கண்பார்வை கோளாறுகளை தீர்க்கும் -ஏகாம்பரேஸ்வரர் கோவில்- காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ஐந்தில் ஒன்றாகவும், தொண்டைநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் முதலாவதாக உள்ள தளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். இரண்டு கண்களிலும் பார்வை இழந்த சுந்தரர் இத்தல இறைவனை வழிபட்டு பதிகம் பாடி இரண்டு கண்களில் இடது கண் பார்வையை மீண்டும் பெற்ற தலம். இடது கண் பார்வைக்கோளாறு நோய் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம் காஞ்சிபுரம்.
இறைவன் பெயர்-ஏகாம்பரேஸ்வரர்
இறைவி பெயர் -காமாட்சி அம்மன்
இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் 6,திருஞானசம்பந்தர் பதிகம் 4 ,சுந்தரர் பதிகம் ஒன்று, என மொத்தம் 11 பதிகங்கள் உள்ளன
தல வரலாறு:
ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை பார்வதி ஒரு விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து இருள் அகற்றினர். அம்பிகை விளையாட்டாக கண்ணை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக ,பூவுலகுக்கு சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இருக்குமாறு அம்பிகையை பணித்தார்
அம்பிகையும் இந்த பூவுலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கி பூஜித்து வந்தார்.
அம்பிகை பார்வதியின் தவ பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார் வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி லிங்கத்தை அம்பாள் தழுவிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும், முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.
இவ்வாறு, இறைவனை இறைவி வழிபட்ட இந்த வரலாறு, திருகுறிப்புத் தொண்டை நாயனார் புராணத்திலும், காஞ்சி புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்கு தழுவகுழைந்த நாதர் என்றும் பெயர்.
சுந்தரர் கண் பார்வை பெற்ற வரலாறு:
சுந்தரர் திருவெற்றியூர் இறைவனை தரிசிக்க வந்த போது இறைவனுக்கு பூ மாலை கட்டி தரும் தொண்டினைச் செய்து வந்த சங்கிலி நாச்சியாரை கண்டார். அவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவரிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார்.
சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டு இருந்தார், அதனால் என்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார் அதற்கு சுந்தரர் இறைவனிடம் ஊர் ஊராக சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும் உங்கள் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னை பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும், சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் படியும் கூறினார்.
இந்த விவரத்தை சங்கிலி நாச்சியாரிடம் இறைவன் கூறிவிட்டார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சுந்தரரிடம் சங்கிலி நாச்சியார் மனிதராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து என்றும் நான் உன்னை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.
சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சத்தியத்தை மீறி சங்கிலி நாச்சியாரை பிரிந்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டது சுந்தரர் தனது கண் பார்வையை இழந்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் வழிபட்டு பதிகம் பாடி பார்வையை மீண்டும் பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘காணக் கண் அடியேன் பெற்றவாறே’ என்று உள்ளம் உருகி பாடியுள்ளார்.
இந்நாளிலிம் இறைவனை வழிபட்டு மனமுருகி சுந்தரரின் பதிகத்தைப் பாடி பல அன்பர்கள் முழு நம்பிக்கையுடன் ஓதி இடது கண் பார்வைக் கோளாறுகள் நீங்க பெற்றுவருகின்றனர்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …
சுந்தரர் கண்பார்வை பெற பாடிய பதிகம்
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந் தான் பெரிதும் உடையானைச்
சிந்திப் பாரவர் சிந்தையுள் உளானை
எலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபட பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காண கண் அடியேன் பெற்றவாறே
எள்கள் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபட சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..
Google Map: