ஆதி கும்பேஸ்வரர் கோயில்
ஊர்: கும்பகோணம்
இறைவன் : அருள்மிகு.ஆதி கும்பேஸ்வரர்
இறைவி: அருள்மிகு.மங்களாம்பிகை
தலவிருட்சம்: வன்னி
தீர்த்தங்கள்: மகாமக குளம்,பொற்றாமரை குளம்,காசிப தீர்த்தம்,சக்கர தீர்த்தம்,மதங்க தீர்த்தம்,பகவத் தீர்த்தம்
மூர்த்திகளின் பெயர்கள்
ஆதிகும்பேசுவார். அமுதகும்பேஸ்வரர் அமுதேசர் உலகிற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதி கும்பேசுவரர் என்றும் நிறைந்த சுவையுடைய அமுதத்தில் இருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை “குழகன்” என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பாள் எய்தபோது கிரதாமூர்த்தி என்ற (வேடர்) பெயர் பெற்றார்.
மகாபிரளயத்திற்கு பிறகு படைப்பு தொழிலை பிரம்மதேவன் தொடங்குவதற்கு இறைவன் இத்தளத்தில் எழுந்தருளிய லிங்கத்திற்குள் உறைந்து சுயம்பு வடிவானார். இத்தலம் உயிர் படைப்பின் தொடக்க இடமாதலின் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலத்தை அடைதல் பிறவி கடமையாகும்.
எந்த ஒன்றிற்கும் மூலமே சிறப்புடையது. உயிர்களின் தோற்ற மூலம் ஆகிய இத்தலம் மற்ற தலங்களுக்கெல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது அன்றி புராணப்படி மகா பிரளயத்திற்கு பிறகு நிலவுலகில் தோன்றிய முதற் தலம் இதுவே.
அம்பாள்: மங்களநாயகி,மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தால், வளர்மங்கை.
தம்மை அன்போடு தொழுவாருக்கு திவ்ய மங்கலம் அருளும் ஆட்சியமையால் “மங்களநாயகி” என்றும், சக்தி பீடங்களில் ஒன்றான மந்திர பீடத்தில் விளங்குவதால் “மந்திர பீடேஸ்வரி” என்றும் தம் திருவடிகள் அடைந்தாருக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் தருவதாக “மந்திரபீட நலத்தால்” என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் தம்மை வணங்குவோரின் நோய்களை போக்க செய்வதால் “நோயறுக்கும் பரை” என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர் மங்கை என்றும் தேவாரத்தில் குறிக்கின்றார்
இறைவன் திருச்செங்கோட்டு தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு வழங்கியது போன்று இறைவர் இத்தளத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திர பீடேஸ்வரியாக திகழ்கிறாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து இந்தியாவிலுள்ள சக்தி பீடங்களுக்கும் முதன்மையான சக்தி பீடம் ஆகிய 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாளிக்கின்றாள்.
அம்பாலின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சி முடிவு வரை 51 சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. இவற்றுள் மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவம் மட்டுமே கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.
கோவில் இருப்பிடம்