது ஆட்சி வீடுகளில் ஒரு குறிப்பிட்ட பாகையிலே மூலத்திரிகோணம் என்ற நிலை அடைகின்றன. மூலத்திரிகோண வீடுகளில் கிரகங்களுக்கு ஸ்தான பலம் அதிகமாகும். அந்த வீடுகளில் அமைந்துள்ள கிரகம் மிகுந்த வலிமையை பெறும்.

கேந்திரம்

கேந்திரம் என்பது நான்கு மூலைகள் கொண்டது. எப்படி ஒரு சதுர கூரைக்கு நான்கு தூள்கள் உள்ளதோ, அதேபோல் நான்கு மூலைகள் சேர்ந்தது. லக்னத்தில் இருந்து 1,4,7,10 வீடுகளில் அமைந்த கிரகம் விணையாக செயல்படும். இதனை விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லுவார்கள். கேந்திர ஸ்தானங்களில் ஒரு கிரகம் உச்சம் பெறுவது இன்னும் சிறப்பான அமைப்பு ஆகும்.

கிரகங்கள் கேந்திரம் ஏறி இருந்தால் விஷ்ணு ஸ்தானம் 90°(பணம்) கேந்திரம்+உச்சம் உச்சமடைந்தால் 200% லக்னத்தில் இருந்து முடிவு செய்ய வேண்டும்.

அடிப்படை ஜோதிடம்

சர லக்கின ஜாதகருக்கு கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சர ராசிகளே.

ஸ்திர லக்ன ஜாதகர்களுக்கு கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும்ஸ்திர ராசிகளே

உபய லக்ன ஜாதகருக்கு கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் உபயம் ராசிகளே.

திரிகோணம்

லக்கினத்திற்கு 1,5,9,ம் இடங்கள் திரிகோணஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனை லக்ஷ்மி ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். இந்த ஸ்தான அறிகுறிகள் ஜாதகனை சத்தியம்,நேர்மை, தான, தர்ம்ம மற்றும் அற வழியில் செல்லத் தூண்டுவார்கள். ஒரு மனிதனுக்கு பணம் மட்டும் போதும் என்ற நிலை இல்லாமல் அறத்துடன் கூடிய வாழ்வு மட்டுமே புகழைத்தரும். கிரகம் திரிகோண ஸ்தானங்களில் நின்று விட்டால் தீய குணங்களில் தன்னுடைய தீய செயல்களை பாதியாக குறைத்துக்கொள்ளும்..

அடிப்படை ஜோதிடம்

ஆணுக்கு லக்கினம் பெண் வீட்டில் இருந்தால் பெண்ணுக்கு அடிமையாக இருப்பான் ..

உபஜெய ஸ்தானம்

இயல்பாகவே ஒருவருக்கு மூன்றாமிடம் தைரியத்தை பற்றியும், ஆறாமிடம் எதிரிகள், நோய், பகை என்பதை பற்றியும், பத்தாமிடம் ஒருவரின் கர்மம் என்ற கடமை மற்றும் செயல்பாடு பற்றியும், பதினொன்றாமிடம் ஒருவர் அடையும் லாபத்தினை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது. இது உபஜெய ஸ்தானம் இரட்டை பிறவியை சொல்லும். இடது கை, எழுத்து, ஆறுவிரல் மூன்றாம் பாவகம் சொல்லும். கேந்திர பலம் குறைந்தாலும் உபஜெய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் காப்பாற்றும் ஒரு கதவு அடைக்கப் பட்டார் இன்னொரு கதவு திறக்கும் என்பதைப்போல உபஜெய ஸ்தானத்தில் உள்ள கிரகம் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் காப்பாற்றும்.

அடிப்படை ஜோதிடம்

உபஜெயம் என்றால் வெற்றி என்று பொருள் ஒரு வெற்றியானது தன் திறமையில் கிடைப்பதற்கும் பிறரின் உதவியால் மறைமுகமாக கிடைப்பதற்கும் வேறு பாடு உள்ளது. லக்கினத்திலிருந்து உபஜெய ஸ்தானம் 3, 6, 10, 11 ம் இடம் ஆகும்.

ஆபோக்லீமம்(இருண்ட வீடுகள் )

ஆபோக்லீமம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் வலு குறைவான இடங்கள் 3,6,9,12.

பொதுவாக ஜாதகத்தில் உள்ள லக்கினத்திற்கு ஒளி இந்த வீடுகளில் மிகவும் குறைவாக இருக்கும். இந்த கிரகங்கள் தன்னுடைய கிரக பலன்களை கொடுக்க முடியாமல் முடக்கம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இந்த வீடுகள் மிகக்குறைந்த வலுக்கொண்டவைகளாக கருதப்படுகின்றன.

அடிப்படை ஜோதிடம்

லக்கினத்திலிருந்து ஆபோகிலீமம் ஸ்தானம் 3,6,9,12 ம் இடம் ஆகும்.

பணபரல் ஸ்தானம்

லக்கினத்திற்கு 2, 5, 8, 11 ஆகியன பணப்பரல் ஸ்தானம் ஆகும். ஜாதகருக்கு ஏதோ ஒரு வகையில் பணத்தை தரக்கூடிய அந்தஸ்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.

2 தன் பேச்சு செயலால் பணத்தைக் கொடுக்கும்.

அடிப்படை ஜோதிடம்

5 பூர்வீக சொத்து மூலமாகவும் தான் பெற்ற குழந்தைகள் மூலமாகவும் பணத்தைக் கொடுக்கும்.

8 எதிர்பாராத காப்பீடு மூலம் பணம் கிடைக்கும் அல்லது தன் மனைவி மூலமமும் கிடைக்கும்.

11 தான் செய்கின்ற தொழில் மீது லாபத்தை பெறுவது.

லக்கினத்திலிருந்து பணப்பரல் ஸ்தானம் 2, 5, 8, 11 ம் இடம் ஆகும் .

Leave a Comment

error: Content is protected !!