ராசி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்?
ராசி என்பது சந்திரனின் இருப்பிடம்
ராசியை வைத்து என்னென்ன தெரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி 100 கட்டுரைக்கு மேல் எழுதலாம்.அதையெல்லாம் பின் வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.
நாம ஜாதகத்தில் 12 கட்டங்களை பார்க்கிறோம் அதோடு 9 கிரகங்கள் நம் கண்ணுக்கு தெரிகிறது. அந்த 12 கட்டங்களில் 27 நட்சத்திரங்கள் இருக்கு.இந்த நட்சத்திரங்கள் வழியாகத்தான் அனைத்து கிரகங்களும் நகர்ந்து செல்கிறது.மற்ற கிரகங்கள் ராசியில் இருந்தால் அங்கே சூரியன் இருக்கார்,குரு இருக்கார் என்று சொல்லுவோம்! ஆனால் சந்திரன் இருக்கும் இடத்தை மட்டும் சந்திரன் இருக்கார் என்று சொல்லாமல் ராசி என்போம்.அதுதான் சந்திரனுக்கு உள்ள தனி சிறப்பு
இன்னொரு சிறப்பு இருக்கு! சந்திரன்தான் தாய் கிரகம் இதன் விளக்கங்கள் கிரக காரகம் என்கிற தலைப்பில் தனியாக பேசலாம். சந்திரனின் சிறப்புக்காக சொல்லும் தகவல்தான் இது.நம் தாய் மூலமாகதான் இந்த உருவம் வந்தது, உடல்வந்தது,வாழ்க்கை வந்தது.அந்த சந்திரன் எந்த ராசியில் இருக்கும்போது நாம் பிறந்தோமோ அந்த ராசியின் குணம் நம்மிடையே இருக்கும்.அதனால் ராசி முக்கியத்துவம் பெறுகிறது.. அந்த ராசி என்ன நிறம்,மற்றும் அது குட்டையா ராசியா, நெட்டை ராசியா..என்பதை பொறுத்து ஜாதகரின் நிறம் மற்றும் உயரம் இருக்கும்.. இதுபோன்ற ஆயிரம் தகவல் உள்ளது.
இப்போதைக்கு ராசியை பற்றி விவரம் இந்த அளவுக்கு போதும்.
லக்கினம் என்றால் என்ன ?
லக்கினம் என்பது சூரிய புள்ளி ஒரு நாள் என்பதை மணிக்கணக்கில் கூறுவதானால் 24 மணிநேரம். ஜோதிட முறைப்படி ஒரு நாள் என்பது காலை சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம்.இது சிந்து சாஸ்திர கணக்கு. ஆனால் ஆங்கிலேயர்கள் கணக்கு ராத்திரி 12 மணிக்கு பிறகு அடுத்த நாள்..
நமது ஜோதிடம் கணக்கும் காலை சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
சூரியனின் நகர்வு 2முறையாக நடைபெறுகிறது
1.நேரடியாக
2.மறைமுகமாக..
சூரியனின் பெயர்ச்சியைத்தான் மாத பிறப்பு என்கிறோம்.. சூரியன் சித்திரை மாதம் மேஷத்தில் இருப்பர்..பங்குனி மாதம் மீனத்தில் இருப்பர்.இப்படி ஒரு மாதத்திற்கு ஒரு ராசி கட்டமாக நகர்ந்து செல்கிறார்..
ஒரு ராசி கட்டம் என்பது 30° உதாரணமாக சூரியன் சூரியன் சித்திரை 1ம் தேதியில் 1°இருப்பர் இப்படியே ஒருநாளைக்கு 1°வீதம் நகர்ந்து செல்கிறார்..
உதாரணமாக..
ஒரு குழந்தை காலை 10 மணிக்கு பிறந்துள்ளது என்று வைத்து கொள்ளவோம்.அதன் லக்கினம் என்னவாக இருக்கும்.. கீழே உள்ள படத்தை பாருங்கள் ..தெளிவாக புரியும் சூரியன் உதயமானது முதல் 2மணி நேரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசி கட்டமாக நகர்ந்து செல்கிறது இது மறை முக கணக்கு…
இந்த பதிவில் ராசி லக்கினத்தை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்..
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்…
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266